என் மலர்
நீங்கள் தேடியது "Kalla Kadhal"
- இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
- போலீசார் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
ஈரோடு பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகள் கீர்த்தி மீனா (வயது 21). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரை சேர்ந்த சிவக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தொடர்ந்து சிவக்குமார்- கீர்த்தி மீனா தம்பதியினர் திருப்பூர், இடுவம்பாளையம், சிவசக்தி நகர் 2-வது வீதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், சிவக்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இது குறித்து கீர்த்தி மீனா சிவக்குமாரிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிவக்குமார் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை கீர்த்தி மீனாவின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார்.
வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த கீர்த்தி மீனா வீட்டில் குழந்தையை தூங்க வைத்துவிட்டு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வீரபாண்டி போலீசார் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கீர்த்தி மீனாவிற்கு திருமணமாகி 7 ஆண்டுகள் நிறைவடையாததால் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- நேஹாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜிதேந்திரா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் நேஹா. தன் கணவர் நாகேஷ்வருடன் சொந்த கிராமத்தில் வசித்து வந்தார். இருவருக்கும் திருமணம் முடிந்த நாளில் இருந்து மனஸ்தாபம் இருந்து வந்துள்ளது. ஒருவரை ஒருவர் விரும்பாமலேயே வாழ்ந்து வந்துள்ளனர். நேஹா விவகாரத்து கேட்டும் நாகேஷ்வர் மறுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேஹாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜிதேந்திரா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. சம்பவத்தன்று நாகேஷ்வருக்கு அதிகளவில் மதுவாங்கி கொடுத்து நேஹாவும் ஜிதேந்திராவும் கழுத்தை நெரித்து அவரை கொைல செய்தனர்.
பின்னர் நாகேஷ்வர் உடலை பைக்கில் 25 கி.மீ. தூரம் கொண்டு சென்று விபத்தில் அவர் இறந்தது போல் சித்தரிக்க திட்டமிட்டிருந்தனர். அந்த பகுதியில் உள்ளவர்கள் சாலையோரம் கிடந்த பிணத்தை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் நேஹாவும், ஜிதேந்திராவும் போலீசில் சிக்கினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீஸ் விசாரணையில் மம்தா, பயாஸ் இருவரும் ஆந்திராவில் இருப்பது தெரிய வந்தது.
- புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை போலீசார் மீட்டனர்.
தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் சப்ஷா பள்ளியை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மனைவி மம்தா. தம்பதிக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மகன் சரண்(வயது 4) மகள் தனுஸ்ரீ (3). கருத்து வேறுபாடு காரணமாக மம்தா அவருடைய கணவரை பிரிந்தார்.
தனது மகன் மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பயாஸ் என்ற வாலிபருடன் அவருக்கு கள்ள தொடர்பு ஏற்பட்டது. அவருடன் வாழ முடிவு செய்தார்.
கடந்த ஜூன் மாதம் மம்தா தனது மகனை தாய் வீட்டில் விட்டு விட்டு மகளை அழைத்துக் கொண்டு கள்ளக்காதலனுடன் சென்றார்.
அப்போது கள்ளகாதலுக்கு இடையூறாக இருப்பதாக கூறி குழந்தை தனுஸ்ரீயை மம்தா மற்றும் பயாஸ் இருவரும் சேர்ந்து கொலை செய்தனர். யாருக்கும் தெரியாமல் குழந்தை உடலை புதைத்து விட்டனர். இதற்கிடையே மனைவி குழந்தை காணாமல் மாயமானது குறித்து பாஸ்கர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணையில் மம்தா, பயாஸ் இருவரும் ஆந்திராவில் இருப்பது தெரிய வந்தது. அவர்களை பிடித்து விசாரித்தபோது குழந்தையை கொலை செய்து புதைத்தது தெரிய வந்தது.
இதனையடுத்து புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை போலீசார் மீட்டனர். மம்தா, பயாஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவர் கொளஞ்சிக்கு தெரியாமல் லட்சுமி கள்ளக்காதலன் தங்கராசுவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
- கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலை கோட்டாளம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி. விவசாயியான இவர் டிரைவராகவும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த தங்கராசு என்ற வாலிபருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.
அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வந்ததால் லட்சுமியும், தங்கராசுவும் நெருங்கி பழகினார்கள். கணவர் கொளஞ்சிக்கு தெரியாமல் லட்சுமி கள்ளக்காதலன் தங்கராசுவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து மனைவி லட்சுமியை கண்டித்த கொளஞ்சி நீ செய்யும் செயலால் என்னால் வெளியில் தலை காட்ட முடியவில்லை. பெரிய அவமானமாக உள்ளது. தங்கராசுவுடன் பேசி பழகுவதை நிறுத்திக்கொள் என்று கூறியுள்ளார்.
