என் மலர்
நீங்கள் தேடியது "சிறுமி தற்கொலை"
- அவந்திதா மதிய நேரத்தில் வெளியே சென்று விளையாட தனது தந்தையிடம் அனுமதி கேட்டார்.
- பலமுறை கூப்பிட்ட பின்னரும் மகள் குரல் கொடுக்கவில்லை.
திருச்சி:
திருச்சி நாச்சி குறிச்சி வாசன் வேலி 10வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (வயது 44). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் அவந்திகா (9). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கோடை விடுமுறையில் குழந்தைகள் 2 பேரும் நேற்று வீட்டில் இருந்தனர். பெற்றோரும் வீட்டில் இருந்தனர்.
அப்போது அவந்திதா மதிய நேரத்தில் வெளியே சென்று விளையாட தனது தந்தையிடம் அனுமதி கேட்டார். அதற்கு லோகேஷ், வெயில் கடுமையாக இருப்பதால் இப்போது வெளியே சென்று விளையாட வேண்டாம். மாலையில் பொழுது சாய்ந்ததும் போய் விளையாடு என கூறியதாக தெரிகிறது.
உடனே தந்தையிடம் கோபித்துக்கொண்டு அந்த சிறுமி தனது அறைக்கு சென்று உள்ளார். பெற்றோரும் மகள் சாதாரணமாக கோபித்துக் கொண்டு சென்றிருக்கலாம் என கருதினர். பின்னர் சிறிது நேரம் கழித்து அறைக்கு சென்று மதிய உணவு சாப்பிட மகளை அழைத்தனர். அப்போது அறை கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பலமுறை கூப்பிட்ட பின்னரும் மகள் குரல் கொடுக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த லோகேஷ் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்து விட்டார். ஆசை மகள் அவந்திதா தனது துப்பட்டாவில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவளை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
9 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து லோகேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டனர்.
மாரண்டஅள்ளி:
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே தேக்லான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் தாமோதரன் (வயது 29). இவருக்கும், பென்னாகரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 10-ந்தேதி பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பாலக்கோடு அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படடது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கட்டாய திருமணம் செய்து வைத்ததால் மனமுடைந்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த சிறுமியின் தாயார் மற்றும் புதுமாப்பிள்ளை தாமோதரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டனர்.
- வீட்டில் தனியாக இருந்த சிறுமி சேலையால் தூக்குபோட்டு கொண்டார்.
- இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதி யை சேர்ந்த வயது 17 சிறுமி ஒருவர் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அந்த சிறுமி கடந்த 1 ஆண்டுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒரு வாலிபருடன் செல்போனில் இன்ஸ்ட்ரா கிராம் மூலம் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அவரது பெற்றோர் வேலை க்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமி ஒரு அறையில் பேன் கொக்கியால் தனது தாயாரின் சேலையால் தூக்கு போட்டு கொண்டார்.
இதை கண்ட அவரது உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வீட்டில் தனியாக இருந்த போது பவித்ரா திடீரென மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- பென்னாலூர்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள நயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். கூலித்தொழிலாளி. இவரது மகள் பவித்ரா (வயது 13). இவர் நயப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த போது பவித்ரா திடீரென மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பென்னாலூர்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சத்தியபாமா பவித்ராவின் உடலை கைப்பற்றி அவரது சாவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
பொன்னேரி அடுத்த பெருஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (36). கூலித்தொழிலாளி. உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனவேதனை அடைந்த பார்த்திபன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மைக்கேல் பாளையத்தில் உள்ள தனது தாய்- தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
- பிரீத்திபாவை அவரது தாய் திட்டியதாக கூறப்படுகிறது.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன பிரதாஸ். இவர் அந்தியூரில் மளிகை கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பிரீத்திபா (16) என்ற மகள் உள்ளார்.
பிரீத்திபா 10 -ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு மேற்கொண்டு படிக்காமல் தர்மபுரியில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு பிரீத்திபா அந்தியூர் அருகே மைக்கேல் பாளையத்தில் உள்ள தனது தாய்- தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று பிரீத்திபாவை அவரது தாய் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கினார். அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே பிரீத்திபா இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரீத்திபா இது போல் ஏற்கனவே ஒருமுறை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று இருந்தார். தற்போது 2-வது முறையாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று பரிதாபமாக இறந்து விட்டார்.
- தாய் இறந்ததை 9 வயது சிறுமியால் தாங்கி கொள்ள முடியவில்லை.
- அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை:
மதுரை வில்லாபுரத்தை அடுத்துள்ள பத்மா தியேட்டர் எதிரில் உள்ள 3 மாடி குடியிருப்பை சேர்ந்தவர் கண்ணாயிரம், தொழிலாளி. இவரது மனைவி பொண்ணு. இவர்களுக்கு 9 வயதில் இளவரசி என்ற மகள் இருந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த மாதம் பொண்ணு கணவர், குழந்தைகளை பிரிந்து சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த பொண்ணு சென்னையில் உறவினர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தாயாரின் இந்த முடிவு இளவரசிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக யாருடனும் பேசாமல் சோகத்துடன் காணப்பட்டார். தாய் இறந்ததை 9 வயது சிறுமியால் தாங்கி கொள்ள முடியவில்லை.
சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த இளவரசி. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கிருந்தவர்கள் இளவரசியை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தாய் தற்கொலை செய்து கொண்ட ஒரு மாதத்தில் மகளும் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சிைய ஏற்படுத்தியுள்ளது.
- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் சந்தியா துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- சமீபத்தில் சந்தியாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
நெல்லை:
கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை அடுத்த சிந்தாமேனி புதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் காசி பாண்டி. இவருக்கு முத்துபிரகாஷ்(வயது 17) என்ற மகனும், சந்தியா(16) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காசிபாண்டியை அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் காசிபாண்டி தனது 2 குழந்தைகளையும் வளர்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் சந்தியா துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சொக்கம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சமீபத்தில் சந்தியாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை.
இதனால் மனவேதனையில் இருந்து வந்த சந்தியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லாஸ்பேட்டையில் 10 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை நரிகுறவர் குடியிருப்பை சேர்ந்தவர் பாபு. இவரது இளையமகள் காவ்யா (வயது 10). இவர் முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கி படித்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு காவ்யா பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் காவ்யா தங்களது வீட்டுக்குள் புகுந்து பணம் திருடி சென்று விட்டதாக காவ்யாவின் தாய் ரேகாவிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காவ்யாவை அவரது தாய் ரேகா கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காவ்யா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
இன்று காலை வீட்டில் காவ்யா சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து உடனடியாக தூக்கில் இருந்து காவ்யாவை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே காவ்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






