search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Raksha Bandhan"

  • திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரியில் ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது.
  • நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஓட்டல் மேனேஜ் மென்ட் துறை பேராசிரியர் செந்தில் செய்திருந்தார்.

  திருமங்கலம்

  திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரியில் ரக்ஷா பந்தன் விழா கல் லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவில் அவர் பேசுகை யில், சகோதர, சகோதரிக்கு இடையேயான உறவு பந் தத்தை மென்மேலும் இணைக்கவும், பலப்படுத் தும் பண்டிகையாகக் கொண்டாடப்படுவது தான் ரக்ஷாபந்தன் விழா.

  இப்பண்டிகையை, 'ராக்கி' என்றும் அழைப்பர் எனவும், இத்திருநாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட் டில் ஒரு புனிதமான மற்றும் மங்களகரமான கயிறைக் கட்டுவர் என்றும் ரக்ஷா பந்தன் என்றால் 'பாதுகாப்பு பிணைப்பு' என்றும், 'பாது காப்பு பந்தம்' என்றும் பொருள் எனவும் பேசினார்.

  இதையடுத்து திருமங்கலம் பிரம்ம குமாரிகள் அமைப் பச் சேர்ந்த புனிதா, கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிருக்கு ராக்கி கயிறு கட்டினார். அப்போது அவர் பேசுகையில், தீய விஷயங்கள் மற்றும் தீவி னைகளில் இருந்து சகோ தரர்களைக் காப்பாற்ற வும், அவர்களது நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயு ளுக்காக சகோதரிகள் பிரார்த்தனை செய்வதற்காகவும் இந்தப் பண்டிகை கொண்டாடப்ப டுகிறது எனவும் கூறினார்.

  பின்பு, நிர்வாக மேலாண் மைத்துறை இயக்குனர் டாக்டர். நடேசபாண்டியன், மேலாண்மை துறை பேரா சிரியர் டாக்டர் நாசர் மற்றும் பேராசிரியர்கள் தங்கபாண்டியன், திருப்பதி, சிங்கராஜா, ராமுத்தாய், கார்த்திகா, மணிமேகலை, ஜோதி, ஆறுமுக ஜோதி, முதல்வர் அலுவலக ஊழி யர் பிரியங்கா உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோருக்கு ராக்கி கயிறு அணிவிக்கப் பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட் டினை ஓட்டல் மேனேஜ் மென்ட் துறை பேராசிரியர் செந்தில் செய்திருந்தார்.

  • சகோதரிகளை பாதுகாக்கும் உறுதி மொழி எடுக்கும் விழாவாக ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது
  • சகோதரரர்கள் கை மணிக்கட்டில் சகோதரிகள் ராக்கி கயிறு கட்டுவார்கள்

  இந்தியாவில் நேற்று ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சகோதரர் மற்றும் சகோதரராக நினைக்கும் ஆண்கள் கைகளின் மணிக்கட்டில் பெண்கள், சிறுமிகள், மாணவிகள் ராக்கி கயிறு கட்டுவதாகும். இவ்வாறு கட்டிவிடும் பெண்களுக்கு சசோதரர்கள் பரிசு வழங்குவது வழக்கம்.

  இது வெறும் கயிறு கட்டுதல், பரிசு வழங்கும் சம்பிரதாயம் இல்லை. அந்த பெண், சகோதரர் தனது வாழ்க்கைக்கு துணையாகவும், கடைசி மூச்சு வரை வளர்ப்பதாகவும் எண்ணுவார். ஆண்களும் இதுபோன்று கருத வேண்டும் என்பதுதான்.

  ஆனால், ஒடிசா உயர்நீதிமன்றத்தில் ரக்ஷா பந்தன் தினத்தன்று சகோதரரால் கற்பழிக்கப்பட்டு, கர்ப்பம் அடைந்த சகோதரி குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி எஸ்.கே. சாஹூ விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கும் நிலை ஏற்பட்டது.

  மேல்முறையீட்டான இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு 20 ஆண்டுகள் தண்டனையுடன், 40 ஆயிரம் ரூபாய் அபாரம் விதித்தும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

  இதுகுறித்து நீதிபதி தனது கருத்தில் ''சகோதரிக்கு சகோதரன் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாகவும், கடைசி மூச்சு வரை உன்னை வளர்ப்பேன் என்றும் உறுதிகொள்ளும் மங்களரமான நாள் அன்னு இதுபோன்ற முரண்பாடான வழக்கை கேட்பதும், அதற்கு தீர்ப்பு வழங்குவதும் அதிர்ச்சியாக இருக்கிறது" என்றார்.

  மல்காங்கிரி சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த 2018 முதல் 2019 வரை தங்கையை தொடர்ந்து கற்பழித்ததாகவும், அதன்விளைவாக அந்த சிறுமி தனது 14 வயதில் கர்ப்பமானதாகவும் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.

