search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mahabharata"

    • ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சவால்கள் நிரம்பியுள்ளன.
    • மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானது.

    மகாபாரத யுத்ததின் போது, கர்ணன் தன் நண்பன் துரியோதனனின், பக்கம் நின்று போரிட்டான். ஆனால் கர்ணனை, பாண்டவர்களின் பக்கம் வந்து விடும்படி கண்ணன் உள்பட பலரும் அழைத்தனர். ஆனாலும் அவன் செல்லவில்லை.

    ஒரு கட்டத்தில், தான் துரியோதனனின் பக்கம் நிற்பதில் என்ன தவறு இருக்கிறது என்ற எண்ணம் அவன் ஆழ்மனதை துளைத்தது. தன்னுடைய இறுதி கட்டத்தில், நெஞ்சில் அம்பு பாய்ந்து, தன் முன் கிருஷ்ணன் விஸ்வரூபமாக காட்சி தருகையில், தன்னுடைய ஆழ்மனதை துளைத்த கேள்விகளை, கண்ணனிடமே கேட்டான், கர்ணன்.

    `கண்ணா.. என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டுவிட்டார். முறைதவறிப் பிறந்த குழந்தை என்ற அவப்பெயருக்கு ஆளானேன். இது என் தவறா?. நான் சத்ரியன் அல்ல என்று கூறி, துரோணாச்சாரியார் எனக்கு கல்வி கற்றுத்தரவில்லை. இது என் தவறா? பரசுராமர் எனக்கு அனைத்தும் கற்றுக் கொடுத்தார். ஆனால் நான் பிராமணன் இல்லை. சத்ரியன் என்று தெரியவந்ததும், நான் படித்த அனைத்தும் மறந்து போகும் என்று சாபமிட்டுவிட்டார். இது என் தவறா?

    ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது. ஆனால் அந்தப் பசுவின் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார். திரவுபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக அவமானப்படுத்தப்பட்டேன். என் தாயாரான குந்தி கூட, இறுதியில் தன்னுடைய மற்ற மகன்களை காப்பாற்றும் நோக்கத்தில்தான் என்னைத்தேடி வந்தார்.

    இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் நான் வஞ்சிக்கப்பட்டபோது, துரியோதனன் ஒருவன்தான் என்னிடம் அன்பு காட்டினான். அவனால் தான் எனக்கு ஒரு கவுரவம் கிடைத்தது. அதனால் அவன் பக்கம் நான் நின்றதில் என்ன தவறு இருக்கிறது?" என்றான், கர்ணன்.

    அதற்கு பதில் அளித்த கிருஷ்ணர், `கர்ணா நீயாவது பரவாயில்லை. ஆனால், நான் ஒரு சிறையில் பிறந்தேன். என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது. நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டேன். நீ சிறுவயதில் இருந்து வாள், ரதங்கள், குதிரைகள், வில், அம்புகள் ஆகியவற்றின் இரைச்சலைக் கேட்டு வளர்ந்தாய். நானோ மாடு, கொட்டில், சாணம், வைக்கோல்களுக்கிடையே வளர்ந்தேன்.

    நடக்க ஆரம்பிக்கும் முன்பே, என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன. நல்ல கல்வி இல்லை, பயிற்சி இல்லை, ஆனால் எல்லோரும் இங்கு நடக்கும் பிரச்சினைகளுக்கு எல்லாம் நான்தான் காரணம் என்கிறார்கள்.

    நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிறபோது, நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில்தான், ரிஷி சாந்தீபனி குருகுலத்தில் சேர்ந்தேன்.

    நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ, விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை, கொடியவர்களிடம் இருந்து நான் காப்பாற்றிய பெண்களை திருமணம் செய்துகொண்டேன்.

    ஜராசந்த்திடம் இருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக, யமுனா நதிக்கரையில் இருந்து தூரமாக என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டி இருந்தது. நான் ஓடிப்போன ஒரு கோழை.

    துரியோதனனுடன் போரிட்ட நீ வெற்றிபெற்றிருந்தால், உனக்கு நிறைய பொருள், நாடு, சேனை, கவுரவம் கிடைத்திருக்கும். ஆனால் பஞ்சபாண்டவருடன் சேர்ந்து யுத்தம் செய்ததால், எனக்கு என்ன கிடைக்கும்? கண்ணன்தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும்.

    கர்ணா ஒன்றை நினைவில் கொள். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சவால்கள் நிரம்பியுள்ளன. வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும், எளிதாகவும் இருப்பதில்லை. ஆனால் மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானது. எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம். எத்தனை முறை நாம் அவமானப்படுத்தப்பட்டோம். எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமல்ல. அந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியம்.

    நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள், நம்மை தவறான பாதையில் செலுத்துவதற்கான உரிமையை பெற்றுத் தருவதில்லை. நம் வாழ்க்கையில் கரடுமுரடான பாதை இருக்கலாம். அவற்றை காயப்படமல் கடப்பது பாதுகைகளால் அல்ல. நாம் கவனமாக எடுத்து வைக்கும் அடிகளால் மட்டுமே.' என்றார். கண்ணன்.

    • சகுனி-துவாபர யுகமே சகுனியாக பிறந்தது.
    • துரியோதனன்-கலியுகமே துரியோதனனாய் பிறந்தது.

     1. கர்ணன்-சூரியன் அம்சம் அல்லது சூரிய அவதாரம்.

    2. அர்ஜுனன் - இந்திரன் அம்சம் அல்லது நரன்.

    3. பீஷ்மர்- பிரபாசன் (அஷ்டவசுகளில் இறுதியானவர்).

    4. கிருபர்-சிவனின் ருத்திரர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்.

    5. சகுனி-துவாபர யுகமே சகுனியாக பிறந்தது.

     6. சாத்தியகி-தேவர்கள் சப்தமருதர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்.

    7. துருபதன்-தேவர்கள் சப்தமருதர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்.

    8. கிருதவர்மன்- தேவர்கள் சப்தமருதர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்.

    9. விராடன்-தேவர்கள் சப்தமருதர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்.

    10. திருதிராஷ்டிரன்-ஹம்சன் என்னும் கந்தர்வராஜன்.

    11. பாண்டு-தேவர்கள் சப்தமருதர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்.

    12. விதுரர்-தர்மதேவதையின் அம்சம்.

    13. துரியோதனன்-கலியுகமே துரியோதனனாய் பிறந்தது.

    14. துச்சாதனன் முதலிய தம்பிகள்-புலஸ்தியர் புத்திரர்களாகிய அரக்கர்கள்.

    15. துரோணர்-பிரகஸ்பதி அவதாரம் (குரு பகவான்).

     16. தர்மன்-யமதர்மன் அம்சம்.

    17. பீமன்-வாயு பகவான் அம்சம்.

    18. அஸ்வத்தாமன் -சிவன் மற்றும் யமன் காமம் மற்றும் கோபத்தில் உருவானவன்.

    19. நகுலன் சகாதேவன் - அஸ்வினி தேவர்கள் அம்சம்.

    20. அபிமன்யு-வர்சஸ் (சந்திரன் மகன்).

    21. பிரதிவிந்தியன், சுகஸோமன், ஸ்ருதகீர்த்தி,சதானிக்கன் கருதசேனன். (பாஞ்சாலி புதல்வர்கள்)- விஸ்வதேவர்கள் கூட்டத்தை

    சேர்ந்தவர்கள்.

     22. பலராமன்-ஆதிசேஷன் அவதாரம்.

    23. கிருஷ்ணன் - விஷ்ணு அவதாரம்.

    24. பரசுராமன்- விஷ்ணு அவதாரம்.

    25. ருக்மணி- லட்சுமி அவதாரம்.

    26. பிரத்தியும்னன் (கிருஷ்ணன் மகன்)- சனத்குமாரர்.

    27. பாஞ்சாலி - நளாயினி.

    28. குந்தி- சித்தி என்னும் தேவஸ்ரீ.

    29. மாதிரி- த்ரிதி என்னும் தேவஸ்ரீ.

    30. காந்தாரி- மதி என்னும் தேவதை.

     31. திருசியுத்தமன்- அக்னியின் ஒரு அம்சம்.

    32. ஜராசந்தன்- விபிரஜித் என்னும் அரக்கர்கள் தலைவன்.

    33. சிசுபாலன்- ஹிரண்யகசிபு.

    34. சல்லியன்- பிரகலாதன் தம்பி ஹம்சலாதன்.

    35. திருஸ்தகேது (சிசுபாலன் மகன்)- பிரகலாதன் தம்பி அனுகலாதன்.

    36. பகதத்தன் (நரகாசுரன் மகன்)- பாஷ்கலங் என்னும் அரக்கர் தலைவன்.

    37. உக்கிரசேனன்- சொர்ணபானு என்ற அரக்கன்.

    38. பக்லிகன் (பீஷ்மர் பெரியப்பா) - அகர்னன் என்னும் அரக்கமன்னன்.

    39. ருக்மி, ஏகலைவன், ஜனமேஜயன்- கீர்த்தவரசர்கள் என்னும் அரக்கர் கூட்டம்.

    40. கம்சன்-காலநேமி என்னும் மாபெரும் அரக்கன் (ராமாயணத்தில் வருவான்).

    41. சுபத்திரை- விஷ்ணு மனதில் தோன்றிய யோக மாயை.

