என் மலர்
நீங்கள் தேடியது "கொலை"
- ஒண்ட வந்த பிடாறி, ஊர் பிடாறியை விரட்டிய கதையாக, வேலைக்கு வந்தவர் சொத்தை வளைத்து போட தொடக்கம் முதலே திட்டம் தீட்டியுள்ளார்.
- சிவக்குமார் வசம் இருந்த ஒரு சில சொத்துக்களை பிள்ளையின் எதிர்கால நலனை கூறி தனது பெயருக்கு மாற்றி எழுதி வாங்கியுள்ளார்.
'காட்டன் சிட்டி' என்று அழைக்கப்படும் ராஜபாளையம் 100-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள், பேண்டேஜ் துணி தயாரிப்பு என 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் ஒரு தொழில் நகரமாகும். விசுவாசத்திற்கும், வேட்டைக்கும் பயன்படுத்தப்படும் ஐந்தறிவு ஜீவனான நாய்க்கும் புகழ்பெற்ற ராஜபாளையத்தின் பெயரை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கொடூர கொலை சம்பவம் சற்றே மறக்கடித்து இருக்கிறது.
ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தின் முன்பாக சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்வீட் ஸ்டால் நடத்தி வந்த குருசாமி ராஜாவின் மறைவுக்கு பிறகு அவரது மகன் சிவக்குமார் (வயது 43) தொடர்ந்து அந்த கடையை நடத்தி வந்தார். பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த திருமணம், குழந்தை பிறப்புக்கு பிறகு கசந்ததால் அவரை கோர்ட்டுக்கு சென்று விவகாரத்து பெற்ற சிவக்குமார் தன்னுடைய கடைக்கு வேலைக்கு வந்த நெல்லை மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தன்னை விட 20 வயது குறைந்த காளீஸ்வரி (23) என்பவரை 2-வதாக திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு குருசரண் (2) என்ற ஒரு மகன் உள்ளார். தீபாவளி பண்டிகை அன்று ஒரே வண்ணத்தில் கணவன், மனைவி, குழந்தை புத்தாடை அணிந்து உற்சாகத்துடன் தீபாவளியை கொண்டாடிய சிவக்குமார், அதேநாள் தந்தையின் நினைவு தினம் என்பதால் மனைவி, குழந்தையை அழைத்துக் கொண்டு ராஜபாளையம் சஞ்சீவி மலை அடிவாரத்தில் உள்ள தந்தையின் கல்லறை தோட்டத்திற்கு அஞ்சலி செலுத்த சென்றார்.
அப்போது அங்கு 4 பேர் அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்ததாகவும், அவர்களை சிவக்குமார் கண்டித்ததால் அவர்கள் ஒன்று சேர்ந்து தாக்கியதில் சிவக்குமார் மயங்கி விட்டதாகவும் பதறியடித்துக்கொண்டு சிவக்குமாரின் மனைவி காளீஸ்வரி ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அங்கு சென்று போலீசார் பார்த்த போது, சிவக்குமார் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
அங்கேயே போலீசாருக்கு சந்தேகப்பொறி தட்டியது. இருந்தபோதிலும் உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர டி.எஸ்.பி. பிரீத்தி தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதேநேரத்தில் காளீஸ்வரியையும் போலீசார் தங்கள் வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அப்போது கூட கணவர் கொலை செய்யப்பட்ட சலனம் சற்றும் இல்லாமல் இயல்பாக நடந்து கொண்ட காளீஸ்வரியிடம் பிடியை இறுக்கிய போலீசார், அவர் கூறிய தகவல்களை கேட்டு உறைந்து போனார்கள்.
