என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்காதலி"

    • தனது குழந்தைகளுடன் அந்த இளம்பெண், அனீசுடன் விடுதி அறையில் தங்கினார்.
    • இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்த அந்த இளம்பெண், அதனை வெளியே கூறாமல் அப்படியே மூடி மறைத்துவிட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மாதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அனீஷ்(வயது40). ஆட்டோ டிரைவரான இவருக்கு சமூக வலைதளத்தின் மூலமாக இளம்பெண் ஒருவர் அறிமுகமானார். அந்த பெண்ணுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

    இருந்தபோதிலும் அந்த இளம்பெண்ணுடன் அனீஷ் பழகி வந்தார். நாளடைவில் அது கள்ளத்தொடர்பாக மாறியது. இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் அனீஷ், அந்த இளம்பெண்ணை அந்தூர் நகராட்சிக்குட்பட்ட பரசினிக்கடவு பகுதிக்கு அழைத்திருக்கிறார்.

    அதன்படி அந்த இளம்பெண், 2 மகள்கள் உள்பட 3 குழந்தைகளுடன் அங்கு சென்றார். இளம்பெண்ணின் மூத்த மகள் பிளஸ்-2 வும், இரண்டாவது மகள் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். தனது குழந்தைகளுடன் அந்த இளம்பெண், அனீசுடன் விடுதி அறையில் தங்கினார்.

    இரவில் அனைவரும் ஒரே அறையில் படுத்து தூங்கினர். அப்போது அதிகாலை 2 மணியளவில், 9-ம் வகுப்பு படிக்கும் இளம்பெண்ணின் 14 வயது மகளை அனீஷ் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனை மூத்த மகளான 12-ம் வகுப்பு மாணவி பார்த்து விட்டார்.

    அதுபற்றி அவர் தனது தாயிடம் கூறினார். ஆனால் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்த அந்த இளம்பெண், அதனை வெளியே கூறாமல் அப்படியே மூடி மறைத்துவிட்டார். இருந்தபோதிலும் தனக்கு நடந்த கொடுமையை மறக்க முடியாத சிறுமி, அதுபற்றி தன்னுடைய வகுப்பு ஆசிரியையிடம் தெரிவித்தார்.

    அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து "சைல்டுலைன்" அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அதுபற்றி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஆட்டோ டிரைவர் அனீசை கைது செய்தனர்.

    அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. கள்ளக்காதலியுடன் விடுதியில் தங்கியிருந்த போது, அவரது மகளையே கள்ளக்காதலன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி கைது
    • தலைமறைவாகிய செல்வத்தை தனிப்படை போலீசார் தேடிவந்தனர்.

    மதுரை

    மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகர் அண்ணாமலை யார் வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா. இவரது மனைவி பாண்டியம்மாள் (43). இவர்களுக்கு கண்ணன் (27) என்ற மகன் உள்ளார். பாண்டியம்மாள் மேலஅனுப்பானடி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள மாவு மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    அப்போது அவருக்கும், அதே மில்லில் வேைல பார்த்த அனுப்பானடி பூம்புகார் நகரை சேர்ந்த செல்வம் (57) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த 11-ந்தேதி இரவு செல்வத்திடம் வாங்கிய பணத்தை கொடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு, பாண்டியம்மாள் தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். நள்ளிரவு ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வராததால் மகன் கண்ணன் அவரை தேடி செல்வத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அப்போது அவரது வீடு உள்பக்கமாக பூட்டி கிடந்துள்ளது. வீட்டி னுள் பார்த்தபோது பாண்டியம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கீரைத்துறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கழுத்ைத அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த பாண்டியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் பிணமாக கிடந்த வீட்டில் வசித்து வந்த செல்வத்தை காணவில்லை.

    அவர் தான் பாண்டி யம்மாளை கொன்றுவிட்டு தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரை பிடிக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் ஆகியோரின் உத்தரவின்பேரில் தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தலைமறைவாகிய செல்வத்தை தனிப்படை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் பாண்டியம்மாளை கொன்ற தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தபபட்டது.

    பாண்டியம்மாளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும், அது தொடர்பாக கேட்டபோது தங்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும், அதில் ஆத்திரம் அடைந்து கத்தியால் கழுத்தை அறுத்து அவரை கொன்று விட்டதாகவும் செல்வம் கூறியிருக்கிறார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளன.
    • தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பிரேமா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

    காங்கயம் :

    திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே பாப்பினி-வரதப்பம்பாளையம் காலனி பகுதியைச் சோ்ந்தவா் செந்தில். இவரது மனைவி பிரேமா (வயது 30). இவா்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக பிரேமா கணவரைப் பிரிந்து வரதப்பம்பாளையம் காலனியில் தனி வீடு எடுத்து குழந்தைகளுடன் தங்கி, அப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்துள்ளாா்.

    இந்நிலையில், பிரேமாவுக்கும், காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா் பகுதியைச் சோ்ந்த விஜய் (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜய், பிரேமாவை சந்திக்க வரதப்பம்பாளையம் காலனிக்கு வந்துள்ளாா். அங்கு வீட்டில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னா் சிறிது நேரத்தில் விஜய் அங்கிருந்து சென்றுள்ளாா். அவா் சென்ற சில நிமிடங்களில் வீட்டில் பிரேமாவின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் ஓடிவந்து பாா்த்தபோது, பிரேமா உடலில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

    உடல் முழுவதும் தீவிர தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பிரேமா மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரேமா உயிரிழந்தாா்.

