என் மலர்
நீங்கள் தேடியது "கள்ளக்காதல் கைது"
- இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
- போலீசார் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
ஈரோடு பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகள் கீர்த்தி மீனா (வயது 21). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரை சேர்ந்த சிவக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தொடர்ந்து சிவக்குமார்- கீர்த்தி மீனா தம்பதியினர் திருப்பூர், இடுவம்பாளையம், சிவசக்தி நகர் 2-வது வீதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், சிவக்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இது குறித்து கீர்த்தி மீனா சிவக்குமாரிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிவக்குமார் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை கீர்த்தி மீனாவின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார்.
வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த கீர்த்தி மீனா வீட்டில் குழந்தையை தூங்க வைத்துவிட்டு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வீரபாண்டி போலீசார் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கீர்த்தி மீனாவிற்கு திருமணமாகி 7 ஆண்டுகள் நிறைவடையாததால் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- நேஹாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜிதேந்திரா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் நேஹா. தன் கணவர் நாகேஷ்வருடன் சொந்த கிராமத்தில் வசித்து வந்தார். இருவருக்கும் திருமணம் முடிந்த நாளில் இருந்து மனஸ்தாபம் இருந்து வந்துள்ளது. ஒருவரை ஒருவர் விரும்பாமலேயே வாழ்ந்து வந்துள்ளனர். நேஹா விவகாரத்து கேட்டும் நாகேஷ்வர் மறுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேஹாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜிதேந்திரா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. சம்பவத்தன்று நாகேஷ்வருக்கு அதிகளவில் மதுவாங்கி கொடுத்து நேஹாவும் ஜிதேந்திராவும் கழுத்தை நெரித்து அவரை கொைல செய்தனர்.
பின்னர் நாகேஷ்வர் உடலை பைக்கில் 25 கி.மீ. தூரம் கொண்டு சென்று விபத்தில் அவர் இறந்தது போல் சித்தரிக்க திட்டமிட்டிருந்தனர். அந்த பகுதியில் உள்ளவர்கள் சாலையோரம் கிடந்த பிணத்தை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் நேஹாவும், ஜிதேந்திராவும் போலீசில் சிக்கினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீஸ் விசாரணையில் மம்தா, பயாஸ் இருவரும் ஆந்திராவில் இருப்பது தெரிய வந்தது.
- புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை போலீசார் மீட்டனர்.
தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் சப்ஷா பள்ளியை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மனைவி மம்தா. தம்பதிக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மகன் சரண்(வயது 4) மகள் தனுஸ்ரீ (3). கருத்து வேறுபாடு காரணமாக மம்தா அவருடைய கணவரை பிரிந்தார்.
தனது மகன் மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பயாஸ் என்ற வாலிபருடன் அவருக்கு கள்ள தொடர்பு ஏற்பட்டது. அவருடன் வாழ முடிவு செய்தார்.
கடந்த ஜூன் மாதம் மம்தா தனது மகனை தாய் வீட்டில் விட்டு விட்டு மகளை அழைத்துக் கொண்டு கள்ளக்காதலனுடன் சென்றார்.
அப்போது கள்ளகாதலுக்கு இடையூறாக இருப்பதாக கூறி குழந்தை தனுஸ்ரீயை மம்தா மற்றும் பயாஸ் இருவரும் சேர்ந்து கொலை செய்தனர். யாருக்கும் தெரியாமல் குழந்தை உடலை புதைத்து விட்டனர். இதற்கிடையே மனைவி குழந்தை காணாமல் மாயமானது குறித்து பாஸ்கர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணையில் மம்தா, பயாஸ் இருவரும் ஆந்திராவில் இருப்பது தெரிய வந்தது. அவர்களை பிடித்து விசாரித்தபோது குழந்தையை கொலை செய்து புதைத்தது தெரிய வந்தது.
இதனையடுத்து புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை போலீசார் மீட்டனர். மம்தா, பயாஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் வந்து கிராம மக்களிடம் விசாரணை நடத்தினார்.
- கொலைக்கு உதவியாக இருந்த மேலும் ஒருவரை பிடிக்க போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் திகம்கர் பகுதியை சேர்ந்தவர் ரச்னா தேவி. கணவனை இழந்த இவர் தனது குடும்பத்துடன் சொந்த ஊரில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் ரச்னா தேவிக்கு இருந்த ஒரு பிரச்சினையை தீர்க்க அருகில் உள்ள பக்கத்து கிரமமான கிஷோர்புராவில் வசித்து வரும் முன்னாள் கிராம பஞ்.தலைவர் சஞ்சை பட்டேலிடம் உதவி கேட்டார். அந்த பிரச்சினை தொடர்பாக அடிக்கடி அவரை ரச்னாதேவி சந்தித்து வந்தார்.
