விஷம் குடித்து சிறுமி தற்கொலை

மைக்கேல் பாளையத்தில் உள்ள தனது தாய்- தந்தை வீட்டில் வசித்து வந்தார். பிரீத்திபாவை அவரது தாய் திட்டியதாக கூறப்படுகிறது.
விஷம் குடித்து சிறுமி தற்கொலை
Published on

அந்தியூர், 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன பிரதாஸ். இவர் அந்தியூரில் மளிகை கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பிரீத்திபா (16) என்ற மகள் உள்ளார்.

பிரீத்திபா 10 -ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு மேற்கொண்டு படிக்காமல் தர்மபுரியில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு பிரீத்திபா அந்தியூர் அருகே மைக்கேல் பாளையத்தில் உள்ள தனது தாய்- தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று பிரீத்திபாவை அவரது தாய் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கினார். அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே பிரீத்திபா இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரீத்திபா இது போல் ஏற்கனவே ஒருமுறை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று இருந்தார். தற்போது 2-வது முறையாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று பரிதாபமாக இறந்து விட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com