என் மலர்
நீங்கள் தேடியது "Serial actor"
சென்னை முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. 39 வயதான இவர் தொலைக்காட்சிகளில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகி வரும் தொடர் ஒன்றிலும் இவர் நடித்துள்ளார். சைதாப்பேட்டையைச் சேர்ந்த இவர் திருமணமாகி முத்தியால் பேட்டையில் வசித்து வந்தார்.
ராஜேஸ்வரிக்கும் அவரது கணவருக்கும் இடையே நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்து உள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதுபோன்று கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதால் ராஜேஸ்வரி கோபித்துக் கொண்டு சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
அங்கிருந்தபடியே அவர் டிவி தொடர்களில் நடிப்பதற்கான படப்பிடிப்புகளுக்கு சென்று வந்தார். கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்த ராஜேஸ்வரி தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு ராஜேஸ்வரி சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்தபோது அதிக அளவில் மாத்திரைகளை சாப்பிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் ராஜேஸ்வரியின் உயிரை காப்பாற்றுவதற்காக தீவிர சிகிச்சை மேற்கொண்டனர்.
இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் சைதாப்பேட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டிவி நடிகை ராஜேஸ்வரி உயிரிழந்தது தொடர்பாக அவரது உறவினர்களிடமும், மற்ற தொலைக்காட்சி நடிகைகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி தற்கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் அது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
இந்த விசாரணை முடிவில்தான் நடிகை ராஜேஸ்வரி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றிய முழு விவரங்களும் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வெள்ளித்திரை தாண்டி சின்னத்திரையிலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
- சஹானா ஸ்ரீதர் மறைவு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல குணச்சித்திர நடிகர் சஹானா ஸ்ரீதர் (62 வயது) உடல்நலக்குறைவால் காலமானார். அழியாத கோலங்கள்', 'வி.ஐ.பி', 'ராஜ வம்சம்' உள்பட பல படங்களில் நடித்த சஹானா ஸ்ரீதர், வெள்ளித்திரை தாண்டி சின்னத்திரையிலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
'வள்ளி வேலன்', 'தாமரை', 'சித்தி-2' உள்ளிட்ட பல தொடர்களில் அவர் நடித்துள்ளார். 'சஹானா' என்ற தொடரில் நடித்து பிரபலம் அடைந்ததால் 'சஹானா' ஸ்ரீதர் என்று அழைக்கப்பட்டார்.
சென்னை தி. நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த 'சஹானா' ஸ்ரீதருக்கு நேற்று மாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். சஹானா ஸ்ரீதர் மறைவு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- விகாஸ் சேத்திக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
- தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு விகாஸ் சேத்தி மரணமடைந்தார்.
செப்டம்பர் 7 ஆம் தேதி நடிகர் விகாஸ் சேத்தி மாரடைப்பால் உயிரிழந்தார். 48 வயதான அவர் பாலிவுட்டில் துணை காதாபாத்திரத்திலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து புகழ்பெற்றவர்.
நாசிக் மாவட்டத்திற்கு குடும்ப நிகழ்விற்காக விகாஸ் சேத்தியும் அவரது மனைவி ஜான்வி சேத்தியும் சென்றுள்ளனர். அப்போது அவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. ஆனால் விகாஸ் சேத்தி மருத்துவமனைக்கு செல்லவில்லை. பின்னர் தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு விகாஸ் சேத்தி மரணமடைந்தார்.
விகாஸ் சேத்தியின் கடைசி தருணங்கள் குறித்து அவரது மனைவி ஜான்வி சேத்தி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், விகாஸ் சேத்தியின் இறுதி சடங்குகள் இன்று மும்பையில் நடைபெறும் என்று அவரது மனைவி தெரிவித்தார்.
- 2019ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார்.
- 2024 ஆம் ஆண்டு மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி தோல்வி அடைந்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவை சேர்ந்த ஸ்மிருதி இரானி, கடந்த 2019ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு ராகுல்காந்தியை தோற்கடித்தார். அதன்பின் மத்திய அமைச்சராக அவர் பொறுப்பேற்றார்.