ஆனால் கணவரின் பேச்சை கேட்காத லட்சுமி கள்ளக்காதலன் தங்கராசுவுடன் ஊர் உறங்கிய பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத இரவு நேரங்களில் உல்லாசமாக இருப்பதை தொடர்ந்துள்ளார். கணவருடன் வீட்டில் ஒன்றாக தூங்கினாலும் லட்சுமியால் தங்கராசுவுடனான தொடர்பை துண்டிக்க முடியவில்லை. பக்கத்து வீடு என்பதால் கணவர் தூங்கிய பிறகு நள்ளிரவு நேரத்தில் கள்ளக்காதலன் தங்கராசுவுடன் லட்சுமி தனிமையில் சந்தித்து மறைவான இடங்களில் வைத்து செக்ஸ் இன்பத்தை அனுபவித்து வந்துள்ளார். இதன்படி நேற்று இரவு சாப்பாட்டை முடித்து விட்டு தூங்குவதற்காக சென்ற லட்சுமி கள்ளக்காதலன் தங்கராசுவுக்கு போன் செய்து நள்ளிரவில் வீட்டுக்கு வா என்று கூறி உள்ளார். இதை தொடர்ந்து லட்சுமியின் வீட்டுக்கு சென்ற தங்கராசு மொட்டை மாடிக்கு அழைத்து சென்றார். அங்கு இருவரும் மெய் மறந்த நிலையில் ஆசை தீர உல்லாசம் அனுபவித்தனர்.
இன்று அதிகாலை 3 மணி அளவில் எழுந்து பார்த்த கொளஞ்சி லட்சுமி வீட்டில் இல்லாததை பார்த்து சந்தேகம் அடைந்தார். இதையடுத்து மொட்டை மாடிக்கு சென்று பார்த்தார். அங்கு அவர் கண்ட காட்சி தூக்கி வாரிப் போட்டது. மனைவி லட்சுமியும், கள்ளக்காதலன் தங்கராசுவும் அரைகுறை ஆடையுடன் கட்டிப்பிடித்து உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்தனர். இதனை நேரில் பார்த்த கொளஞ்சிக்கு ஆத்திரம் தலைக்கேறியது. இதை தொடர்ந்து வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து மனைவி லட்சுமியையும், கள்ளக்காதலன் தங்கராசுவையும் சரமாரியாக கழுத்தில் வெட்டினார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்து துடிதுடித்தபடியே உயிருக்கு போராடினார்கள். அப்போது கொளஞ்சியின் வெறி அடங்கவில்லை. 2 பேரின் தலையையும் துண்டித்து எடுத்து கொளஞ்சி அதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு மாடியில் இருந்து இறங்கியுள்ளார்.
பின்னர் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு சென்ற கொளஞ்சி அந்த வழியாக வேலூர் நோக்கி சென்ற பஸ்சில் துண்டிக்கப்பட்ட தலைகளுடன் ஏறினார். அதிகாலை நேரம் என்பதால் கொளஞ்சியின் பையில் இருப்பது என்ன? என்பதை டிரைவரும், கண்டக்டரும் கவனிக்கவில்லை. சுமார் 3½ மணி நேரம் துண்டித்த தலைகளுடன் எந்த வித பயமும், பதட்டமும் இன்றி பயணம் செய்து வேலூரில் போய் இறங்கிய கொளஞ்சி நேராக வேலூர் சிறைக்கு சென்றார்.
அங்கு சிறைவாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் சென்று பையில் வைத்திருந்த 2 தலைகளையும் காட்டி நடந்த சம்பவத்தை கூலாக கூறியுள்ளார். பையில் இருந்த தலைகளை பார்த்து பதறிய சிறைக் காவலர்கள் பதட்டம் அடைந்தனர். இது பற்றி உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று கொளஞ்சியை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் இதுபற்றி கள்ளக்குறிச்சி வரஞ்சிரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று லட்சுமி, தங்கராசு இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வேலூருக்கு விரைந்து சென்று கொளஞ்சியை கைது செய்து 2 தலைகளை மீட்டனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
- மனைவியின் காதல் விவகாரம் குமாரசாமிக்கு தெரியவந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், பூபால பள்ளி மாவட்டம், ஒடிதலா கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது முதல் மனைவி இறந்த பிறகு தடிசர்லாவை சேர்ந்த கவிதா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
தம்பதிக்கு வர்ஷினி, ஹன்சிகா என 2 மகள்கள் இளைய மகள் ஹன்சிகாவுக்கு திருமணமாகி வெளியூரில் கணவருடன் வசித்து வருகிறார். மூத்த மகள் பெற்றோருடன் வசித்து வந்தார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குமாரசாமிக்கு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கினார்.
இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த திருமணமாகாத ராஜ்குமார் என்பவருடன் கவிதாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர்.
மனைவியின் காதல் விவகாரம் குமாரசாமிக்கு தெரியவந்தது. கள்ளக்காதலை விடுமாறு குமாரசாமி மனைவியிடம் அடிக்கடி வற்புறுத்தி வந்தார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
கள்ளக்காதலுக்கு இடையூராக உள்ள கணவரை தீர்த்து கட்ட கவிதா முடிவு செய்தார். அதன்படி கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி வீட்டில் மகள் இல்லாத போது ராஜ்குமாரை வீட்டிற்கு வரவழைத்தார்.
