என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "passed away"

    • சிகிச்சை பலனின்றி நேற்று கனத்தில் ஜமீலா எம்.எல்.ஏ. இறந்தார்.
    • இறுதிச்சடங்கு நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) நடைபெற உள்ளது.

    கேரள மாநிலம் கோயிலாண்டி சட்டமன்ற தொகுதியில் இருந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வெற்றி பெற்றவர் கனத்தில் ஜமீலா.

    கடந்த சில நாட்களாக நோய்வாய்பட்டிருந்த இவர், கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று கனத்தில் ஜமீலா எம்.எல்.ஏ. இறந்தார். அவருக்கு வயது 59.

    கோழிக்கோடு குட்டியாடி பகுதியை சேர்ந்த இவர் பஞ்சாயத்து தலைவர், ஜனநாயக மகளிர் சங்கத்தின் மாநில துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளார்.

    இவரது இறுதிச்டங்கு நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) நடைபெற உள்ளது.

    • வயது மூப்பின் காரணமாக சென்னை பெரம்பூரில் இன்று மாலை காலமானார்.
    • ஆயிரக்கணக்கான திரைப் பாடல்களை கவிஞர் பூவை செங்குட்டுவன் எழுதியுள்ளார்.

    கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன் (90) வயது மூப்பின் காரணமாக சென்னை பெரம்பூரில் இன்று மாலை காலமானார்.

    1,000-க்கும் மேற்பட்ட திரை பாடல்கள், 4,000 சுயாதீனப் பாடல்கள், 5,000 பக்திப்பாடல்களை செங்குட்டுவன் எழுதியுள்ளார்.

    குறிப்பாக செங்குட்டுவன் எழுதிய, நான் உங்கள் வீட்டுப்பிள்ளை, தாயிற்சிறந்த கோவிலுமில்லை, திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, இறைவன் படைத்த உலகை போன்ற பாடல்கள் என்றும் நினைவில் நீங்கா இடம்பெற்ற பாடல்கள் என கூறலாம்.

    • திரைப்பிரபலங்கள் பலர் மதன் பாப் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி சென்றனர்.
    • மதன் பாப்பின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    சினிமா குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் மதன் பாப் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71.

    புற்று நோய்க்காக ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5 மணி அளவில் அவர் உயிரிழந்தார்.

    அவரது உடல் சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    அங்கு, திரைப்பிரபலங்கள் பலர் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர், இன்று பிற்பகலில் மதன் பாப்பின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    இந்நிலையில், மதன் பாப்பின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் மதன் பாப் உடலுக்கு உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    • மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்த டான் திரைப்படத்தை இயக்கியவர் சந்திரா பரோட்.
    • இன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.

    1978 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்த டான் திரைப்படத்தை இயக்கியவர் சந்திரா பரோட்.இப்படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்துள்ளனர்.

    86 வயது ஆகும் சந்திரா ப்ரோட் கடந்த 7 ஆண்டுகளாக நுரையீரல் பிரச்சனைக்கு  சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.

    இவரது இறப்பு இந்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவரது இரங்கலை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இவர் இயக்கிய டான் திரைப்படத்தை தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில்  பில்லா திரைப்படமாக உருவாந்து குறிப்பிடத்தக்கது.

    • 'ஆண் பாவம்' படத்தில் விகே ராமசாமிக்கு அம்மாவாக, பாண்டியராஜனுக்கு பாட்டியாக நடித்தவர் கொல்லங்குடி கருப்பாயி.
    • ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண்ணிசைப் பாடல்களைப் பாடியிருக்கிறார்.

    தமிழ் சினிமாவில் பாண்டியராஜன் நடிப்பில் வெளியான 'ஆண் பாவம்' படத்தில் விகே ராமசாமிக்கு அம்மாவாக, பாண்டியராஜனுக்கு பாட்டியாக நடித்தவர் கொல்லங்குடி கருப்பாயி. மதுரை-தொண்டி சாலை, சிவகங்கை உள்ள கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பாயி.

    இவரை ஆண் பாவம் படத்தின் மூலம் பாண்டியராஜன் தான் அறிமுகப்படுத்தினார். நாட்டுப்புற பாடகியான இவர், கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண்ணிசைப் பாடல்களைப் பாடியிருக்கிறார்.

    ஆண் பாவம் படத்திற்கு பின் கோபாலா கோபாலா, ஆயிசு நூறு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 1993-ல் இவரது கலைச் சேவையை பாராட்டி முதல்வர் ஜெயலலிதா கலைமாமணி விருது வழங்கினார்.

    தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பாடகியாகவும் இருந்த கொல்லங்குடி கருப்பாயி இன்று காலமானார். இவருக்கு வயது 99. மேலும் இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • பிரபல தமிழ்த் திரைப்படம் நடிகர் ராஜேஷ் {76} உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 29 ஆம் தேதி காலமானார் .
    • ராஜேஷ் அவர்களது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    பிரபல தமிழ்த் திரைப்படம் நடிகர் ராஜேஷ் {76} உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 29 ஆம் தேதி காலமானார் . இவர் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

    இவர் 1949 ஆம் ஆண்டு மன்னார்குடியில் பிறந்தார்.1979- ஆண்டில் தமிழ் திரையுலகில் அறிமுகமான ராஜேஷ் 150-க்கு மேற்பட்ட படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.

    அவள் ஒரு தொடர்கதை, அந்த 7 நாட்கள்,மெட்டி, என்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் சேதுபதி நடித்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    மேலும் யூடியூபில் ஓம் சரவண பவ என்ற சேனலின் மூலம் பல ஆன்மிக செய்திகளும், ஆரோக்கிய செய்திகளை , பல மருத்துவர்களை நேர்காணல் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராஜேஷ் அவர்களது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இன்று ராஜேஷ் உடலிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளரை சந்தித்த ரஜினிகாந்த்

    "என்னுடைய நெருங்கிய நண்பர், அவரு பெரிய ஹீரோவோ, நடிகரோ, தயாரிப்பாளரோ கிடையாது. ஆனா அவருடைய உடலுக்கு மாண்புமிகு முதலமைச்சரில் இருந்து பல திரைப்பிரபலங்கள் வரை நேரில் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். அது அவர் எப்படி வாழ்ந்தார் என்பதற்கான சான்று. அவருக்கு தெரியாத விஷயங்களே கிடையாது. அடிக்கடி நாங்கள் சந்திப்போம். என் உடல்நிலையில் அதிகம் அக்கறை காட்டுவார். அவருடைய இழப்பு பேரிழப்பு. அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்" என கூறியுள்ளார்

    • திரைப்படம் நடிகர் ராஜேஷ் {76} உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
    • இவர் மூச்சு திணறல் ஏற்ப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

    பிரபல தமிழ்த் திரைப்படம் நடிகர் ராஜேஷ் {76} உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் மூச்சு திணறல் ஏற்ப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

    இவர் 1949 ஆம் ஆண்டு மன்னார்குடியில் பிறந்தார்.1979- ஆண்டில் தமிழ் திரையுலகில் அறிமுகமான ராஜேஷ் 150-க்கு மேற்பட்ட படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.

    அவள் ஒரு தொடர்கதை, அந்த 7 நாட்கள்,மெட்டி, என்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் சேதுபதி நடித்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    மேலும் யூடியூபில் ஓம் சரவண பவ என்ற சேனலின் மூலம் பல ஆன்மிக செய்திகளும், ஆரோக்கிய செய்திகளை , பல மருத்துவர்களை நேர்காணல் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தனது தலைமை காஜி பொறுப்பில் நேர்மையோடு அறத்தின் வழியில் பணியாற்றியவர்.
    • தலைமை காஜி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    தமிழக அரசின் தலைமை காஜி சலாகுத்தீன் முஹம்மது அயூப் (84) நேற்று காலமானார். வயது முப்பு காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் நேற்று இரவு 9 மணியளவில் மரணமடைந்துள்ளார்.

    இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ் மாநில தேசிய லீக் கட்சி சம்ஜூதீன் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தலைமை காஜி மறைவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு அரசு தலைமை காஜி அல்லாமா முஃப்தி Dr.முஹம்மது ஸலாஹுத்தீன் அய்யூபி காதிரி அஜ்ஹரி அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

    தனது தலைமை காஜி பொறுப்பில் நேர்மையோடு அறத்தின் வழியில் பணியாற்றியவர். அரசு வழங்கிய சைரன் வைத்த கார், அரசு ஒதுக்கிய வீடு, அரசு வழங்கிய தலைமை அலுவலகம் எனத் தனது பொறுப்புக்காக அரசு வழங்கிய சலுகைகளைப் பெறாமல் சேவையாற்றியவர்.

    அனைவரின் நன்மதிப்பைப் பெற்ற தலைமை காஜி அல்லாமா முஃப்தி Dr.முஹம்மது ஸலாஹுத்தீன் அய்யூபி காதிரி அஜ்ஹரி அவர்களைப் பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இஸ்லாமிய சமூகத்தினரின் பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்றிருந்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
    • தலைமை காஜி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    தமிழக அரசின் தலைமை காஜி சலாகுத்தீன் முஹம்மது அயூப் (84) நேற்று காலமானார். வயது முப்பு காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் நேற்று இரவு 9 மணியளவில் மரணமடைந்துள்ளார்.

    இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ் மாநில தேசிய லீக் கட்சி சம்ஜூதீன் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தலைமை காஜி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாகுத்தீன் முஹம்மது அயூப் சாகிபு மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். கற்றறிந்த பேராசிரியரான அவர், தனது சமூகச் சேவைகளுக்காக என்றென்றும் நினைவுகூரப்படுவார்.

    தன்னுடைய பண்பால் இஸ்லாமிய சமூகத்தினரின் பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்றிருந்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

    நான் ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலந்தொட்டு, என் மீது பேரன்பு செலுத்தியவர் அவர். மூப்பெய்திய போதும், நான் பங்கெடுக்கும் இப்தார் நிகழ்வுகள் அனைத்திலும் தன்னுடைய உடல்நலன் ஒத்துழைக்கும் வரையில் பங்கேற்பேன் என்று சொல்லிய அவரை இன்று இழந்து வாடுகிறோம்.

    அவரது பிரிவால் வாடும் இஸ்லாமிய மக்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாம் தமிழர் மாநில ஒருங்கிணைப்பாளரின் தந்தை செல்லப்பெருமாள் காலமானார்
    • நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

    காரைக்குடி

    நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப் பாளர்-பொறியாளர் வெற்றிகுமரனின் தந்தை நா.செல்ல பெருமாள் காலமானார்.

    அவரது இறுதிச் சடங்கு இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணி யளவில் மதுரை பைபாஸ் ரோடு, துரைசாமி நகரில் உள்ள இல்லத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மரணம் அடைந்த செல்லப்பெருமாளின் உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை நாடாளு மன்ற தொகுதி மண்டலச் செயலாளர் சாயல்ராம், ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொரு ளாளர் ஓரிக்கோட்டை காளீஸ்வரன், திருவாடானை சட்ட மன்ற தொகுதி செய லாளர் வெற்றி என்ற ஜெயச்சந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

    • செட்டிக்குறிச்சி ராஜேந்திரன் மனைவி ராஜேஸ்வரி காலமானார்.
    • அவரின் இறுதிச்சடங்கு நாளை மதியம் 2 மணிக்கு மேல் அவரது இல்லத்தில் வைத்து நடைபெறும்.

    மதுரை

    மதுரை காவேரி மஹால் மறைந்த கே.வி.கே.ராஜேந் திரபிரபுவின் மைனத்துன ரும், அசோகா பேலஸ் உரி மையாளர் மறைந்த செட்டிக் குறிச்சி எஸ்.ஏ.ஜே.ராஜேந்திரனின் மனைவியும், எஸ். ஏ.ஜே.ஆர்.அசோக்குமா ரின் தாயாரும், மதுரை பி.டி.ஆர். அகாடமி மற்றும் பி.ஆர்.பி. ஏஜென்சி டாக்டர் ஆர்.பி.திருப்பதி ராஜின் பெரியம்மாவும், மதுரை சரஸ்வதி பவனம் லாட்ஜிங் வி.வி.பி.எம்.செல்வராஜின் சகோதரியும், மதுரை காமரா ஜர் பல்கலைக்கழக துணை பேராசிரியர் டாக்டர் எஸ்.பிரவின் குமாரின் அத்தையுமான ஆர்.ராஜேஸ்வரி நேற்று (23-ந்தேதி, திங்கட் கிழமை) மதியம் 12 மணியளவில் காலமானார்.

    இதையடுத்து அவரது உடல் உறவினர்கள் அஞ்ச லிக்காக மதுரை காக்கா தோப்பில் சுப்புராயன் அக்ராயம் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக் கப்பட்டுள்ளது. இதில் மறைந்த ஆர்.ராேஜஸ்வரியி ன் உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட் சியினர், கல்வியாளர்கள் உள்ளிட்ேடார் கலந்து கொண்டு அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    மறைந்த ஆர்.ராஜேஸ்வ ரியின் இறுதிச்சடங்கு இன்று (24-ந்தேதி, செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணிக்கு மேல் அவரது இல்லத்தில் வைத்து நடைபெறும் என்று குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். 

    • தேமுதிக தொண்டர்கள், பொது மக்களுக்கு இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
    • அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    மறைந்த விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது

    இதைதொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் சிறந்த முறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    தீவுத்திடலில் இடம் ஒதுக்கீடு கொடுத்து, உதவி செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு தேமுதிக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாதுகாப்பு வழங்கிய அனைத்து காவல்துறையினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    தேமுதிக தொண்டர்கள், பொது மக்களுக்கு இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகத்தில் எந்த தலைவருக்கும் கிடைத்திடாத அன்பு விஜயகாந்திற்கு கிடைத்துள்ளது. 2 நாட்களில் 15 லட்சம் தொண்டர்கள், பொது மக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

    ராகுல் காந்தி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ×