என் மலர்
நீங்கள் தேடியது "Draupadi"
- திரௌபதி 2 படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.
- வரலாற்று புனைவாக இந்த படம் உருவாகி உள்ளது.
2016 ஆம் ஆண்டு வெளியான "பழைய வண்ணாரபேட்டை" படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி.
இதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும் வெற்றிப் படமாக அமைந்தது.
கடைசியாக செல்வராகவன் நடிப்பில் வெளியான "பகாசூரன்" திரைப்படத்தை மோகன் ஜி இயக்கினார். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் மோகன் ஜி அடுத்து இயக்கியுள்ள படம் திரௌபதி 2. இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார்.இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வரலாற்று புனைவாக இந்த படம் உருவாகி உள்ளது.
ஜன நாயகன் படம் பொங்கல் விடுமுறையை ஒட்டி வெளியாகதாததால் திரௌபதி 2 படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திரௌபதி 2 படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "திரௌபதி 2 திரைப்படம் சுபாஷ் சந்திர போஸின் பிறந்ததினமான ஜனவரி 23 அன்று வெளியாகிறது. பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்ட எங்களின் முதல் படைப்பு திரௌபதி 2 திரைப்படம், திரையரங்க உரிமையாளர்களின் வேண்டுகோளை ஏற்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 23ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் சார்பாக தெரிவித்து கொள்கிறேன்.
எங்களின் இந்த முடிவை பெரியமனதுடன் ஏற்று எப்போதும் போல உங்களின் அன்பையும் ஆதரவையும் தருமாறு ரசிக பெருமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
திரெளபதி 2 மிகப் பெரிய உழைப்பு. பலரின் கனவு. சரியான முறையில், அதிக திரையரங்குகளில் உங்களை சேர வேண்டும் என்ற ஒரே நோக்கில் எடுக்கப்பட்ட முடிவு.. 23 ம் தேதி இதே ஆதரவை தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். பொங்கல் அன்று வெளியாகும் திரைப்படங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கையை பகிர்ந்த மோகன் ஜி, "திரெளபதி2 மிகப் பெரிய உழைப்பு.. பலரின் கனவு. சரியான முறையில், அதிக திரையரங்குகளில் உங்களை சேர வேண்டும் என்ற ஒரே நோக்கில் எடுக்கப்பட்ட முடிவு.. 23ம் தேதி இதே ஆதரவை தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.. பொங்கல் அன்று வெளியாகும் திரைப்படங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
- ஜன நாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்காத நிலையில், இந்தப் படத்துக்கு எளிதாகக் கொடுக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டு வெளியான "பழைய வண்ணாரபேட்டை" படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி.
இதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும் வெற்றிப் படமாக அமைந்தது.
கடைசியாக செல்வராகவன் நடிப்பில் வெளியான "பகாசூரன்" திரைப்படத்தை மோகன் ஜி இயக்கினார். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் மோகன் ஜி அடுத்து இயக்கியுள்ள படம் திரௌபதி 2. இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார்.இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வரலாற்று புனைவாக இந்த படம் உருவாகி உள்ளது. படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, ஜன நாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்காத நிலையில், இந்தப் படத்துக்கு எளிதாகக் கொடுக்கப்பட்டது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது.
2016 ஆம் ஆண்டு வெளியான "பழைய வண்ணாரபேட்டை" படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. இதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும் வெற்றிப் படமாக அமைந்தது.
கடைசியாக செல்வராகவன் நடிப்பில் வெளியான "பகாசூரன்" திரைப்படத்தை மோகன் ஜி இயக்கினார். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
மோகன் ஜி அடுத்து இயக்கும் படம் திரௌபதி 2. இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 23ந் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் "எம்கோனே" பாடல் அண்மையில் வெளியானது. இதனை சின்மயி பாடி இருந்தார். இதற்கிடையில், பாடியதற்காக சிம்மயிக்கு எதிராக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்தன.
இதனையடுத்து மோகன் ஜி படத்தில் பாடியதற்காக சின்மயி மன்னிப்புக்கேட்டிருந்தார். அவர் வெளியிட்ட பதிவில், "எம்கோனே பாடல் பாடியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஜிப்ரானை 18 வருடங்களாக எனக்கு தெரியும்.
அவரது அலுவலகத்தில் இருந்து இந்த பாடலை பாட அழைத்தபோது, வழக்கம் போல சென்று பாடினேன். அப்போது ஜிப்ரான் இல்லை. இப்போதுதான் எல்லாமே புரிய ஆரம்பிக்கிறது. முன்பே தெரிந்திருந்தால் ஒருபோதும் பாடியிருக்க மாட்டேன். எனக்கும் அந்த கொள்கைகளுக்கும் நிறைய முரண் உள்ளது. இதுதான் முழு உண்மை" என்று தெரிவித்தார்.
