என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர்"

    • கடந்த 10 வருடங்களில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகர்-நடிகைகளின் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
    • மற்ற தமிழ் நடிகர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை.

    இந்திய சினிமாவின் திரை பிரபலங்கள் எந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறார்கள் என்பதை படங்களின் வசூலை தாண்டி, சமூக வலைதளங்களில் அவர்களை எத்தனை பேர் தேடினார்கள்? என்ற விவரத்தை வைத்தும் மதிப்பிடப்படுகிறார்கள்.

    அந்தவகையில் கடந்த 10 வருடங்களில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகர்-நடிகைகளின் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

    இதில் ஷாருக்கான், சல்மான் கான், விஜய், பிரபாஸ் என நாட்டின் முன்னணி நடிகர்கள் எல்லோரையும் பின்னுக்கு தள்ளி பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

     ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், ஆலியா பட், இர்பான்கான், அமீர்கான், சுஷாந்த் சிங் ராஜ்புத், சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன், அக்ஷய்குமார் முறையே அடுத்தடுத்த இடங்களில் தொடருகிறார்கள்.

    இந்த பட்டியலில் சமந்தா 13-ம் இடத்திலும், தமன்னா 16-ம் இடத்திலும், நயன்தாரா 18-வது இடத்திலும் இருக்கின்றனர். பிரபாஸ் 29-ம் இடமும், தனுஷ் 30-ம் இடமும் பிடித்து இருக்கின்றனர். மற்ற தமிழ் நடிகர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை. 

    • திரைப்பிரபலங்கள் பலர் மதன் பாப் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி சென்றனர்.
    • மதன் பாப்பின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    சினிமா குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் மதன் பாப் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71.

    புற்று நோய்க்காக ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5 மணி அளவில் அவர் உயிரிழந்தார்.

    அவரது உடல் சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    அங்கு, திரைப்பிரபலங்கள் பலர் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர், இன்று பிற்பகலில் மதன் பாப்பின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    இந்நிலையில், மதன் பாப்பின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் மதன் பாப் உடலுக்கு உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    • கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
    • சாமி படத்தில் அவர் நடித்திருந்த பெருமாள் பிச்சை இன்றளவிலும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது

    நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை உயிர் பிரிந்தது.

    கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

    தமிழில் சாமி, திருப்பாச்சி, சகுனி உள்ளிட்ட படங்களில் கோட்டா சீனிவாசராவ் நடித்துள்ளார்.

    2015இல் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது உள்பட பல்வேறு விருதுகளை கோட்டா சீனிவாசராவ் வென்றுள்ளார்.

    1999- 2004 வரை விஜயவாடா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக கோட்டா சீனிவாசராவ் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி கடைசியாக நடித்த பரமன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
    • சூப்பர் குட் சுப்பிரமணி மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

    தமிழ் சினிமாவில் குணசித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் சுப்பிரமணி.

    திரையுலகில் அவரை பலரும் சூப்பர் குட் சுப்பிரமணி என்றுதான் அழைப்பார்கள். பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியதால் இவரை அனைவரும் சூப்பர்குட் சுப்பிரமணி என அழைக்க தொடங்கினர்.

    அவர் பரியேறும் பெருமாள், காலா, பிசாசு என ஏகப்பட்ட ஹிட் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக கையாளும் திறமை கொண்டவர்.

    இவர், கடைசியாக நடித்த பரமன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

    இந்நிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட சூப்பர் குட் சுப்பிரமணி ராஜீவ் காந்தி அரது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் நான்காம் கட்ட புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் நிதி நெருக்கடியுடனும் போராடி வந்தார்.

    அதனால், நிதி நெருக்கடி காரணமாக அவரது குடும்பத்தினர் திரைத்துறையினரிடமும், தமிழக அரசிடமும் தங்களுக்கு உதவுமாறு கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி உயிரிழந்துள்ளார்.

    இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • வெள்ளித்திரை தாண்டி சின்னத்திரையிலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
    • சஹானா ஸ்ரீதர் மறைவு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பிரபல குணச்சித்திர நடிகர் சஹானா ஸ்ரீதர் (62 வயது) உடல்நலக்குறைவால் காலமானார். அழியாத கோலங்கள்', 'வி.ஐ.பி', 'ராஜ வம்சம்' உள்பட பல படங்களில் நடித்த சஹானா ஸ்ரீதர், வெள்ளித்திரை தாண்டி சின்னத்திரையிலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

    'வள்ளி வேலன்', 'தாமரை', 'சித்தி-2' உள்ளிட்ட பல தொடர்களில் அவர் நடித்துள்ளார். 'சஹானா' என்ற தொடரில் நடித்து பிரபலம் அடைந்ததால் 'சஹானா' ஸ்ரீதர் என்று அழைக்கப்பட்டார்.

    சென்னை தி. நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த 'சஹானா' ஸ்ரீதருக்கு நேற்று மாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். சஹானா ஸ்ரீதர் மறைவு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இளம் நடிகை சிறிது காலம் சினிமாவில் இருந்து ஓய்வெடுத்து வந்தாராம். அதன்பின்னர் மீண்டும் நடிக்க வந்த நடிகை, பிரபல நடிகருடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டாராம். அந்த நடிகையின் பிறந்தநாளில் நடிகர் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தாராம்.

    அப்போது திடீரென நடிகை ஆண்டி ஆகிவிட்டார் என்றும் அவருக்கு வயது 31 கடந்து விட்டது என்றும் நடிகர் தெரிவித்தாராம். பொதுவெளியில் நடிகையின் வயதை கூறியதால் அவர் கோபத்தில் உள்ளாராம்.

    ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானாராம். எப்படியாவது நடிகையுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என பலர் தவம் கிடந்தார்களாம். ஒரு கட்டத்தில் மார்க்கெட் குறையவே நடிகை திருமணம் செய்து கொண்டாராம்.

    அதன்பின்னர், வரும் படங்களை தட்டிக்கழிக்காமல் நடித்து வருகிறாராம். ஒரு படப்பிடிப்பின் போது நடிகை மீது ஆசைப்பட்ட முன்னணி நடிகர் எதாவது சொல்லி நடிகையின் சுண்டுவிரலையாவது தொட்டுவிட வேண்டும் என இயக்குனருடன் சேர்ந்து பல தில்லாலங்கடி வேலை பார்த்து வந்தாராம். இதை தெரிந்து கொண்ட நடிகை முடியவே முடியாது என ஸ்டிரிக்டாக சொல்லிவிட்டாரம்.

    வாரிசு நடிகை தன் கவர்ச்சியினால் சினிமாவில் கலக்கி வருகிறாராம். நடிகையின் மீது ஆசைப்பட்ட நடிகர் தன் படத்தில் அந்த நடிகைதான் நடிக்க வேண்டும் என அடம்பிடித்து வருகிறாராம். இதனை அறிந்த வாரிசு நடிகையின் அப்பா அந்த நடிகருடன் மட்டும் நடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளாராம்.

    இதனை அறிந்த நடிகர் எப்படியாவது அந்த நடிகையை தனது படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டு அலைகிறாராம். இதன் முதல் படியாக நடிகர் அந்த கவர்ச்சி நடிகையின் அப்பாவிடம் பேசியுள்ளார். ஆனால் இந்த பிளான் எடுபடாமல் போகவே இயக்குனருடன் சேர்ந்து நடிகையிடம் பேசி வருகிறாராம். இதுதான் தற்போது கோடம்பாக்கத்தில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது.

    சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறாராம். தன் திறமையான நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்த நடிகையை அடைய நினைத்த வாரிசு நடிகரின் மகன் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வருகிறாராம்.

