என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவிகளுக்கு பாலியல் தொல்லை"

    • மாணவியின் தாயார் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயாவையும் கைது செய்தனர்.

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே எட்டுபுலிகாடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக விஜயா உள்ளார். இங்கு ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பலர் வேலை பார்க்கின்றனர். கரம்பயம் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் (வயது 53) என்பவரும் 5-ம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிகிறார்.

    இந்த நிலையில், சம்பவத்தன்று பள்ளி வேலையின் போது 5-ம் வகுப்பு மாணவியை ஆசிரியர் பாஸ்கர் தனது அருகில் நின்று பாடத்தை படிக்கும்படி கூறியதாகவும், அந்த மாணவி படித்துக் கொண்டிருக்கும் போது அவர் மீது கையை வைத்து தவறாக நடந்து கொண்ட தாகவும் கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து தனது தோழி களிடமும், பெற்றோரிடமும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயாவிடம் சென்று இதுகுறித்து கேட்டு முறையிட்டுள்ளனர்.

    ஆனால் அவர் இதுகுறித்து மேலதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் தாயார் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் ஆசிரியர் பாஸ்கர் இதேபோல், 5-ம் வகுப்பு படிக்கும் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் போக்சோ வழக்குபதிவு செய்து ஆசிரியர் பாஸ்கரை கைது செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறி பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயாவையும் கைது செய்தனர். தொடர்ந்து, 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 24 மாணவிகளை தினமும் அழைத்து பாலியல் தொல்லை யில் ஈடுபட்ட அவலம்
    • ஜெயிலில் அடைப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள டி.கல்லேரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளி தலைமை ஆசிரியராக மீனாசாந்தி மேரி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் விருது விளங்கினான் கிராமத்தைச் சேர்ந்த சி.லட்சுமணன் என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார்.

    இவர் கடந்த ஜூன் மாதம் முதல் அந்த பள்ளியில் படிக்கும் 24 மாணவிகளை தினமும் அழைத்து பாலியல் தொல்லை யில் ஈடுபட்டு ள்ளதாக கூறப்படுகிறது.

    மிரட்டி அத்துமீறல்

    மேலும் இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி அடித்துள்ளார். இது குறித்து மாணவிகள் பெற்றோ ர்களிடம் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பெண் அலுவலர் புவனேஸ்வரி மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். இதில் ஆசிரியர் மாணவிகளை தொடுவது மிரட்டி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

    பின்னர் இது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார்.அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியை மீனா சாந்தி மேரி தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.இதனையறிந்த ஆசிரியர் லட்சுமணன் தப்பி ஓடிவிட்டார். அவரை பிடித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இது தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.பின்னர் நடந்த விசாரணைக்கு பிறகு அவரை அதிகாரிகள் சஸ்பெண்டு செய்தனர்.

    ×