அதாவது ஒண்ட வந்த பிடாறி, ஊர் பிடாறியை விரட்டிய கதையாக, வேலைக்கு வந்தவர் சொத்தை வளைத்து போட தொடக்கம் முதலே திட்டம் தீட்டியுள்ளார். இவரிடம் மயங்கிய பின்னரே சிவக்குமார் முதல் மனைவியை விவகாரத்தும் செய்ய துணிந்துள்ளார். பஸ் நிலையம் எதிரே சுமார் ரூ.15 கோடிக்கும் மேல் பெறுமானமுள்ள ஸ்வீட் ஸ்டால், ஏராளமான வீடுகள், பல ஏக்கர் பரப்பளவில் நிலங்கள், தந்தையின் பெயரில் தொடங்கப்பட்ட அறக்கட்டளை சொத்துக்கள் அனைத்தும் தனக்கே, தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்த காளீஸ்வரி, கணவரை கொலை செய்யவும் நேரம் குறித்தார். கொலை செய்யும் அளவுக்கு செல்ல முக்கிய காரணம், ஸ்வீட் ஸ்டால் நிர்வாகத்தை மனைவியிடம் கொடுத்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் கன்சல்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்த சிவக்குமாருக்கு, அங்கும் ஒரு பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டு தொடர்பு நீடித்துள்ளது. இதனை அறிந்துகொண்ட காளீஸ்வரி சொத்தில் பங்கு போட அந்த பெண்ணும் வந்துவிடுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக சிவக்குமார் வசம் இருந்த ஒரு சில சொத்துக்களை பிள்ளையின் எதிர்கால நலனை கூறி தனது பெயருக்கு மாற்றி எழுதி வாங்கியுள்ளார். இதற்கிடையே சிவக்குமார் ராஜபாளையத்தை சேர்ந்த கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த யோகா மாஸ்டர் அய்யப்பனுக்கு, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6 லட்சம் பணம் வாங்கியுள்ளார். ஆனால் வேலை வாங்கி தராததோடு, பணத்தை திரும்ப தருவதில் ஏற்பட்ட தாமதத்தால் அவரை தனக்கு சொந்தமான வீட்டிலேயே சிவக்குமார் வாடகைக்கு வைத்துள்ளார்.
யோகா பயிற்சியாளராக இருந்த அய்யப்பன், காலப்போக்கில் அதனை மறந்து அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த காளீஸ்வரிக்கும் யோகா, சிலம்பம் கற்றுத்தரும் சாக்கில் ஒட்டி, உறவாடி அவரை மடக்கிப்போட்டார். கணவர் இருப்பதோ சென்னை, கள்ளக்காதலன் வசிப்பதோ தனது வீட்டில்..., யாருக்கும் சந்தேகம் வராது என்று எண்ணிய காளீஸ்வரி அய்யப்பனுக்கு நாள்தோறும் உல்லாச விருந்து படைத்து வந்துள்ளார். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதுபோல், சிவக்குமாருக்கு இந்த கள்ளக்காதல் விஷயம் தெரியவந்து, மனைவியை கண்டித்துள்ளார். மேலும் காளீஸ்வரியின் சகோதரி ராஜபாளையம் அருகே தெற்கு தேவதானம் கிராமத்தில் வசித்து வருகிறார். திருமணம் ஆகாத அவரையும் அழைத்து வா உன்னுடன் சேர்த்து அவருடனும் குடும்பம் நடத்துகிறேன் என்றும் சிவக்குமார் கூறி உள்ளார்.
அப்போது முதல் கணவரை தீர்த்துக்கட்ட தருணம் பார்த்த காளீஸ்வரிக்கு கிடைத்ததோ, தீபாவளி பண்டிகையுடன் மாமனாரின் நினைவு தினம். தந்தை இறந்த நாளிலேயே மகனுக்கு நினைவு தினத்தை தீர்மானித்த காளீஸ்வரி, அதற்கு பகடைக்காயாக கள்ளக்காதலன் அய்யப்பன், அவரது நண்பர் விக்னேஸ்வரன், மேல ஆப்பனூரை சேர்ந்த மருதுபாண்டியன் ஆகியோரை பயன்படுத்தினார். பக்காவாக ஸ்கெட்ச் போட்டு பகல் முழுவதும் கணவரை மகிழ்வித்த காளீஸ்வரி, அந்திசாயும் மாலை வேளையில் மாமனாரின் கல்லறை அமைந்துள்ள பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
முதலில் அங்கு தயாராக இருந்த அய்யப்பன், விக்னேஸ்வரன், மருதுபாண்டியன் ஆகியோர் மூலம் சொத்துக்களை காளீஸ்வரியின் பெயருக்கு மாற்றி எழுதித்தருமாறு மிரட்டியுள்ளார். ஆனால் மறுத்ததால் நண்பர்களுடன் சேர்ந்து சென்னையில் இருந்து தீபாவளி கொண்டாட வந்த சிவக்குமாரை கழுத்தை அறுத்து கொலை செய்ய கூறியுள்ளார். அவர் திட்டமிட்டபடியே கொலையும் அரங்கேறியுள்ளது.
