search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Thoothukudi Murder"

  • கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் ? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் ? என்ற விபரம் தெரியவில்லை. அவர் நீலநிற லுங்கி மற்றும் சட்டை அணிந்திருந்தார்.
  • அவரது கையில் ஆங்கிலத்தில் ஏ.எம். என பச்சை குத்தப்பட்டிருந்தது. கொலை செய்யப்பட்ட வாலிபரின் காது மற்றும் தலைப்பகுதியில் பாட்டிலால் தாக்கப்பட்டதற்கான காயங்கள் உள்ளது.

  கயத்தாறு:

  தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தளவாய்புரம் நாற்கர சாலையில் இன்று காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் கயத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

  சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், பால், காசிலிங்கம், மாரியப்பன், தனிப்படை ஏட்டு பிரித்திவிராஜ் ஆகியோர் விரைந்து சென்றனர்.

  கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் ? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் ? என்ற விபரம் தெரியவில்லை. அவர் நீலநிற லுங்கி மற்றும் சட்டை அணிந்திருந்தார்.

  அவரது கையில் ஆங்கிலத்தில் ஏ.எம். என பச்சை குத்தப்பட்டிருந்தது. கொலை செய்யப்பட்ட வாலிபரின் காது மற்றும் தலைப்பகுதியில் பாட்டிலால் தாக்கப்பட்டதற்கான காயங்கள் உள்ளது.

  மேலும் அவரது உடல் அருகே காலியான பீர்பாட்டில்கள், கோழி இறைச்சி உள்ளிட்டவைகள் கிடந்தன. எனவே நேற்று இரவு நண்பர்கள் சேர்ந்து மது குடித்த போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மதுபாட்டிலால் வாலிபரை தாக்கி கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

  அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் ? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் ? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • சமீபகாலமாக மாரி-முத்துமாலைக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
  • இதுதொடர்பாக இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

  தூத்துக்குடி:

  தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவமாயன் காலனியை சேர்ந்தவர் முனியசாமி (வயது 70), மீனவர்.

  இவரது மனைவி கன்னியம்மாள். இவர்களுக்கு 2 மகன், 2 மகள்கள் உள்ளனர். கடைசி மகன் மணிமன்னன். இவருக்கு திருமணமாகி முத்துமாலை (20) என்ற மகள் உள்ளார்.

  இவருக்கும் திரேஸ்புரத்தை சேர்ந்த மாரி (24) என்பவருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

  சமீபகாலமாக மாரி-முத்துமாலைக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதுதொடர்பாக இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மாலை முனியசாமி தனது பேத்தி முத்துமாலையை பார்ப்பதற்காக திரேஸ்புரம் சென்றார்.

  அப்போது அங்கிருந்த மாரியின் சகோதரர்கள் சின்னத்தம்பி, சேர்மன் மற்றும் அவரது உறவினரான லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த ஓட்டை என்ற கருப்பசாமி ஆகிய 3 பேரும் எப்படி இங்கே வரலாம் என கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

  தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த 3 பேரும் வாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் முனியசாமி கீழே சரிந்து விழுந்தார்.

  இதற்கிடையே முனியசாமியை தேடி அவரது குடும்பத்தினர் திரேஸ்புரம் வந்தனர்.

  அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

  சம்பவ இடத்திற்கு வடபாகம் இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

  இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இன்று காலை சின்னத்தம்பி, சேர்மன், ஓட்டை என்ற கருப்பசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

  தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே பெற்றோர் பணம் தராததால் ஆத்திரமடைந்த ராணுவ வீரர், தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  ஒட்டப்பிடாரம்:

  தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமுடிமண் பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் லெட்சுமண 
  பெருமாள். இவருக்கு செல்வக்குமார்(வயது 24), கார்த்தி(22) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

  செல்வக்குமாருக்கு திருமணமாகி ஜெயந்தி என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர் காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். தனது மனைவியின் ஊரான விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அமீர்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

  கார்த்தி ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கு திருமணமாகி மாலினி(22) என்ற மனைவி உள்ளார். இவர் தனது பெற்றோருடன் ஒன்றாக வசித்து வந்தார். சமீபகாலமாக கார்த்திக்குக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால் அவர் தனது பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். உடனே அவரது தாயாரும் தன்னிடம் இருந்த நகை மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார்.