    நடிகையுடன் எப்படியாவது நட்பு கொள்ள வேண்டும் என கடுமையாக முயற்சிக்கும் வாரிசு நடிகரின் மகன் ஒருபடி மேலே சென்று நடிகையை தான் அழைக்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொள்ள வற்புறுத்தி வருகிறாராம். இதனால் கோபமான நடிகை என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம்.

    ஒரு சாதாரண கதாபாத்திரம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் அதன்பின் இயக்குனர் ஒருவர் கொடுத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு தன் திறமையினால் பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக உயர்ந்தாராம். உச்ச நடிகராக இருக்கும் இந்த ஹீரோ பல இளம் நடிகைகளுக்கு தன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்து அவர்களது வளர்ச்சியை உயர்த்தி வருகிறாராம்.

    இப்படி பல நடிகைகளுடன் நடிக்கும் இந்த ஹீரோ பட வாய்ப்புகளை அவர்களுக்கு சும்மா கொடுப்பதில்லையாம். அதாவது தான் நினைக்கும் நேரத்தில் அந்த நடிகைகளுடன் உல்லாசமாக இருந்து வருகிறாராம். இந்த நடிகரால் தானே நாம் உயர்ந்தோம் என்ற விசுவாசத்தில் நடிகைகளும் அட்ஜஸ்ட்மெண்டிற்கு ஒத்துழைத்து வருகிறார்களாம்.

    இளம் வயதில் சினிமா துறையில் அறிமுகமான நடிகை தன் கவர்ச்சியாலும், அழகாலும் முன்னணி நாயகர்களுடன் நடித்து பிரபலமானாராம். நடிகையை எப்படியாவது தங்கள் படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்று நினைத்த அக்கட இயக்குனர்கள் நான், நீ என்று போட்டிப்போட்டுக் கொண்டு தங்கள் படங்களில் அவரை புக் செய்தார்களாம்.

    இதனால் குஷியான நடிகை உச்ச நடிகையாக வலம் வந்தாராம். தற்போது நடிகைக்கு வயதாகிவிடவே இயக்குனர்கள் எல்லாம் நடிகையை கதாநாயகி பதவியிலிருந்து விலக்கி ஒரு ஐட்டம் பாடலுக்கு மட்டும் ஆடுங்கள் என்று கேட்டு வருகிறார்களாம். ஆனால், 50 வயதிற்கு மேற்பட்ட நடிகர்களோ நான் நடித்தால் அந்த நடிகையுடன் தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து வருகிறார்களாம்.

    தனக்கு வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்று ஏக்கத்தில் இருக்கும் நடிகை சரி படங்களில் தான் வாய்ப்பு கிடைக்கவில்லை வெப் தொடரிலாவது நடிப்போம் என்று முடிவெடுத்து கவர்ச்சியில் இறங்கிவிட்டாராம்.

    தமிழில் பலான படத்தில் அறிமுகமான நடிகரின் ஒரு சில படம் ஓரளவிற்கு தியேட்டரில் ஓடிவிட்டதாம். இதையடுத்து தானும் ஒரு நடிகர் என்று நினைத்துக் கொண்ட அவருக்கு, உலக புகழ் பெற்றவரின் தயாரிப்பு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். இந்த படத்தில் நடித்ததால் தானும் உலக புகழ் பெற்ற நடிகர் என்ற எண்ணம் அவருக்கு வந்து விட்டதாம். நடிகரின் பேச்சும் நடத்தையும் முன்பு இருந்ததை விட தற்போது அதிகமாக இருக்கிறதாம். நடிகருடன் நன்றாக பேசுபவர்களே, அவரை விட்டு விலகி சென்று வருகிறார்களாம். மேலும் நடிகரின் ஆட்டம் எவ்வளவு தூரம் போகுதுனு பார்ப்போம் என்று நெருங்கியவர்கள் பேசி வருகிறார்கள்.

    ×