ஊத்துக்கோட்டை அருகே 13 வயது சிறுமி தூக்குபோட்டு தற்கொலை

வீட்டில் தனியாக இருந்த போது பவித்ரா திடீரென மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பென்னாலூர்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஊத்துக்கோட்டை அருகே 13 வயது சிறுமி தூக்குபோட்டு தற்கொலை
Published on

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள நயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். கூலித்தொழிலாளி. இவரது மகள் பவித்ரா (வயது 13). இவர் நயப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த போது பவித்ரா திடீரென மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பென்னாலூர்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சத்தியபாமா பவித்ராவின் உடலை கைப்பற்றி அவரது சாவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

பொன்னேரி அடுத்த பெருஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (36). கூலித்தொழிலாளி. உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனவேதனை அடைந்த பார்த்திபன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com