என் மலர்
நீங்கள் தேடியது "ராக்கி"
- 33 வயதான சுர்ஜித் தனது மாமா வீட்டுக்கு சென்றுள்ளார்.
- மாமாவின் மகள் சுர்ஜித்துக்கு ராக்கி கட்டிவிட்டுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ரக்ஷா பந்தன் அன்று தனது கையில் ராக்கி கட்டிய தங்கை முறை உறவு கொண்ட 14 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
33 வயதான சுர்ஜித் தனது மாமா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவனது மாமாவின் மகள் சுர்ஜித்துக்கு ராக்கி கட்டிவிட்டுள்ளார். இதனையடுத்து இரவில் மது அருந்திய சுர்ஜித் போதையில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான். பின்னர் அவளது உடலை அந்த அறையில் தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை போல சித்தரித்துள்ளான்.
அடுத்த நாள் தனது மகள் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியைடந்த அவளது அப்பா போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
முதலில் இதை தற்கொலை என நினைத்த போலீசார் சிறுமியின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். அப்போது தான் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொள்ளப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் உறவினர்களிடம் விசாரித்த போலீசார் முன்னுக்கு பின் முரணாக பேசிய சுர்ஜித்தை கைது செய்து விசாரித்தனர். பின்னர் சுர்ஜித் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.
- போக்குவரத்து விதிகளை மீறிய ஆண்களை மடக்கிப்பிடித்து ராக்கி கயிறு கட்டினார்கள்.
- அபராதத்தை போக்குவரத்தை கவனிக்கும் ஆண் போலீசார் விதித்தனர்.
புதுடெல்லி:
வடமாநிலங்களில் நேற்று ரக்ஷா பந்தன் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தலைநகர் டெல்லியில் இந்த பண்டிகையை முன்னிட்டும் பணிக்கு வந்திருந்த பெண் போலீசார் சாலைகளில் ஒரு நூதனத்தை கடைப்பிடித்தனர்.
ஹெல்மெட் அணியாமல் இருத்தல், சிக்னல் தாண்டுதல் போன்ற போக்குவரத்து விதிகளை மீறிய ஆண்களை மடக்கிப்பிடித்து ராக்கி கயிறு கட்டினார்கள். அவர்களது கையில் சுதந்திர தினத்தை நினைவுப்படுத்தி தேசியக்கொடியையும் வழங்கினர். இப்படியெல்லாம் செய்ததால் அவர்களுக்கு அபராதம் கிடையாது என்றில்லை. அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் அதனை, போக்குவரத்தை கவனிக்கும் ஆண் போலீசார் விதித்தனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கை டெல்லி சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக இருந்தது.
- கடந்த 3 நாட்களில், 20,000 பெண்கள் ராக்கி கட்டியுள்ளனர்.
- மேயர் உமேஷ் கவுதம் அதிக ராக்கி கட்டியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
பரேலி:
உத்தரபிரதேச மாநிலம், பரேலி மாநகராட்சி மேயர் டாக்டர் உமேஷ் கவுதம். இவருக்கு ரக்ஷா பந்தனை முன்னிட்டு பெண்கள் ராக்கி கட்டினர். கடந்த 3 நாட்களாக, நகரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து பெண்கள் அவருக்கு ராக்கி கட்ட வந்தனர்.
கடந்த 3 நாட்களில், 20,000 பெண்கள் ராக்கி கட்டியுள்ளனர். இதன் மூலம் மேயர் உமேஷ் கவுதம் அதிக ராக்கி கட்டியவர் என்ற சாதனையை படைத்துள்ளார். ராக்கி கட்டிய பெண்களுக்கு பரிசு தருவதாக அவர் உறுதியளித்தார்.
தனது சகோதரிகளின் நலன் தனது கடமை என்று அவர் கூறினார். ராக்கி கட்டும்போது, சகோதரர்கள் இல்லாத சில பெண்கள் உணர்ச்சிவசப்பட்டனர்.
உமேஷை தங்கள் சொந்த சகோதரனாகக் கருதுவதாக அவர்கள் கூறினர். இதனால் உமேஷும் உணர்ச்சிவசப்பட்டார். அவரது கண்கள் ஆனந்த கண்ணீரில் நனைந்தன.
