என் மலர்
நீங்கள் தேடியது "Pocso Law"
- கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து சுஜாதா 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.
- நாகராஜ், சுஜாதா ஆகிய 2 பேரையும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (47). இவரது மனைவி சுஜாதா (45). இவர்களுக்கு 16 வயது, 14 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து சுஜாதா 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். பேரம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வசித்து வருகிறார்.
சுஜாதா தனது குடும்ப சூழ்நிலை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் (32) என்பவருக்கு தனது 16 வயது மகளை கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி மாங்காடு கோவில் வாசலில் வைத்து திருமணம் செய்து வைத்துள்ளார்.
இதுகுறித்து 16 வயது சிறுமியின் உறவினர் 1098 சைல்டு லைன் எண் மூலம் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு சென்ற சைல்டு லைன் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிபூரணம் மற்றும் போலீசார் குழந்தை திருமணத்துக்கு உடந்தையாக இருந்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் நாகராஜ் மற்றும் சிறுமியின் தாய் சுஜாதா ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் நாகராஜ், சுஜாதா ஆகிய 2 பேரையும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
- சிறுமி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வீட்டை விட்டு வெளியேறி காதலன் பூபதியுடன் சென்றார்.
- போலீசார் 17 வயது சிறுமியை காதல் திருமணம் செய்த பூபதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.
இவருக்கு அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பூபதி(வயது28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. சிறுமியின் தாய், தந்தை ஆகியோர் இறந்து விட்டனர். இதனையடுத்து சிறுமி அவரது பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார்.
சிறுமியிடம் அவரது பாட்டி அடிக்கடி சண்டை போட்டு வந்தார். இதனால் சிறுமிக்கு அவரது பாட்டியின் நடவடிக்கைகள் பிடிக்காமல் போனது.
இதனையடுத்து சிறுமி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வீட்டை விட்டு வெளியேறி காதலன் பூபதியுடன் சென்றார். பின்னர் 2 பேரும் செஞ்சேரிபுதூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்தனர்.
இந்தநிலையில் சிறுமி 8 மாத கர்ப்பமாக இருந்தார். அவரை பூபதி பொள்ளாச்சி ஜமீன் முத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று பரிசோதனைகள் மேற்கொண்டு வந்தார்.
கடந்த 20-ந்தேதி சிறுமிக்கு வயிற்று வலி அதிகமானது. இதனையடுத்து பூபதி சிறுமியை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரசவம் ஆக வாய்ப்பு உள்ளது என கூறினர். பின்னர் டாக்டர்கள் சிறுமியின் வயதை ஆய்வு செய்த போது அவர் 17 வயதில் கர்ப்பமானது தெரிய வந்தது.
இது குறித்து டாக்டர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் 17 வயது சிறுமியை காதல் திருமணம் செய்த பூபதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேடசந்தூர் டி.எஸ்.பி துர்காதேவி உத்தரவின்பேரில் வடமதுரை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
- விசாரணையில் ரங்கநாதன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கூம்பூர் ராமநாயக்கனூர் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன்கள் ரங்கநாதன்(24), கருப்பசாமி(21). இவர்கள் 2 பேரும் பக்கத்து கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றனர். அப்போது சில நாட்கள் அங்கேயே தங்கினர்.
உறவினரின் 9 மற்றும் 5 வயது மகள்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக ரங்கநாதன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் 2 பள்ளி குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் சிறுமிகள் உடல் சோர்ந்து காணப்பட்டனர்.
இதைஅறிந்ததும் அவர்களின் தாயார் 2 சிறுமிகளையும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அழைத்து சென்றார். அப்போது அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது டாக்டர்கள் மூலம் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் போலீசில் புகார் அளித்தார்.
வேடசந்தூர் டி.எஸ்.பி துர்காதேவி உத்தரவின்பேரில் வடமதுரை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் ரங்கநாதன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வேடசந்தூர் சிறையில் அடைத்தனர்.
- சிறுமி கடந்த ஜூன் மாதம் 1-ம்தேதி வீட்டை விட்டு வெளியேறி வாலிபருடன் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.
- தகவலின் பேரில் மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் போக்சோ வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்து தருமபுரி சிறையில் அடைத்தார்.
மாரண்டஅள்ளி:
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த சிக்கதோரண பெட்டம் கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு, மேற்கொண்டு படிக்காமல் வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் இச்சிறுமியும் மகேந்திரமங்கலம் குழிக்காடு கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் (வயது 27) என்ற வாலிபரும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில் சிறுமி கடந்த ஜூன் மாதம் 1-ம்தேதி வீட்டை விட்டு வெளியேறி பிக்கனஅள்ளியில் உள்ள பெருமாள் கோவிலில் வாலிபருடன் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.
இந்நிலையில் சிறுமி கர்ப்பமானதால் அடிக்கடி வாந்தி, மயக்கம், உடல் சோர்வு ஏற்பட்டது.
இதனால் சிறுமியை தருமபுரி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து மருத்துவர்கள் மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் போக்சோ வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்து தருமபுரி சிறையில் அடைத்தார்.
- மாணவி தனியாக நடந்து செல்லும்போது முனியப்பன் பின்தொடர்ந்து அவரை கடத்தி சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
- சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் தருமபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
தருமபுரி:
தருமபுரி மதிகோன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் தருமபுரியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார்.
