என் மலர்

  செய்திகள்

  தூத்துக்குடியில் கள்ளக்காதலி வீட்டில் மீனவர் அடித்துக்கொலை- 3 பேர் கைது
  X

  தூத்துக்குடியில் கள்ளக்காதலி வீட்டில் மீனவர் அடித்துக்கொலை- 3 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடியில் நள்ளிரவில் கள்ளக்காதலி வீட்டில் மீனவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
  தூத்துக்குடி:

  தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தை சேர்ந்தவர் சகாயமணி(வயது35). மீனவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. அதேபகுதியை சூசை மரியம்நகரை சேர்ந்தவர் மைக்கேல்ஜெயராஜ்(47). இவரது மகள் கலா(26). இவரை கீழ சண்முகபுரத்தை சேர்ந்த பெரியசாமி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். பெரியசாமி திருப்பூரில் வேலை செய்து வருகிறார்.

  இதனால் கலா தனது தந்தை ஊரான சூசை மரியம் நகரில் தந்தையின் வீடு அருகே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். அப்போது சகாயமணிக்கும், கலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி கலாவின் வீட்டுக்கு சென்ற சகாயமணி கலாவை தனிமையில் சந்தித்து பேசி வந்தார்.

  இந்த விவரம் அக்கம்பக்கத்தினர் மூலமாக மைக்கேல் ஜெயராஜூக்கு தெரியவந்தது. அவர் தனது மகளையும், சகாயமணியையும் கண்டித்தார். எனினும் அவர்களது கள்ளக்காதல் நீடித்தது. இந்த நிலையில் சகாயமணி நேற்று இரவு கலாவின் வீட்டுக்கு சென்றார். அங்கு நள்ளிரவுவரை கலாவுடன் இருந்தார்.

  இதை அறிந்த மைக்கேல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் நிகோலஸ் மணி ஜான்சன்(20), இன்னொரு மகன் ஆகிய 3 பேர் அங்கு சென்றனர். அப்போது அவர்களுக்கும் சகாயமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த மைக்கேல்ஜெயராஜ் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து சகாயமணியை கம்பாலும், கைகளாலும் தாக்கினர். இதில் பலத்தகாயம் அடைந்த சகாயமணி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

  இதுபற்றி தருவைகுளம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சகாயமணியை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

  இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து மைக்கேல் ஜெயராஜ், நிகோலஸ்மணி ஜான்சன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலை சம்பவம் தருவைகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  Next Story
  ×