இன்ஸ்ட்ரா கிராம் மூலம் வாலிபருடன் பழகி வந்தசிறுமி தற்கொலை

வீட்டில் தனியாக இருந்த சிறுமி சேலையால் தூக்குபோட்டு கொண்டார்.இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்ஸ்ட்ரா கிராம் மூலம் வாலிபருடன் பழகி வந்தசிறுமி தற்கொலை
Published on

கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதி யை சேர்ந்த வயது 17 சிறுமி ஒருவர் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் அந்த சிறுமி கடந்த 1 ஆண்டுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒரு வாலிபருடன் செல்போனில் இன்ஸ்ட்ரா கிராம் மூலம் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அவரது பெற்றோர் வேலை க்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமி ஒரு அறையில் பேன் கொக்கியால் தனது தாயாரின் சேலையால் தூக்கு போட்டு கொண்டார்.

இதை கண்ட அவரது உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com