  • ஆன்லைன், டியூசன் மூலம் பாட்னாவில் பிரபலம்
  • ஆயிரக்கணக்கான பெண்கள் கூடியதால் வியப்பு

  பீகார் மாநிலம் பாட்னாவில் ஆன்லைன் மூலமாகவும், டியூசன் மூலமாகவும் மாணவ- மாணவிகளுக்கு பாடம் எடுத்து வருபவர் கான் என்ற ஆசிரியர். இவர் தனது அர்ப்பணிப்பு மூலம் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பான முறையில் கல்வி கற்று கொடுத்து வருகிறார்.

  இதனால் பாட்னாவில் பிரபலமான திகழ்ந்து வருகிறார். நேற்று ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சகோதரிகள் எனது மணிக்கட்டில் ராக்கி கயிறு கட்ட வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

  இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பெண்கள், மாணவிகள், சிறுமிகள் திரண்டு. கான் மணிக்கட்டில் ராக்கி கயிறுகளை கட்டினர். இதனால் அவரது கை முழுவதும் ராக்கி கயிறுகளாக காட்சியளித்தன. சுமார் 7 ஆயிரம் பெண்கள் தனது மணிக்கட்டில் ராக்கி கயிறு கட்டியதாக கான் தெரிவித்துள்ளார். மேலும், இது உலக சாதனை என்று தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்டு வீடியோ வைரலாகி வருகிறார்.

  • நாடு முழுக்க ரக்ஷா பந்தன் கொண்டாட்டங்கள் கலைகட்டியது.
  • பெண்கள் தாங்கள் சகோதரர்களாக கருதும் ஆண்களுக்கு ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர்.

  சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் தினத்தையொட்டி இன்று நாடு முழுவதும் பெண்கள் தாங்கள் சகோதரர்களாக கருதும் ஆண்களுக்கு ராக்கி கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர்.

  நாடு முழுக்க ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஜனாதிபதி மாளிகையில் ரக்ஷா பந்தன் கொண்டாடினார். இந்த ஆண்டு ரக்ஷா பந்தனுக்கு பல்வேறு பள்ளிகள் மற்றும் நிறுவனங்களை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் மாணவர்களை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து, அர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடினார் திரவுபதி முர்மு.

  ஜனாதிபதி மாளிகையில், திரவுபதி முர்முவின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் தொடர்பான அறிவிப்பு மற்றும் புகைப்படங்கள், குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் ( முன்பு டுவிட்டர்) தளத்தில் டுவீட் செய்யப்பட்டு உள்ளது.

  • தமிழகத்திலும் ரக்‌ஷா பந்தன் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.
  • இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு, மற்றும் போக்குவரத்து சட்டம்- ஒழுங்கு காவலர்களுக்கு ராக்கி கயிறு கட்டப்பட்டது.

  சென்னை:

  சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் தினத்தையொட்டி இன்று நாடு முழுவதும் பெண்கள் தாங்கள் சகோதரர்களாக கருதும் ஆண்களுக்கு ராக்கி கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர்.

  தமிழகத்திலும் ரக்ஷா பந்தன் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. சென்னை வேப்பேரி ஜெயின் கல்லூரி மாணவிகள் இன்று வேப்பேரி போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று ரக்ஷா பந்தனையொட்டி காவலர்களின் கைகளில் ராக்கி கயிற்றை கட்டி மகிழ்ந்தனர்.

  நெற்றியில் திலகமிட்டு, இனிப்பு வழங்கி அவர்கள் தங்களது சகோதர பாசத்தை வெளிப்படுத்தினார்கள்.

  வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு, மற்றும் போக்குவரத்து சட்டம்- ஒழுங்கு காவலர்களுக்கு ராக்கி கயிறு கட்டப்பட்டது. இதை தொடர்ந்து காவலர்களும் மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

  • ஆவணி மாதம் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகை
  • சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் பெண்கள் ராக்கி கயிறு கட்டுவது முக்கிய நிகழ்ச்சி

  ஜம்மு- காஷ்மீர் மாநிலம் இந்திய எல்லையில், ஆக்னூர் செக்டாரில் பாதுகாப்புப் பணியில ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு, ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பெண்கள் ராக்கி கயிறு கட்டினர்.

  ரக்சா பந்தன் என்பது ஆவணி மாதம் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் (ராக்கி கயிறு) கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி.

  இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம்.