சின்மயி மன்னிப்பு கேட்ட நிலையில் மோகன் ஜி பரபரப்பு பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ``என்னுடன் திரௌபதி 2 படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் அல்லது யாரையும் குறிவைத்து தாக்க வேண்டாம். என் படம் பேசுவது என் சொந்த சிந்தனை.
என்னுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ இணைந்து பணியாற்றும் எந்த நபரையும் குறிவைத்து தாக்குவது கோழைத்தனமாகும்'' என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், 'திரௌபதி 2' படத்தில் சின்மயி பாடிய பாடலிலிருந்து அவரது குரலை நீக்கி, வேறு ஒரு பாடகியைப் பாட வைக்க முடிவு செய்துள்ளதாக இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
- திரவுபதிக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று கிருஷ்ணர் வாக்குறுதி அளித்தார்.
- சூரியன் அஸ்தமன காலத்திற்கு பிறகு ரக்ஷாபந்தன் கொண்டாடக்கூடாது
இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக ரக்ஷாபந்தன், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களும் கொண்டாடலாம். ரக்ஷாபந்தன் நாளில், சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறி, நேசத்தை உறுதி செய்து சகோதரத்துவத்தை கொண்டாடுகிறார்கள்.
அதன் அடையாளமாக சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்டி, அவர்களின் நெற்றியில் திலகம் பூசிவிடுவார்கள். சகோதரர்கள் தங்கள் சகோதரிகளை பாதுகாப்பதாகவும், அவர்களை நேசிப்பதாகவும் பரிசுப்பொருட்களை கொடுத்து உறுதியளிக்கிறார்கள்.
மகாபாரதத்தில் ஒருமுறை கிருஷ்ணரின் கையில் இருந்து வழிந்த ரத்தத்தை தடுப்பதற்காக திரெளபதி தனது புடவையை கிழித்து கட்டு போட்டாள். இது கிருஷ்ணரின் மனதை நெகிழச்செய்தது. அன்று முதல் திரெளபதியை தனது சகோதரியாக ஏற்று, எப்போதும் அவளுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என கிருஷ்ணர் வாக்குறுதி அளித்தார்.
அதன்படியே கவுரவர்கள் திரௌபதியை துகிலுரிக்க முயன்றபோது அவள் கிருஷ்ணா என குரல் எழுப்ப, அவளது மானத்தை காப்பாற்றினார் கிருஷ்ணர். அதன் நினைவாகவே ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுகிறது.
நல்ல நேரம்
பந்தரகல் எனப்படும் முகூர்த்த நேரத்திலேயே சகோதரிகள் தங்களின் சகோதரர்கள் கைகளில் ராக்கி கட்ட வேண்டும். மற்ற நேரங்களில் ராக்கி கட்டுவது அபசகுணமாகக் கருதப்படுகிறது. பந்தரகல் இந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ந் தேதி இரவு 9.02 மணிக்கே தொடங்குகிறது. அதனால் இந்த சமயத்தில் மட்டுமே ராக்கி அணிவிக்க வேண்டும்.
அதேபோல் அக்டோபர் 31-ந்தேதி காலை 6.20 மணிமுதல் 7.50 மணிவரையிலான நேரமும், அதன்பிறகு காலை 11.10 மணிமுதல் மாலை 3.50 மணி வரையிலான நேரமும் ராக்கி அணிவிப்பதற்கான நல்ல நேரமாக சொல்லப்பட்டுள்ளது.
பொதுவாக சூரியன் அஸ்தமன காலத்திற்கு பிறகு ரக்ஷாபந்தன் விழா கொண்டாடக் கூடாது என்பது ஐதீகம். ஒருவேளை இந்த முகூர்த்த நேரத்தில் தங்களின் சகோதரருக்கு ராக்கி அணிவிக்க முடியாதவர்கள் ஆகஸ்ட் 31-ந் தேதி மாலை 5.30 மணிமுதல் 7.05 மணி வரையிலான நேரத்தில் ராக்கி அணிவிக்கலாம். ஆகஸ்ட் 30-ந் தேதி சகோதரர்களுக்கு ராக்கி அணிவிக்க நினைப்பவர்கள் இரவு 9.05 மணி முதல் 10.48 மணி வரையிலான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
- நம் வார்த்தைகள் கூட, பின்னால் நடக்கும் சில விளைவுகளுக்கு பொறுப்பு.
- பேசும் வார்த்தைகளில் விஷத்தைக் கக்கும் ஒரே இனம் மனித இனம் தான்.
பாரதப் போர் நிறைவு பெற்றது. திரவுபதி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தனக்கு மிகவும் வயதானதைப் போல உணர்ந்தாள். அஸ்தினாபுரம் நகரைச் சுற்றி கைம்பெண்கள் அதிகமாக இருந்தனர். ஒரு சில ஆண்கள் மட்டுமே தெருக்களில் தென்பட்டனர்.