பெரியகுரும்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மகன் கணேசன் என்கிற முனியப்பன் (வயது28) என்பவர் மாணவி பள்ளிக்கு வரும்போது தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்தார். ஆனால், அந்த மாணவி முனியப்பனை காதலிக்க மறுத்து விட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி தனியாக நடந்து செல்லும்போது முனியப்பன் பின்தொடர்ந்து அவரை கடத்தி சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவி நடந்த சம்பவத்தை பற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே பெற்றோர் முனியப்பனை தேடி சென்றனர். ஆனால், அவர் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் தருமபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள கணேசன் என்கிற முனியப்பனை தேடி வருகின்றனர்.
- 17 வயது மாணவி குளிக்கும்போது ஜீவானந்தம் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார்.
- காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜீவானந்தத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவில் விருப்பம்பதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 23). பெயிண்டர். இவர் அந்த பகுதியில் பெண்கள் குளியலறையில் குளிக்கும் போது அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று 17 வயது மாணவி குளிக்கும்போது ஜீவானந்தம் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் இது குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதை அடுத்து காஞ்சி கோவில் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் காஞ்சிகோவில் போலீசார் ஜீவானந்திடம் விசாரணை நடத்தினர்.
மேலும் அவர்கள் செல்போனை சோதனை செய்த போது அதில் அந்த 17 வயது மாணவி குளித்த வீடியோ இருந்ததை உறுதி செய்தனர்.
இதையஅடுத்து காஞ்சிக்கோவில் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து ஜீவானந்தத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- பக்கத்து வீட்டை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் தன்னை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி கூறினார்.
- பாலியல் தொல்லையால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த சிறுமி, அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார். நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பாட்டி அந்த பெண்ணின் தந்தைக்கு தகவல் கொடுத்தார். வேலைக்கு சென்றிருந்த அவர் வீட்டுக்கு வந்து உறவினர்களுடன் தனது மகளை தேடினார்.
காட்டுப்பகுதிக்கு சென்று பார்த்தபோது மகளின் ஆடை, செல்போன் ஆகியவை கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து அந்தப்பகுதியில் தீவிரமாக தேடிப்பார்த்த போது அந்த சிறுமி தந்தையின் குரலை கேட்டு அழுத படி வந்தார். அப்போது அவர் பக்கத்து வீட்டை சேர்ந்த பாண்டியராஜன் (வயது30) என்பவர் தன்னை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை மகளுக்கு நடந்த கொடுமை குறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் பாண்டியராஜனை கைது செய்தனர். இதற்கிடையே பாலியல் தொல்லையால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
- கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
- சிறுமியை ஏமாற்றி கற்பழித்த வெல்டிங் தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த 16 வயது சிறுமி 10-ம் வகுப்பு முடித்துவிட்டு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சிங் படித்து வந்தார். சிறுமியின் பெற்றோர் தனியார் மில்லில் வேலைபார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து தேனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்றார். அப்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இதுகுறித்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது சிறுமி தெரிவிக்கையில், எனது பெற்றோர்கள் வேலைக்கு சென்ற சமயத்தில் எனது பெரியப்பா மகனான 27 வயது சகோதரர் என்னுடன் நெருக்கமாக பழகினார். பின்னர் பலமுறை பலாத்காரம் செய்தார். இதனால் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து வெளியில் யாரிடமும் கூறவேண்டாம் எனவும் மிரட்டி வந்தார் என தெரிவித்தார். இதனிடையே சிகிச்சையில் இருந்த சிறுமிக்கு ஆண்குழந்தை பிறந்தது.
தேனி அனைத்து மகளிர் போலீசார் தங்கை உறவுமுறை கொண்ட சிறுமியை ஏமாற்றி கற்பழித்த வெல்டிங் தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுமி மாயமானது குறித்து அவரது பெற்றோர் அன்னூர் போலீசில் புகார் செய்தனர்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர்.
கோவை:
கோவை அன்னூரை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேஸ் என்ற காந்தி (வயது26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இவர் கடந்த 11-ந் தேதி ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றார். பின்னர் 12-ந்தேதி காந்திபுரத்தில் வைத்து சிறுமியை திருமணம் செய்தார்.
இதனை தொடர்ந்து அவர் சிறுமியை கேரள மாநிலத்துக்கு கடத்தி சென்று வீடு வாடகைக்கு எடுத்து தங்கினார். அங்கு வைத்து காந்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
சிறுமி மாயமானது குறித்து அவரது பெற்றோர் அன்னூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சிறுமி கேரள மாநிலத்தில் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் காந்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து பலாத்காரம் செய்த காந்தியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சடத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
- டியூசனுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய ஒரு சிறுவனை தனது காரில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
- மலப்புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் இப்ராகிம் சகாபி (வயது 46). சம்பவத்தன்று இவர், மலப்புரம் கோட்டபாடி பகுதியில் டியூசனுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய ஒரு சிறுவனை தனது காரில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். வீட்டில் இறக்கி விடுவதாக கூறி ஏமாற்றி சிறுவனை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளார்.
இதுகுறித்து மலப்புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், இப்ராகிம் சகாபியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.