  • டிக்கெட் கவுன்டர்களில் நெரிசலைத் தவிர்க்க, QR குறியீடு அடிப்படையிலான டிக்கெட்டு
  • கூட்ட நெரிசலைக் குறைக்க கூடுதல் காத்திருப்பு ரெயில்களும் சேவையில் சேர்க்கப்படும்

  ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக டெல்லி மெட்ரோ ரெயில் இன்று கூடுதலாக 106 முறை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  மேலும், டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில், பயணிகளின் கூடுதல் நெரிசலைப் பூர்த்தி செய்ய கூடுதல் டிக்கெட் கவுன்டர்கள் இயக்கப்படுகிறது. கூடுதலாக டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) பணியாளர்களும் நிலையங்களில் நிறுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

  தேவைப்பட்டால், கூட்ட நெரிசலைக் குறைக்க கூடுதல் காத்திருப்பு ரெயில்களும் சேவையில் சேர்க்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

  டிக்கெட் கவுன்டர்களில் நெரிசலைத் தவிர்க்க, QR குறியீடு அடிப்படையிலான டிக்கெட்டுகளை வாங்க, டிஎம்ஆர்சி டிராவல் மொபைல் செயலியைப் பயன்படுத்துமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

  பயணிகளுக்கு உதவவும் வழிகாட்டவும் முக்கிய மெட்ரோ நிலையங்களில் காவலர்கள் மற்றும் வாடிக்கையாளர் வசதி முகவர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • ரக்‌ஷா பந்தன் பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது.
  • ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  புதுடெல்லி:

  ரக்ஷா பந்தன் பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது.

  இந்நிலையில், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ரக்ஷா பந்தன் பண்டிகை நம் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நாள். எரிவாயு விலை குறைப்பு எனது குடும்பத்தில் உள்ள சகோதரிகளின் வசதியை அதிகரித்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும். என்னுடைய ஒவ்வொரு சகோதரியும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும், இதுவே என் விருப்பம் என பதிவிட்டுள்ளார்.

  • மாணவ-மாணவிகளிடையே சகோதரத்துவ உணர்வை மேம்படுத்துவதற்காக ரக்‌ஷாபந்தன் விழா கொண்டாடப்பட்டது.
  • மாணவிகள் தன்னுடன் பயிலும் மாணவர்களுக்கு ராக்கி கயிறு கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

  ஒட்டன்சத்திரம்:

  ஒட்டன்சத்திரம் அக்‌ஷ்யா அகாடமி சி.பி.எஸ்.இ மெட்ரிக் மாணவ-மாணவிகளிடையே சகோதரத்துவ உணர்வை மேம்படுத்துவதற்காக ரக்‌ஷாபந்தன் விழா கொண்டாடப்பட்டது.

  பள்ளி மாணவர்கள் தங்களுடன் படிக்கும் சக மாணவிகளுக்கு பாதுகாப்பாகவும் உறுதுணையாகவும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மாணவிகள் தன்னுடன் பயிலும் மாணவர்களுக்கு ராக்கி கயிறு கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

  மாணவர்கள் தங்களுக்கு ராக்கி கட்டிய சகோதரிகளுக்கு இனிப்பு வழங்கினார்கள் . விழாவில் பள்ளியின் சேர்மன் புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபிராமன், முதல்வர் இன்னாசிமுத்து, நிர்வாக மேலாண்மையாளர்கள் செல்வி, சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காபு மணி பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி இறந்தார்.
  • விபத்தில் பலியான காபு மணிக்கு சிலை வடிக்க வேண்டும் என அவரது சகோதர, சகோதரிகள் முடிவு செய்தனர்.

  திருப்பதி:

  ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் சங்கராபுரம் மண்டலம் கட்சி பிடி பகுதியை சேர்ந்தவர் காபு மணி (வயது 29). இவருக்கு வரலட்சுமி என்ற அக்காவும், சிவைய்யா என்கிற அண்ணன் மற்றும் தம்பி ராஜா உள்ளனர்.

  இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காபு மணி பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி இறந்தார்.

  விபத்தில் பலியான காபு மணிக்கு சிலை வடிக்க வேண்டும் என அவரது சகோதர, சகோதரிகள் முடிவு செய்தனர்.

  இதையடுத்து காபு மணிக்கு 7 அடி உயரத்தில் உலோக சிலை வடித்தனர். ரக்சா பந்தன் விழாவையொட்டி அவரது அக்கா வரலட்சுமி, அண்ணன் சிவைய்யா மற்றும் தம்பி ராஜா ஆகியோர் காபுமணி உருவ சிலைக்கு ஆள் உயர மாலை அணிவித்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

  அப்போது அவர்கள் தன்னுடைய தங்கை பைக் விபத்தில் இறந்து விட்டதால் பொதுமக்கள் வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணிந்து கவனமாக வாகனத்தில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர்.

  பின்னர் காபுமணி சிலையை தங்களது வீட்டிற்கு முன்பாக பிரதிஷ்டை செய்தனர்.

  தங்கை மீது கொண்ட பாசத்தால் அவருக்கு சிலை அமைத்து ஊர்வலமாக கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.