  இதுபற்றி அறிந்த செல்வக்குமார், தனக்கும் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவரது பெற்றோர், கார்த்தி பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வந்ததால் கொடுத்தோம் என்று கூறி உள்ளனர். ஆனாலும் செல்வக்குமார் அடிக்கடி பணத்தை கேட்டு சண்டை போட்டு வந்துள்ளார்.

  சமீபத்தில் விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு வந்த செல்வகுமார், நேற்று இரவு தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார். அங்கு லெட்சுமண பெருமாள் மற்றும் கார்த்தியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

  அப்போது வாக்குவாதம் முற்றவே, தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கார்த்தியை செல்வக்குமார் குத்தினார். இதில் கார்த்தியின் மார்பில் கத்திக்குத்து விழுந்தது.

  உடனே அருகில் நின்று கொண்டிருந்த அவரது உறவினர் கண்ணன், தடுக்க முயன்றார். அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில், சரிந்து விழுந்த கார்த்தி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

  பின்னர் அங்கிருந்து செல்வக்குமார் தப்பி ஓடினார். இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டப்பிடாரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வக்குமாரை மீட்டு ஒட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

  ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக கார்த்தியின் மனைவி மாலினி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்தனர்.
  ஒட்டப்பிடாரம் அருகே இன்று அதிகாலையில் தொழிலாளியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது தொடர்பாக அவரது அண்ணன் போலீசில் சரணடைந்துள்ளார்.
  ஒட்டப்பிடாரம்:

  தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சிலோன் காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). தொழிலாளி. இவரது மனைவி புவனேஷ்வரி (40). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

  முருகன் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி உள்ளார். இதனை தனது தந்தையிடம் காட்டுவதற்காக நேற்று இரவு பசுவந்தனை அருகே உள்ள தெற்கு பொம்மையாபுரத்தில் உள்ள தந்தை ஆறுமுகம் என்ற புலிப்பாண்டி வீட்டிற்கு சென்றார். பின்னர் வெகுநேரமாகி விட்டதால் அங்கேயே தூங்கி விட்டார்.

  இன்று அதிகாலை அங்கு தூங்கி கொண்டிருந்த முருகனை அவரது அண்ணன் முனியசாமி என்பவர் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

  பின்னர் முனியசாமி பசுவந்தனை போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். மணியாச்சி போலீஸ் டி.எஸ்.பி. சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரண் அடைந்த முனியசாமியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

  புலிப்பாண்டிக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இதில் மூத்தமகனான முனியசாமிக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

  இதனால் புலிப்பாண்டி தனது சொத்துக்களை மற்ற 2 மகன்களுக்கு எழுதிவைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தம்பிகள் மீது முனியசாமி ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

  இந்தச்சூழ்நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வந்த முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
  தூத்துக்குடியில் தலை துண்டித்து திருநங்கை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கோவில் பூசாரி மற்றும் அவரது நண்பரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
  தூத்துக்குடி:

  தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கப்புரத்தை சேர்ந்தவர் ராஜாமான்சிங் என்ற ராசாத்தி (வயது 38). திருநங்கையான இவர் தாளமுத்துநகர் முருகன் தியேட்டர் அருகே உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் பூசாரியாகவும், கோவில் நிர்வாகத்தை கவனித்தும் வந்தார்.

  இவருக்கும், அந்த கோவிலில் ஏற்கனவே பூசாரியாக இருந்த பூபால்ராயர்புரத்தை சேர்ந்த பாண்டி மகன் மருது(26) என்பவருக்கும் கோவிலில் பூஜை செய்வது, நிர்வாகத்தை கவனித்து கொள்வது தொடர்பாக முன்விரோதம் இருந்தது. தற்போது அந்த கோவிலில் கொடை விழா நடக்க உள்ளது. அதற்காக ராசாத்தி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து நன்கொடை வசூல் செய்து கோவில் கொடை விழாவிற்கு பத்திரிகை அடித்துள்ளார்.