ஆதரவற்ற நிலையில் இருந்த பிள்ளைகள் பலரும், வீதிகளில் சுற்றித் திரிவதைக் கண்டு திரவுபதி மனம் வருந்தினாள். ஒரு போர்க்களம் மக்கள் வாழ்வை புரட்டிப் போட்டுவிட்டதை அவள் உணர்ந்தாள். அஸ்தினாபுரத்தின் அரண்மனையில் நின்று ஓரிடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அவள் நின்ற அறைக்குள் நுழைந்தார் கிருஷ்ணர். அவரைக் கண்ட தும் ஒடோடி வந்து அவர் பாதம் பணிந்து வணங்கினாள். கிருஷ்ணர், அவளின் தலையை தொட்டு ஆசீர்வதித்தார். திரவுபதியோ அழத் தொடங்கினாள்.

திரவுபதி ஆசுவாசப்படுத்திக் கொள்ள நேரம் கொடுத்த கிருஷ்ணர். அங்கிருந்து விலகி ஓரிடத்தில் அமர்ந்தார். பின்னர் அவளிடம் கேட்டார் "திரவுபதி என்ன நடந்து விட்டது?"
"ஒன்றும் நடக்கவில்லையே கிருஷ்ணா!" என்று விரக்தியாக பதிலளித்தாள், திரவுபதி.
கிருஷ்ணரோ, "விதி கொடூரமானது பாஞ்சாலி, நாம் நினைப்பது போல் வேலை செய்யாது! அது அதன் போக்கில் அதனுடைய செயல்களைச் செய்கிறது.
முடிவுகளையும் மாற்றுகிறது. நீ பழிவாங்க நினைத்தாய்... அதில் வெற்றியும் பெற்றுவிட்டாய். உன் பழிவாங்கல் முடிந்தது. துரியோதனனும், துச்சாதனனும் மட்டுமல்ல, கவுரவர்கள் அனைவரும் மடித்துவிட்டனர். நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்! என்றார்.
"சகோதரா.. என் காயங்களை ஆற்ற வந்தீர்களா? அல்லது அதை இன்னும் கிளறி புண்படுத்த வந்தீர்களா?" என்று கோபமாக கேட்டாள் திரவுபதி.

கிருஷ்ணரிடம் என்றும் மாறாத புன்னகை உதித்தது. "திரவுபதி, உண்மை நிலையை உனக்கு உணர்த்தவே வந்தேன். எல்லாம் நமது தொலைநோக்கு பார்வையற்ற செயல்களின் விளைவு என்பதை உணர்த்த வந்தேன்' என்றார். "இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள் கிருஷ்ணா.. அனைத்துக்கும் நான்தான் பொறுப்பா?" என்றாள், திரவுபதி.
"இல்லை திரவுபதி. நீ மட்டுமே காரணம் இல்லை.
ஆனால், உன்செயல்களில் நீ கொஞ்சம் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தால், இவ்வளவு துன்பங்கள் நேர்ந்திருக்காது''
"நான் என்ன செய்திருக்க முடியும் கிருஷ்ணா?"
நீ நிறைய செய்திருக்க முடியும் பாஞ்சாலி, உனது சுயம்வரம் நடந்தபோது கர்ணனை அவமானப்படுத்தாமல் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பளித்து இருந்தால், ஒருவேளை முடிவு வேறுவிதமாக இருந்திருக்கக் கூடும்.
குந்தி உன்னை ஐந்து பேருக்கு மனைவியாகும்படி கட்டளையிட்டதை, ஏற்றுக் கொள்ளாமல் இருந்தாலும், முடிவு வேறுவிதமாக இருந்திருக்கும்.
உன் அரண்மனையில் துரியோதனனை பார்வையற்றவரின் மகன்கள் குருடர்கள்' என்று அவமதித்தாய், அவ்வாறு நீ சொல்லாமல் இருந்திருந்தால். துரியோதன சபையில் உனக்கு நேர்ந்த அவமானத்தை தவிர்த்திருக்கலாம்.
நம் வார்த்தைகள் கூட, பின்னால் நடக்கும் சில விளைவுகளுக்கு பொறுப்பு தான் திரவுபதி. பேசுவதற்கு முன் ஒவ்வொரு வார்த்தையையும் எடைபோடுவது மிகவும் முக்கியமானது. இல்லையெனில், அதன் தீய விளைவுகள் உன்னை மட்டுமல்ல, உனது சுற்றுப்புறத்தையும் மகிழ்ச்சியற்றதாக ஆக்கிவிடும்.

பற்களில் விஷம் இல்லாமலேயே, பேசும் வார்த்தைகளில் விஷத்தைக் கக்கும் ஒரே இனம் மனித இனம் தான். இப்போது உனக்கு புரிகிறதா திரவுபதி?" என்று தன்னுடைய விளக்கத்தை அளித்தார். கிருஷ்ணர்.
நாம் எப்போதும் வார்த்தைகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும். யாருடைய மனதையும் நம் வார்த்தைகள் புண்படுத்திவிடக்கூடாது என்று திரவுபதி உணர்ந்துகொண்டாள்.