கரூர்,
கரூர் பரணி பார்க் சாரணர் மாவட்டம் மற்றும் தேசிய மாணவர் படை சார்பாக இராணுவ வீரர்களுக்கு அனுப்புவதற்காக ஒரு லட்சம் திருக்குறள் ராக்கி தயாரிக்கும் பணி பரணி பள்ளி வளாகத்தில் தொடங்கியது. 7வது ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்விற்கு பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் மோகனரெங்கன், செயலர் பத்மாவதி மோகனரெங்கன் தலைமை தாங்கினர். தேசிய மாணவர் படை தமிழ்நாடு இரண்டாவது பட்டாலியன் தலைமை அதிகாரி லெப்டிணன்ட் கர்னல் அருண் குமார் ஒரு லட்சம் திருக்குறள் ராக்கி தயாரிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.இது குறித்து தமிழ்நாடு மாநில சாரணர் உதவி ஆணையர் ராமசுப்ரமணியன் கூறுகையில், தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்த நற்செயலை செய்வதில் பரணி பார்க் கல்விக் குழுமம் மிகவும் பெருமைக்கொள்கிறது. கடந்த 2017 முதல், கரூர் பரணி பார்க் கல்வி நிறுவனங்களின் சார்பாக எல்லையைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கு ராக்கிகளை அனுப்பி வருகிறோம். 2017-ல் 15 ஆயிரம் ராக்கிகள், 2018-ல் 16 ஆயிரம் ராக்கிகள், 2019-ல் ஒரு லட்சம் ராக்கிகள் மற்றும் 2020, 2021-ல் ஒவ்வொரு ஆண்டும் 25 ஆயிரம் ராக்கிகள் அனுப்பப்பட்டன. (கோவிட் தொற்று நோய் இருந்தபோதிலும் அனுப்பப்பட்டன). கடந்த 2022-ம் ஆண்டு 1 லட்சத்து 50 ஆயிரம் ராக்கிகள் அனுப்பப்பட்டன. அதற்காக இந்தியக் குடியரசுத் தலைவர் புது தில்லி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு நேரில் அழைத்துப் பாராட்டியது மிகவும் உற்சாகமூட்டுவதாக அமைந்தது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு இந்திய, முப்படைகளுக்கு நமது மகிழ்ச்சி மற்றும் நன்றியின் அடையாளமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஒரு லட்சம் திருக்குறள் ராக்கிகளை தயார் செய்து வருகிறோம். திருக்குறள் எண் 766ஐ 18 இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து பதித்துள்ளோம். என்று அவர் கூறினார்.இந்நிகழ்வில் பரணி பார்க் சாரணர் மாவட்ட செயலர் பிரியா, பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் சேகர் பரணி பார்க் தேசிய மாணவர் படை அலுவலர் செல்வராசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- திரவுபதிக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று கிருஷ்ணர் வாக்குறுதி அளித்தார்.
- சூரியன் அஸ்தமன காலத்திற்கு பிறகு ரக்ஷாபந்தன் கொண்டாடக்கூடாது
இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக ரக்ஷாபந்தன், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களும் கொண்டாடலாம். ரக்ஷாபந்தன் நாளில், சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறி, நேசத்தை உறுதி செய்து சகோதரத்துவத்தை கொண்டாடுகிறார்கள்.
அதன் அடையாளமாக சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்டி, அவர்களின் நெற்றியில் திலகம் பூசிவிடுவார்கள். சகோதரர்கள் தங்கள் சகோதரிகளை பாதுகாப்பதாகவும், அவர்களை நேசிப்பதாகவும் பரிசுப்பொருட்களை கொடுத்து உறுதியளிக்கிறார்கள்.
மகாபாரதத்தில் ஒருமுறை கிருஷ்ணரின் கையில் இருந்து வழிந்த ரத்தத்தை தடுப்பதற்காக திரெளபதி தனது புடவையை கிழித்து கட்டு போட்டாள். இது கிருஷ்ணரின் மனதை நெகிழச்செய்தது. அன்று முதல் திரெளபதியை தனது சகோதரியாக ஏற்று, எப்போதும் அவளுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என கிருஷ்ணர் வாக்குறுதி அளித்தார்.
அதன்படியே கவுரவர்கள் திரௌபதியை துகிலுரிக்க முயன்றபோது அவள் கிருஷ்ணா என குரல் எழுப்ப, அவளது மானத்தை காப்பாற்றினார் கிருஷ்ணர். அதன் நினைவாகவே ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுகிறது.
நல்ல நேரம்
பந்தரகல் எனப்படும் முகூர்த்த நேரத்திலேயே சகோதரிகள் தங்களின் சகோதரர்கள் கைகளில் ராக்கி கட்ட வேண்டும். மற்ற நேரங்களில் ராக்கி கட்டுவது அபசகுணமாகக் கருதப்படுகிறது. பந்தரகல் இந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ந் தேதி இரவு 9.02 மணிக்கே தொடங்குகிறது. அதனால் இந்த சமயத்தில் மட்டுமே ராக்கி அணிவிக்க வேண்டும்.
அதேபோல் அக்டோபர் 31-ந்தேதி காலை 6.20 மணிமுதல் 7.50 மணிவரையிலான நேரமும், அதன்பிறகு காலை 11.10 மணிமுதல் மாலை 3.50 மணி வரையிலான நேரமும் ராக்கி அணிவிப்பதற்கான நல்ல நேரமாக சொல்லப்பட்டுள்ளது.
பொதுவாக சூரியன் அஸ்தமன காலத்திற்கு பிறகு ரக்ஷாபந்தன் விழா கொண்டாடக் கூடாது என்பது ஐதீகம். ஒருவேளை இந்த முகூர்த்த நேரத்தில் தங்களின் சகோதரருக்கு ராக்கி அணிவிக்க முடியாதவர்கள் ஆகஸ்ட் 31-ந் தேதி மாலை 5.30 மணிமுதல் 7.05 மணி வரையிலான நேரத்தில் ராக்கி அணிவிக்கலாம். ஆகஸ்ட் 30-ந் தேதி சகோதரர்களுக்கு ராக்கி அணிவிக்க நினைப்பவர்கள் இரவு 9.05 மணி முதல் 10.48 மணி வரையிலான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.








