என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சதம் விளாசிய ரிஷப் பண்ட், கே.எல் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்த LSG உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா
- 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது.
- பண்ட் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தினார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன.
தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 96 ஓவர் முடிவில் 364 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் (118) மற்றும் கேஎல் ராகுல் (137) இருவரும் சதமடித்து அசத்தினர். குறிப்பாக பண்ட் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தினார்.
இதனையடுத்து, 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய ரிஷப் பண்ட், கே.எல் ராகுலுக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2024 ஐபிஎல் சீசனில் லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல் ராகுலை மைதானத்தில் வைத்தே சஞ்சீவ் கோயங்கா திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் இருந்து கே.எல் ராகுல் விலகினார். ரிஷப் பண்ட் லக்னோ அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.