  அந்த பத்திரிகையில் மருதுவின் பெயரை போடவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த மருது தனது நண்பருடன் நேற்று முன்தினம் மாலையில் கோவிலுக்கு சென்றார். அங்கு கோவில் முன்பு நின்று கொண்டிருந்த ராசாத்தியிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டி தலையை துண்டித்து படுகொலை செய்தார்.

  இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையில், வடபாகம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜாமணி, சங்கர், ஞானராஜ், ஜீவமணி தர்மராஜ் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

  தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஒரு காட்டு பகுதியில் கொலையாளிகள் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்றனர். ஆனால் அதற்குள் கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

  தலைமறைவாக உள்ள பூசாரி மருது மற்றும் அவரது நண்பரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
  தூத்துக்குடியில் நள்ளிரவில் கள்ளக்காதலி வீட்டில் மீனவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
  தூத்துக்குடி:

  தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தை சேர்ந்தவர் சகாயமணி(வயது35). மீனவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. அதேபகுதியை சூசை மரியம்நகரை சேர்ந்தவர் மைக்கேல்ஜெயராஜ்(47). இவரது மகள் கலா(26). இவரை கீழ சண்முகபுரத்தை சேர்ந்த பெரியசாமி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். பெரியசாமி திருப்பூரில் வேலை செய்து வருகிறார்.

  இதனால் கலா தனது தந்தை ஊரான சூசை மரியம் நகரில் தந்தையின் வீடு அருகே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். அப்போது சகாயமணிக்கும், கலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி கலாவின் வீட்டுக்கு சென்ற சகாயமணி கலாவை தனிமையில் சந்தித்து பேசி வந்தார்.

  இந்த விவரம் அக்கம்பக்கத்தினர் மூலமாக மைக்கேல் ஜெயராஜூக்கு தெரியவந்தது. அவர் தனது மகளையும், சகாயமணியையும் கண்டித்தார். எனினும் அவர்களது கள்ளக்காதல் நீடித்தது. இந்த நிலையில் சகாயமணி நேற்று இரவு கலாவின் வீட்டுக்கு சென்றார். அங்கு நள்ளிரவுவரை கலாவுடன் இருந்தார்.

  இதை அறிந்த மைக்கேல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் நிகோலஸ் மணி ஜான்சன்(20), இன்னொரு மகன் ஆகிய 3 பேர் அங்கு சென்றனர். அப்போது அவர்களுக்கும் சகாயமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த மைக்கேல்ஜெயராஜ் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து சகாயமணியை கம்பாலும், கைகளாலும் தாக்கினர். இதில் பலத்தகாயம் அடைந்த சகாயமணி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

  இதுபற்றி தருவைகுளம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சகாயமணியை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

  இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து மைக்கேல் ஜெயராஜ், நிகோலஸ்மணி ஜான்சன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலை சம்பவம் தருவைகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  தூத்துக்குடி அருகே மீனவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை- மகன்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
  தூத்துக்குடி:

  தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் 125 வீடு காலனி பகுதியை சேர்ந்த மீனவர் தொம்மை அந்தோணி (வயது 33). தொம்மை அந்தோணியின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மைக்கேல்சாமி (48). டிரைவராக பணிபுரிந்து வரும் இவர் தொம்மை அந்தோணி வீட்டின் பின்புறம் உள்ள காலியிடத்தில் கடந்த ஒரு ஆண்டாக பன்றிகளை பட்டி போட்டு அதில் அடைத்து வளர்த்து வருகிறார்.

  தொம்மை அந்தோணிக்கு 4 குழந்தைகள் இருந்தனர். அவர்களில் 2 குழந்தைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதித்து இறந்துவிட்டனர். தனது வீட்டின் பின்னால் மைக்கேல் சாமி பன்றிகள் வளர்த்ததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்பரவி தனது குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததாக தொம்மை அந்தோணி கருதினார்.

  இதனால் அவர் அந்த பட்டியை அகற்றுமாறு மைக்கேல் சாமியிடம் கூறி வந்தார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதின் காரணமாக முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வந்த தொம்மை அந்தோணி, தனது வீட்டுக்கு பின்னால் இருந்த பன்றிகள் வளர்க்கப்பட்ட பட்டிக்கு தீவைத்து விட்டதாக கூறப்படுகிறது.