இதில் அதிர்ச்சி தரும் மற்றொரு தகவல் நமக்கு தனிப்படை போலீஸ் மூலம் கிடைத்தது. என்னவென்றால், காளீஸ்வரியின் கள்ளக்காதலை அறிந்து முதலில் அதிர்ச்சி அடைந்த சிவக்குமார், இவளை இப்படியே விட்டுவைத்தால் சமுதாயத்தில் தனக்கு இருக்கும் நல்ல பெயர் கெட்டுவிடும், எனவே தக்க சமயம் பார்த்து காளீஸ்வரியை போட்டுத்தள்ள நினைத்திருந்தார். ஆனால் முந்திக் கொண்ட காளீஸ்வரி சற்றும் சலனமின்றி கணவரை கொடூரமாக கொலை செய்துள்ளார். உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இன்று உள்ளே சென்ற காளீஸ்வரியால் தவிப்பது சிவக்குமார் மூலம் பெற்றெடுத்த 2 வயது குழந்தைதான்.
மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த வைரவன்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மகன் பெரியகருப்பன் (வயது 20) தேங்காய் பறிக்கும் தொழிலாளி.
இவரும், வைரவன்பட்டியை சேர்ந்த தனசேகரன் என்பவர் மனைவி முத்துச்செல்வியும் ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் பெரியகருப்பனும் தனசேகரன் மனைவியும் நெருங்கி பழகி வந்ததாகவும், அவர்களுக்கிடையே தகாத உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெரியகருப்பனுடன் தனது மனைவி தனியாக பேசி கொண்டிருப்பதை தனசேகரன் பார்த்து விட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக அவர் தனது நண்பர்கள் சிலரிடம் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை தனசேகரன் உள்ளிட்ட சிலர் பெரியகருப்பனை சந்தித்து அவருடன் தகராறு செய்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தனசேகரன் மற்றும் அவரது நண்பர்கள் பெரியகருப்பனை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த பெரியகருப்பனை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி பெரியகருப்பனின் தந்தை மணிகண்டன் கொட்டாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பழனியப்பன், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கொலை செய்த தனசேகரன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஜோதி மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மனைவி இந்திராணி, இவர்களது மகன் கஜேந்திரன் (வயது43) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சரஸ்வதி என்ற மனைவியும், சுரேஷ் (15) என்ற மகனும், சமித்ரா (14) என்ற மகளும் உள்ளனர்.
கஜேந்திரனுக்கும் சரஸ்வதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக சரஸ்வதி தனது தாய் வீடான ஆர்.கே.பேட்டை அருகே உள்ள ராஜா நகரம் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 15நாட்களுக்கு முன் கஜேந்திரனின் மகன் சுரேஷ் ராஜா நகரத்தில் நடைப்பெற்ற தீமிதி திருவிழாவில் காப்பு கட்டியிருந்த நிலையில் குளத்திற்கு குளிக்கப் சென்ற போது நீரில் முழ்கி இறந்தான்.
தன் மகன் இறந்த சோகத்தில் கஜேந்திரன் குடிக்கு அடிமையாகி உள்ளதாக கூறப்படுகிறது.
தன்மகன் இறப்புக்கு மனைவியின் அஜாக்கிரதைதான் காரணம் என மனைவியுடன் கடந்த 10 நாட்களாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது மனைவி சரஸ்வதியை அழைத்து வந்து வீட்டில் வைத்து பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார்.
இரவு திரும்பி வந்து பார்த்தபோது மனைவி சரஸ்வதியை காணவில்லை இதனால் ஆத்திரம் அடைந்த கஜேந்திரன் தனது தந்தை கன்னியப்பனிடம் சரஸ்வதி குறித்து கேட்டுள்ளார்.