    இறப்பதற்கு முன் போலீசாரிடம் பிரேமா அளித்த மரண வாக்குமூலத்தில், விஜய் தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்ததாகத் தெரிவித்துள்ளாா்.இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விஜயிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில், விஜய், பிரேமா ஆகியோா் பழகி வந்த நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பிரேமா பரப்பியதால், ஆத்திரமடைந்த விஜய் பிரேமாவை எரித்துக் கொல்ல முயற்சி செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விஜய்யை கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும் அவரிடமிருந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேறு யாரையாவது காதலித்து ஏமாற்றியுள்ளாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • சத்தியநாராயணா மனைவியின் பேச்சைக் கேட்காமல் கள்ளக்காதலி வீட்டுக்கு சென்று வந்தார்.
    • மகன்களுடன் சேர்ந்து கணவர் மற்றும் கள்ளக்காதலியை சரமாரியாக தாக்கினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், என் டி ஆர் மாவட்டம் கொண்டபள்ளியை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவர் கணவரை பிரிந்து விஜயவாடா சிங்கி நகரில் வசித்து வருகிறார்.

    அதே பகுதியை சேர்ந்த சத்தியநாராயணா என்ற வாலிபருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக மாறியது.

    இவர்களது கள்ளக்காதல் விவகாரம் சத்தியநாராயணாவின் மனைவிக்கு தெரியவந்தது. கள்ளக்காதலை கைவிடும் படி சத்யநாராயணாவிடம் அவரது மனைவி அடிக்கடி வற்புறுத்தி வந்தார்.

    சத்தியநாராயணா மனைவியின் பேச்சைக் கேட்காமல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு கள்ளக்காதலி வீட்டுக்கு சென்று வந்தார்.

    இதனால் கணவரை கையும் களவுமாக பிடிக்க தனது மகன்களுடன் சத்யநாராயணாவின் நடமாட்டத்தை கண்காணித்தார்.

    நேற்று முன்தினம் காலை வேலைக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சத்தியநாராயணா வீட்டிலிருந்து கள்ளக்காதலி வீட்டிற்குச் சென்றார்.

    கணவரை தனது மகன்களுடன் பின்தொடர்ந்து சென்ற அவரது மனைவி கள்ளக்காதலி வீட்டில் உல்லாசமாக இருந்ததை கையும் களவுமாக பிடித்தார்.

    இதையடுத்து மகன்களுடன் சேர்ந்து கணவர் மற்றும் கள்ளக்காதலியை சரமாரியாக தாக்கினார். இதில் சத்யநாராயணா அவரது கள்ளக்காதலி படுகாயம் அடைந்தனர்.

    இவர்களது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் இப்ராஹிம் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சத்யநாராயணா மற்றும் அவரது கள்ளக்காதலியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    கணவரின் நடமாட்டத்தை கண்காணித்து கள்ளக்காதலியையும், கணவரையும் மனைவி சரமரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விஜயகுமாருக்கும், சீதா குமாரிக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    திருப்பதி:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் விஜயகுமாருக்கு அதே பகுதியை சேர்ந்த சீதா குமாரி என்பவருடன் நட்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது .

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விஜயகுமார் தனது கள்ளக்காதலி சீதா குமாரியுடன் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், தொரகுடிபாடுவுக்கு வந்தனர்.

    அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி விஜயகுமார் பால் வியாபாரம் செய்து வந்தார். பால் வியாபாரத்தில் வரும் பணத்தை விஜயகுமார் தனது மனைவிக்கு அனுப்பி வைத்தார்.

    சீதா குமாரியின் செலவுக்கு சரி வர பணம் தரவில்லை. இதனால் விஜயகுமாருக்கும், சீதா குமாரிக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு விஜயகுமார் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது சீதா குமாரி விஜயகுமாரின் கை, கால், கண்ணை கட்டி விட்டு வீட்டில் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து விஜயகுமாரின் மர்ம உறுப்பை அறுத்து வீசி எறிந்தார்.

    மர்ம உறுப்பை அறுக்கும் காட்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

    இதையடுத்து வீட்டின் உரிமையாளருக்கு விஜயகுமாரின் மர்ம உறுப்புகளை அறுக்கும் வீடியோவை அனுப்பி வைத்தார். மேலும் வீட்டின் உரிமையாளருக்கு நடந்த சம்பவங்களை செல்போனில் தெரிவித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சீதா குமாரியை தேடி வருகின்றனர்.

    திருப்பூர் அருகே குடும்பம் நடத்த வரமறுத்த கள்ளக்காதலியை அடித்து கொன்றதால் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் எரிசனாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி சந்திரா (வயது 45). நடராஜன் இறந்துவிட்டார். தனியே வசித்து வந்த சந்திரா அங்குள்ள மில்லில் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று சொரியன் கிணற்றுபாளையம் அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதியில் சந்திரா அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சந்திரா குறித்து விசாரணை நடத்தியபோது அவருக்கும் ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வேலூர் அரக்கோணம் மாறன்கண்டிகை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியனின் மகன் விஸ்வநாதன் (29) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் காங்கயத்தில் தங்கியிருந்தபோது சந்திராவுடன் பழக்கம் ஏற்பட்டது. அதுவே கள்ளக்காதலாக மாறியது. என்னுடன் சேர்ந்து வாழ வரும்படி சந்திராவை அழைத்தேன். ஆனால் அவர் வரமறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து கொலை செய்தேன் என்று கூறினார். இதனையடுத்து விஸ்வநாதனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
    ×