

நெல்லை:
கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை அடுத்த சிந்தாமேனி புதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் காசி பாண்டி. இவருக்கு முத்துபிரகாஷ்(வயது 17) என்ற மகனும், சந்தியா(16) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காசிபாண்டியை அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் காசிபாண்டி தனது 2 குழந்தைகளையும் வளர்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் சந்தியா துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சொக்கம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சமீபத்தில் சந்தியாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை.
இதனால் மனவேதனையில் இருந்து வந்த சந்தியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.