அப்போது கன்னியப்பனுக்கும் கஜேந்திரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பானது. இதில் கஜேந்திரன் கன்னியப்பன் கன்னத்தில் அறைந்து தாக்கினார். அருகில் இருந்த கட்டிலில் விழுந்து கன்னியப்பன் காயமடைந்தார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்த சோளிங்கர் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் இந்திராணியும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை:
மதுரை வரிச்சியூரை அடுத்த தட்சனேந்தல் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 52). இடையபட்டி ஊராட்சி செயலாளரான இவர் கருப்புக்கால் காளி அம்மன் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார்.
லட்சுமணன் இன்று அதிகாலை கோவிலுக்கு பூஜை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். அப்போது வரிச்சியூர்-தச்சனேந்தல் மெயின்ரோட்டில் மர்ம கும்பல் அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டது. இதையடுத்து லட்சுமணனுக்கும், அந்த கும்பலுக்கும் வாக்குவாதம் வலுத்தது.
இதில் ஆத்திரம் அடைந்த மர்ம கும்பல், லட்சுமணனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் அவருக்கு தலை மற்றும் மார்பு ஆகிய பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.
அரிவாள் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய லட்சுமணனை அந்த பகுதியை சேர்ந்த சிலர் மீட்டு, ஆம்புலன்சில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே லட்சுமணன் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக கருப்பாயூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில்சில தகவல்கள் கிடைத்தன. லட்சுமணனின் தந்தை சன்னாசிக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் 2-வது மனைவியின் மகன் லட்சுமணன், கருப்புக்கால் காளியம்மன் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார்.
இது சன்னாசியின் முதல் மனைவியின் மகன்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்திருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் லட்சுமணனை வெட்டி கொன்றனரா?
அல்லது வேறு பிரச்சினை காரணமாக யாரேனும் அவரை கொலை செய்தார்களா? என்பது தெரியவில்லை இதுதொடர்பாக கருப்பாயூரணி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான லட்சுமணனுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
அம்பத்தூர்:
கொரட்டூரை அடுத்த மாதனாங்குப்பத்தில் பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் தனிப்படைபோலீசார் இன்று காலை மாதனாங்குப்பம், பஜனை கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர்.
அங்கு 7பேர் கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பது தெரிந்தது. இதையடுத்த அவர்கள் அனைவரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள், ஆவடியை சேர்ந்த பிரகாஷ்,புத்தாகரம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், கல்பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ், வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், பெரம்பலூரை சேர்ந்த இசாக், திருமுல்லைவாயிலை சேர்ந்த கிருஷ்ணகுமார், வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த ஐசக் ராபர்ட் என்பது தெரிந்தது.
அவர்களிடம் இருந்து 5 ஆசிட் பாட்டில்கள், 5 மோட்டார் சைக்கிள், 7 செல்போன்கள், 2 கிலோ கஞ்சா மற்றும் 11 அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
பிடிபட்டவர்கள் பெரம்பூரை சேர்ந்த 3 பேரை தீர்த்து கட்ட அரிவாளுடன் பதுங்கி இருந்தது. விசாரணையில் தெரியவந்தது. கைதான பிரகாஷ், பாலகிருஷணன் ஆகியோருக்கும் பெரம்பூரை சேர்ந்தவர்களுக்கும் இடையே நேற்றுமாலை தகராறு ஏற்பட்டு உள்ளது.
இந்த மோதலில் பெரம்பூரை சேர்ந்த 3 வாலிபர்களையும் ஒரே நேரத்தில் தீர்த்து கட்ட அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
சரியான நேரத்தில் போலீசார் அவர்களை கைது செய்ததால் கொலைதிட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது. கைதான 7 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமுடிமண் பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் லெட்சுமண
பெருமாள். இவருக்கு செல்வக்குமார்(வயது 24), கார்த்தி(22) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
செல்வக்குமாருக்கு திருமணமாகி ஜெயந்தி என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர் காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். தனது மனைவியின் ஊரான விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அமீர்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கார்த்தி ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கு திருமணமாகி மாலினி(22) என்ற மனைவி உள்ளார். இவர் தனது பெற்றோருடன் ஒன்றாக வசித்து வந்தார். சமீபகாலமாக கார்த்திக்குக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால் அவர் தனது பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். உடனே அவரது தாயாரும் தன்னிடம் இருந்த நகை மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார்.
