என் மலர்tooltip icon

    இந்தியா

    கள்ளக்காதலியின் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவர் கைது
    X

    கள்ளக்காதலியின் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவர் கைது

    • தனது குழந்தைகளுடன் அந்த இளம்பெண், அனீசுடன் விடுதி அறையில் தங்கினார்.
    • இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்த அந்த இளம்பெண், அதனை வெளியே கூறாமல் அப்படியே மூடி மறைத்துவிட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மாதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அனீஷ்(வயது40). ஆட்டோ டிரைவரான இவருக்கு சமூக வலைதளத்தின் மூலமாக இளம்பெண் ஒருவர் அறிமுகமானார். அந்த பெண்ணுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

    இருந்தபோதிலும் அந்த இளம்பெண்ணுடன் அனீஷ் பழகி வந்தார். நாளடைவில் அது கள்ளத்தொடர்பாக மாறியது. இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் அனீஷ், அந்த இளம்பெண்ணை அந்தூர் நகராட்சிக்குட்பட்ட பரசினிக்கடவு பகுதிக்கு அழைத்திருக்கிறார்.

    அதன்படி அந்த இளம்பெண், 2 மகள்கள் உள்பட 3 குழந்தைகளுடன் அங்கு சென்றார். இளம்பெண்ணின் மூத்த மகள் பிளஸ்-2 வும், இரண்டாவது மகள் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். தனது குழந்தைகளுடன் அந்த இளம்பெண், அனீசுடன் விடுதி அறையில் தங்கினார்.

    இரவில் அனைவரும் ஒரே அறையில் படுத்து தூங்கினர். அப்போது அதிகாலை 2 மணியளவில், 9-ம் வகுப்பு படிக்கும் இளம்பெண்ணின் 14 வயது மகளை அனீஷ் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனை மூத்த மகளான 12-ம் வகுப்பு மாணவி பார்த்து விட்டார்.

    அதுபற்றி அவர் தனது தாயிடம் கூறினார். ஆனால் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்த அந்த இளம்பெண், அதனை வெளியே கூறாமல் அப்படியே மூடி மறைத்துவிட்டார். இருந்தபோதிலும் தனக்கு நடந்த கொடுமையை மறக்க முடியாத சிறுமி, அதுபற்றி தன்னுடைய வகுப்பு ஆசிரியையிடம் தெரிவித்தார்.

    அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து "சைல்டுலைன்" அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அதுபற்றி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஆட்டோ டிரைவர் அனீசை கைது செய்தனர்.

    அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. கள்ளக்காதலியுடன் விடுதியில் தங்கியிருந்த போது, அவரது மகளையே கள்ளக்காதலன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×