என் மலர்
இந்தியா

பள்ளி மாணவிக்கு மது கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: போக்சோவில் 2 வாலிபர்கள் கைது
- வீட்டுக்கு திரும்பிவந்த அந்த சிறுமி, நடந்த சம்பவம் பற்றி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.
- சிறுமி கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வயநாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்பெட்டா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். பழங்குடியின சமூகத்தை சேர்ந்த அந்த சிறுமியை சம்பவத்தன்று 2 வாலிபர்கள் கடத்தி சென்றுள்ளனர்.
பின்பு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்பு அந்த வாலிபர்கள் இருவரும் சிறுமியை அந்த இடத்திலேயே தவிக்க விட்டுவிட்டு தப்பிச்சென்றனர்.
இதையடுத்து தனது வீட்டுக்கு திரும்பிவந்த அந்த சிறுமி, நடந்த சம்பவம் பற்றி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
அதில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மானந்தவாடி பகுதியை சேர்ந்த ஆஷிக் மற்றும் ஜெயராஜ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மது கொடுத்து பள்ளி மாணவியை சீரழித்த 2 பேரின் மீதும் போக்சோ மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
பழங்குடியின சிறுமி கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வயநாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