இதுபற்றி அறிந்த செல்வக்குமார், தனக்கும் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவரது பெற்றோர், கார்த்தி பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வந்ததால் கொடுத்தோம் என்று கூறி உள்ளனர். ஆனாலும் செல்வக்குமார் அடிக்கடி பணத்தை கேட்டு சண்டை போட்டு வந்துள்ளார்.
சமீபத்தில் விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு வந்த செல்வகுமார், நேற்று இரவு தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார். அங்கு லெட்சுமண பெருமாள் மற்றும் கார்த்தியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது வாக்குவாதம் முற்றவே, தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கார்த்தியை செல்வக்குமார் குத்தினார். இதில் கார்த்தியின் மார்பில் கத்திக்குத்து விழுந்தது.
உடனே அருகில் நின்று கொண்டிருந்த அவரது உறவினர் கண்ணன், தடுக்க முயன்றார். அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில், சரிந்து விழுந்த கார்த்தி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
பின்னர் அங்கிருந்து செல்வக்குமார் தப்பி ஓடினார். இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டப்பிடாரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வக்குமாரை மீட்டு ஒட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக கார்த்தியின் மனைவி மாலினி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்தனர்.
அம்பத்தூர்:
அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் உதயகுமார் (28). தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மோசஸ் என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு உதயகுமார் மோசசின் வீட்டுக்குச் சென்று அவரது தாயாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மோசஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் 7 பேர் கொண்ட கும்பல் உதயகுமாரை அடித்து அங்கிருந்து கடத்தி சென்று அதே பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து கத்தியால் வெட்டி கொலை செய்தனர்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த உதவி கமிஷனர் கனகராஜ், இன்ஸ்பெக்டர் ராமசாமி ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உதயகுமாருக்கு, மோசசுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. அதன் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை செய்துவருகின்றனர்.
இக்கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் சரண், அவரது நண்பர் அப்புன், ஆகியோரை கைது செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள மோசஸ் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை உத்தங்குடி மெயின் ரோடு அருகே தட்டான்குளம் பகுதியில் வாலிபர் ஒருவர் அரிவாள் வெட்டு காயங்களுடன் இறந்து கிடப்பதாக கே.புதூர் போலீசுக்கு இன்று தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு வாலிபர் ஒருவர் அரிவாள் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். அவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமரன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து அங்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி விட்டு நின்று விட்டது. மேலும் தடயவியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் கைரேகை மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து கே.புதூர் போலீசார் கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து வாலிபரை கொலை செய்த நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் ஒத்தக்கடை மாயாண்டி புரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் தவசி (20) என்பதும் அவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இவர் நேற்று இரவு அந்த பகுதியில் நண்பர்களுடன் ஒன்றாக சுற்றித் திரிந்ததாக பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.
நேற்று இரவு தவசி நண்பர்களுடன் அந்த பகுதியில் ஒன்றாக உட்கார்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்போது நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானின் லக்கி ஷா சதார் பகுதியைச் சேர்ந்தவர் சுல்பிகர் ஜிஸ்கானி. இவரது மனைவி பாப்லி ஜிஸ்கானி. சுல்பிகர் ரூ. 1 லட்சத்திற்காக தனது மகள் ஹுமேராவை ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றுள்ளார். இதைத் தடுத்த பாப்லியை சுல்பிகர் கழுத்தை நெறித்து கொன்றுள்ளார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பாப்லியின் சகோதரர் முனவ்வர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சுல்பிகரை கைது செய்துள்ளனர். மேலும் ஏற்கெனவே, சுல்பிகர் தன்னுடைய இரண்டு மகள்களையும் இதுபோல பணத்திற்காக விற்று விட்டதாகவும் முனவ்வர் தெரிவித்துள்ளார்.
விரைவில் இதுகுறித்த விசாரணை தொடங்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். செஹ்வான் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, பாப்லி ஜிஸ்கானியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.