    42. சிகண்டி- (அம்பை) அதற்கு முன் அரக்கன்.

    43. சாந்தனு-100 ராஜசூய யாகம் செய்த மஹாபிஷக்

    • மகாபாரத நாடக பெருவிழா கடந்த 4ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வந்தது.
    • சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை தெற்குபட்டு கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில், பாரம்பரியம் மிக்க மகாபாரத நாடக பெருவிழா கடந்த 4ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக "துரியோதனன் படுகளம்" நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து முடிந்தது.

    இவ்விழாவைகான கோவளம், நெம்மேலி, கேளம்பாக்கம், திருப்போரூர் மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர். விழாவிற்கு வந்திருந்த சென்னைவாசி பக்தர்கள் பாரம்பரிய மகாபாரத கூத்து கலைஞர்களை வியப்பாக பார்த்து அவர்களுடன் நின்று செல்பி, போட்டோ எடுத்துச் சென்றனர்.

    தவ வலிமை மிகுந்த பரத்வாஜர் - கிருதசி தம்பதியரின் மகனான துரோணர் பரசுராமரிடம் சென்று போர் தந்திரங்களைக் கற்றார். மகாபாரத போரில் கவுரவர்களின் பக்கம் நின்று பாண்டவர்களின் படையை எதிர்த்தார்.
    தவ வலிமை மிகுந்த பரத்வாஜர்- கிருதசி தம்பதியரின் மகன் துரோணர். பரம ஏழையாக இருந்த துரோணரால் தன் மகன் அசுவத்தாமனுக்கு பசும்பால் கூட கொடுக்க முடியவில்லை. தன்னோடு குருகுலத்தில் பயின்ற சத்ரியனான துருபதனிடம் சென்று, நட்பின் அடிப்படையில் பசு ஒன்றை தரும்படி துரோணர் கேட்டார். ஆனால் துருபதன், அவரை அவமதித்து அனுப்பினான்.

    இதையடுத்து துரோணர், பரசுராமரிடம் சென்று போர் தந்திரங்களைக் கற்றார். தன்னுடைய போர் முறையை சத்ரியர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று பரசுராமர் பெற்ற வாக்குறுதியை மறந்து, அஸ்தினாபுரத்தில் பாண்டவர்களும், கவுரவர்களுக்கும் குருவாக இருந்து போர் தந்திரங்களை கற்றுக் கொடுத்தார் துரோணர். மகாபாரத போரில் கவுரவர்களின் பக்கம் நின்று பாண்டவர்களின் படையை எதிர்த்தார்.

    இவர் பாண்டவர்கள், கவுரவர்களின் குரு. கண்ணுக்குப் புலப்படாத போர் வீரர். குருஷேத்ர யுத்தத்தில் கவுரவர்களுக்காக போரிட்ட இவர் பாண்டவர் படையில் ஆயிரம் வீரர்களை கொன்று குவித்தார். போரில் தன் மகன் அசுவத்தாமன் கொல்லப்பட்டதாக கிடைத்த தகவலால் மனம் நொறுங்கிய துரோணர் ஆயுதங்களை வீசி எறிந்தார். அப்போது திரவுபதியின் சகோதரர் திருஷ்டத்துயும்னன், துரோணரை கொன்றான்.
    உத்தரப்பிரதேசத்தில் இந்தி பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை முதல்வர் தினேஷ் சர்மா, மகாபாரதம் காலத்திலேயே ஊடகத்துறை இருந்தது என கூறியுள்ளார். #DineshSharma #Journalism #Mahabharata
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்தி பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் துணை முதல்வர் தினேஷ் சர்மா கலந்து கொண்டார்.

    அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், அஸ்தினாபுரத்தில் அமர்ந்தபடி, போரின்போது பறவையின் பார்வையின் வழியே போர் நடப்பதை சஞ்சயா விவரித்த நிகழ்வை எடுத்துரைத்து, அப்போது இருந்தே ஊடகத்துறை துவங்கிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், நேரலை இல்லாமல் எவ்வாறு விளக்க முடியும்? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், கூகுள் இப்போது வந்தது. ஆனால் நாரதர் அந்த காலத்திலேயே கூகுளாக செயல்பட்டவர். ‘நாராயணா’ மந்திரம் ஓதியபடி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செய்திகளை சேர்க்கக்கூடியவர் நாரதர் என கூறினார்.

    சமீபத்தில், இண்டர்நெட், நவீன அறுவை சிகிச்சை, புவி ஈர்ப்பு தத்துவம் போன்ற அனைத்தும் பண்டைய காலங்களில் இந்தியாவில் தோன்றியது என பா.ஜ.க. தலைவர்கள் கூறி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. #DineshSharma #Journalism #Mahabharata
    ×