கவிதா கணவரின் கால்களை பிடித்துக் கொண்டார் ராஜ்குமார் குமாரசாமியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
பின்னர் கணவர் உடல்நலகுறைவால் இறந்து விட்டதாக நாடகமாடினார். இதனையடுத்து குமாரசாமி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
5 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் இருந்த தந்தை எப்படி திடீரென இறந்து விட்டார். ராஜ்குமார் ஏன் அடிக்கடி நமது வீட்டிற்கு வந்து செல்கிறார் என வர்ஷினி தாயிடம் கேள்வி எழுப்பினார்.
கணவர் இறந்தது குறித்து கேள்வி எழுப்பியதால் மகளையும் கொலை செய்ய கவிதா முடிவு செய்தார்.
அதன்படி கடந்த மாதம் 2-ந் தேதி வர்ஷினி நள்ளிரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அப்போது கவிதா தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
மகளின் பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி கிராமத்தின் புறநகர் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி பின்புறம் முள்புதரில் பிணத்தை வீசினர். மகள் காணாமல் போனதாக சித்யாலா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கள்ளக்காதலன் ராஜ்குமார் கடந்த மாதம் 25-ந் தேதி முள்புதரில் இருந்த வர்ஷினியின் பிணத்தை மீண்டும் மூட்டை கட்டினார். பின்னர் பிணத்தை தனது பைக்கில் வைத்து கட்டாரம் தேசிய நெடுஞ்சாலைக்கு எடுத்துச் சென்றார். சாலையோரம் வர்ஷினியின் பிணத்தை வைத்து பிணத்தின் மீது மஞ்சள் குங்குமம் பூக்களை தூவினார். உடலை சுற்றியிலும் ஆணிகளை அடித்து அமானுஷ்ய சடங்கு செய்து வர்ஷினியை யாரோ கொலை செய்ததாக சித்தரிக்க முயன்றனர்.
மேலும் வர்ஷினியின் பிணத்தின் அருகே ஆதார் அட்டையை வீசிவிட்டு வந்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆதார் அட்டை அடையாளத்தை வைத்து கவிதாவுக்கு போன் செய்து வரவழைத்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற கவிதா யாரோ தனது மகளை கொலை செய்து விட்டதாக கதறி துடித்து நாடகம் ஆடினார். கவிதாவின் நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
விசாரணையின் போது கவிதா தனது கள்ளக்காதலன் ராஜ்குமார் உடன் சேர்ந்து கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த கணவர் மற்றும் மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து கவிதா மற்றும் அவரது கள்ளக்காதலன் ராஜ்குமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- சத்தியநாராயணா மனைவியின் பேச்சைக் கேட்காமல் கள்ளக்காதலி வீட்டுக்கு சென்று வந்தார்.
- மகன்களுடன் சேர்ந்து கணவர் மற்றும் கள்ளக்காதலியை சரமாரியாக தாக்கினார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், என் டி ஆர் மாவட்டம் கொண்டபள்ளியை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவர் கணவரை பிரிந்து விஜயவாடா சிங்கி நகரில் வசித்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த சத்தியநாராயணா என்ற வாலிபருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக மாறியது.
இவர்களது கள்ளக்காதல் விவகாரம் சத்தியநாராயணாவின் மனைவிக்கு தெரியவந்தது. கள்ளக்காதலை கைவிடும் படி சத்யநாராயணாவிடம் அவரது மனைவி அடிக்கடி வற்புறுத்தி வந்தார்.
சத்தியநாராயணா மனைவியின் பேச்சைக் கேட்காமல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு கள்ளக்காதலி வீட்டுக்கு சென்று வந்தார்.
இதனால் கணவரை கையும் களவுமாக பிடிக்க தனது மகன்களுடன் சத்யநாராயணாவின் நடமாட்டத்தை கண்காணித்தார்.
நேற்று முன்தினம் காலை வேலைக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சத்தியநாராயணா வீட்டிலிருந்து கள்ளக்காதலி வீட்டிற்குச் சென்றார்.
கணவரை தனது மகன்களுடன் பின்தொடர்ந்து சென்ற அவரது மனைவி கள்ளக்காதலி வீட்டில் உல்லாசமாக இருந்ததை கையும் களவுமாக பிடித்தார்.
இதையடுத்து மகன்களுடன் சேர்ந்து கணவர் மற்றும் கள்ளக்காதலியை சரமாரியாக தாக்கினார். இதில் சத்யநாராயணா அவரது கள்ளக்காதலி படுகாயம் அடைந்தனர்.
இவர்களது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் இப்ராஹிம் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சத்யநாராயணா மற்றும் அவரது கள்ளக்காதலியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கணவரின் நடமாட்டத்தை கண்காணித்து கள்ளக்காதலியையும், கணவரையும் மனைவி சரமரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