இதனையடுத்து 2024 ஆம் ஆண்டு மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி காங்கிரஸ் வேட்பாளர் கிஷோர் லால் சர்மாவிடம் தோல்வி அடைந்தார்.
டிவி சீரியல் மூலம் பிரபலமாகி அரசியலில் நுழைந்த ஸ்மிருதி இராணி, சமீபத்தில் 'அனுபாமா' என்ற டிவி சீரியல் நடிகையுடன் இருக்கும் புகைப்படம் வெளியாக, அவர் மீண்டும் இந்தி டி.வி. சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் பரவியது
இந்நிலையில், சீரியலில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல்களுக்கு பாஜக முன்னாள் எம்.பி. ஸ்மிருதி இராணி மறுப்பு தெரிவித்துள்ளார்.
- "உங்கள் வாழ்நாள் முழுக்க பெற்றோர் ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?
- ரன்வீருக்கு ஆதரவாக முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மகன் அபிநவ் சந்திரசூட் நீதிமன்றத்தில் வழக்காட உள்ளார்.
பீர்பைசெப்ஸ் என்று அறியப்படும் பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா கேட்ட கேள்வி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது.
சமீபத்தில் India's Got Tatent நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்வீர் போட்டியாளர் ஒருவரிடம், "உங்கள் வாழ்நாள் முழுக்க பெற்றோர் ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா? அல்லது அதை பார்ப்பதை நிறுத்த ஒரு முறை அவர்களுடன் அதில் பங்கேற்பீர்களா?" இரண்டில் எதை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டார்.
இதையடுத்து ரன்வீர் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இவருக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அசாம் முதல்வர் அறிவித்தார். இதன்பின் ரன்வீர் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டார்.
ரன்வீருக்கு ஆதரவாக முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மகன் அபிநவ் சந்திரசூட் நீதிமன்றத்தில் வழக்காட உள்ளார்.
இந்நிலையில் "மகாபாரதம்" சீரியலில் பீமனாக நடித்த முன்னாள் WWE மல்யுத்த வீரர் சவுரவ் குர்ஜார், ரன்வீருக்கு பகிரங்க மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் "ரன்வீரை போன்றவர்கள் எல்லா வரம்புகளையும் தாண்டிவிட்டனர். நான் அவனை எங்கேயாவது சந்தித்தால், யாரும் அவனை என்னிடமிருந்து காப்பாற்ற முடியாது" என்று மிரட்டியுள்ளார்.
திருவனந்தபுரம் பாலோடு பகுதியைச் சேர்ந்தவர் ஷான், (வயது 25).
மலையாள டெலிவிஷன் தொடர்களில் ஷான் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அந்த பெண்ணுக்கு டி.வி.யில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஷான் கூறினார். இதனால் அந்த பெண்ணும் ஷானுடன் நெருங்கி பழகினார். இதில் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. இருவரும் பல இடங்களுக்கு சென்று காதலை வளர்த்தனர்.
இந்த நிலையில் ஷானுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அந்த பெண் ஷானை பிரிந்து சென்றார். அவரை சந்திக்கவும் மறுத்தார். காதலையும் உதறினார்.
இதையடுத்து அந்த பெண்ணுக்கு பெற்றோர் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி, வெளிநாட்டில் வேலை பார்க்கும் வாலிபர் ஒருவருடன் பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
காதலிக்கு வேறு வாலிபருடன் திருமணம் நிச்சயமான தகவல் நடிகர் ஷானுக்கு தெரிய வந்தது. அவர், பெண்ணின் ஆபாச படங்களை அவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட மணமகனுக்கு அனுப்பி வைத்தார்.
அந்த படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்தி விட்டார்.
திருமணம் நின்று போனதற்கு நடிகர் ஷான்தான் காரணம் என்பது பெண்ணுக்கு தெரிய வந்தது. அவர் இதுபற்றி பாலோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி ஷானை கைது செய்தனர்.
ஷான் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருவனந்தபுரம் ஜெயிலில் அடைக்கப்பட்டார். #PocsoAct