  இதனையறிந்த மைக்கேல் சாமி தனது மகன்கள் மற்றும் உறவினர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று தொம்மை அந்தோணியிடம் தகராறு செய்தார். தகராறு முற்றவே அவர்கள் மீன் வெட்டும் கத்தியால் தொம்மை அந்தோணியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மலிங்கம், குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். தொம்மை அந்தோணி கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  கொலையாளிகளை பிடிக்க விளாத்திகுளம் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

  இந்நிலையில் மைக்கேல் சாமி, அவரது மகன்கள் நெப்போலியன் (24), ஜான்சன் (21), உறவினர் ஜெயராஜ் (36), அவரது அண்ணன் தனபால் (42) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். கொலை குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
  தூத்துக்குடியில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை அனுப்பாத ஆத்திரத்தில் மாமனாரை கழுத்தை நெரித்து கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.
  தூத்துக்குடி:

  தூத்துக்குடி பாக்கிய நாதன்விளையை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 52). சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி லீலாவதி. இவர்களுக்கு மாரியம்மாள், வெள்ளையம்மாள் என்ற மகள்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது.

  மாரிமுத்துவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் அவரது மனைவி லீலாவதி தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் கூலி வேலைக்கு சென்று வந்தார்.

  மகள் மாரியம்மாளின் கணவர் காளிராஜ் (43). இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள டானா பகுதி ஆகும். மீன் வியாபாரியான காளிராஜிக்கும், மாரியம்மாளுக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.

  தகராறு நடக்கும் போதெல்லாம் மாரியம்மாள் தனது 4 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்து விடுவார். அதேபோல் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்டது.

  இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு மாரியம்மாள் தனது குழந்தைகளுடன் பாக்கியநாதன்விளையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். பின்னர் குழந்தைகளை அதே பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் சேர்த்தார். குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தூத்துக்குடியில் உள்ள இரும்பு குடோனுக்கு மாரியம்மாள் வேலைக்கு சென்று வந்தார்.

  இந்தநிலையில் நேற்று காலையில் லீலாவதி, மாரியம்மாள் ஆகியோர் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் மாரிமுத்து மட்டும் தனியாக இருந்தார். மதியம் பக்கத்து தெருவில் வசித்து வரும் மற்றொரு மகள் வெள்ளையம்மாள் தனது தந்தை வீட்டுக்கு வந்தார்.

  அப்போது வீட்டில் மாரிமுத்து இறந்த நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

  இதுகுறித்து உடனடியாக தாளமுத்துநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாரிமுத்துவின் கழுத்து பகுதியில் கயிற்றை கொண்டு நெரித்த தடம் மற்றும் பின் தலையில் ரத்த காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  இதுகுறித்து தாள முத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நேற்று காலையில் காளிராஜ் தனது மனைவியை அழைத்து செல்ல பாக்கியநாதன்விளைக்கு வந்தார். ஆனால் வீட்டில் மாரிமுத்து மட்டும் இருந்துள்ளார்.

  அப்போது மாரியம்மாளை தன்னுடன் அனுப்பி வைக்கும்படி காளிராஜ் தெரிவித்தார். ஆனால் மாரிமுத்து மறுத்துவிட்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த காளிராஜ் வீட்டில் இருந்த கயிற்றை எடுத்து மாரிமுத்து கழுத்தை நெரித்து கீழே தள்ளி கொடூரமாக கொலை செய்துள்ளார். கீழே விழுந்ததில் அவரது தலையில் காயம் ஏற்பட்டு ரத்த வழிந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து காளிராஜ் அங்கு இருந்து தப்பி சென்றுவிட்டார்.

  இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய காளிராஜை வலைவீசி தேடினர். அவருக்கு சொந்தஊர் வி.கே.புரம் என்பதால் அங்கு அவர் பதுங்கி இருக்கலாம் என போலீசார் கருதினர்.

  அவரை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், போலீஸ்காரர்கள் சுடலை, செல்வகுமார், சந்திரமோகன் ஆகியோர் அடங்கி தனிப்படை போலீசார் வி.கே. புரத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த காளிராஜை கைது செய்தனர்.

  ×