நாளடைவில் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்து இருந்துள்ளனர்.
இந்த நிலையில் ரச்னா தேவி, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கிஷோர் பட்டேலிடம் வற்புறுத்தியுள்ளார். கிஷோர் பட்டேலும், திருமணம் செய்து கொள்வதாக கூறி நாட்களை கடத்தினார். ஆனால் தொடர்ந்து ரச்னா தேவி வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த கிஷோர் பட்டேல், ரச்னா தேவியை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டினார்.
வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு ரச்னா தேவியை வரச்சென்னார். அங்கு காத்திருந்த தனது மருமகன் சந்தீப் பட்டேலுடன் சேர்ந்து ரச்னா தேவிவை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி அவரை சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே ரச்னா தேவி ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
பின்னர் அவரது உடலை 7 துண்டுகளாக வெட்டி, உடல் பாகங்களை பிரித்து தனிதனி சாக்கு மூட்டையில் கட்டினர். ஒரு மூட்டையை கிணற்றிலும், மற்றொரு மூட்டையை பாலத்திற்கு அடியிலும் வீசி சென்றனர்.
இந்த நிலையில் நிலத்தை பார்க்க வந்த விவசாயி தனது கிணற்றில் இருந்து துர்நாற்றம் வருவதை உணர்ந்து கிணற்றை பார்த்த போது, ஒரு சாக்கு மூட்டை மிதப்பதை பார்த்து சந்தேக மடைந்தார். அங்கிருந்தவர்கள் உதவியுடன் அந்த மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் ஒரு பெண்ணின் வெட்டப்பட்ட கைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தோடிபதேபூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து கிராம மக்களிடம் விசாரணை நடத்தினார். இதில் இறந்த பெண்ணின் தலை கிடைக்காததால் குழப்பமடைந்தனர். தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் அந்த கிராமத்திற்கு அருகில் உள்ள லகேரி ஆற்றிலிருந்து அந்த பெண்ணின் தலையை போலீசார் கண்டெடுத்தனர். இறந்தவர் யார் என்பதை தெரிந்து கொள்ள சுவரொட்டிகள் அடித்து அருகில் உள்ள கிராமங்களில் வினியோகித்தனர்.
காணாமல் போன தன் அக்காவை தேடிக் கொண்டிருந்த ரச்னா தேவின் சகோதரன், ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை பார்த்து போலீசாரை அனுகினார். அப்போதுதான் நடந்த சம்பவம் போலீசாருக்கு தெரியவந்தது. தகவல் அறிந்த போலீசார் உடனடியாக செயல்பட்டு, கொலை செய்த சஞ்சை பட்டேல் மற்றும் அவரது மருமகன் சந்தீப் பட்டேலை கைதுசெய்தனர். கொலைக்கு உதவியாக இருந்த மேலும் ஒருவரை பிடிக்க போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் சென்ற அரிகிருஷ்ணனை கூலிப்படை கும்பல் கார் ஏற்றி கொல்ல முயன்றனர்.
- கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலூர் குப்பத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். அதே பகுதியில் பிரியாணி கடை வைத்து உள்ளார். இவரது மனைவி பவானி (39). இவரும் பிரியாணி கடையில் கணவனுக்கு உதவியாக இருந்து வந்தார்.
அரிகிருஷ்ணன் பிரியாணி கடைக்கு இறைச்சி மற்றும் பொருட்கள் வாங்க அடிக்கடி மனைவி பவானியை கடையில் விட்டு சென்றார். அப்போது கடையில் வேலை பார்த்த மதன் குமார் (29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது.
இதனை அறிந்த அரி கிருஷ்ணன் கடையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்தார். இதில் மனைவி பவானி, கள்ளக்காதலன் மதன் குமாருடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் பதிவானது. இதையடுத்து அரிகிருஷ்ணன் தனது மனைவி பவானியை கண்டித்து கடையில் வேலைபார்த்த மதன் குமாரை இனிமேல் கடைக்கு வரவேண்டாம் என்று நிறுத்தி விட்டார்.
இதனால் கள்ளகாதலர்கள் ஒன்றாக சந்திக்க வாய்ப்பு இல்லாமல் போனது. இதையடுத்து தவிப்புக்குள்ளான பவானி கள்ளகாதலன் மதன்குமாருடன் சேர்ந்து இடையூறாக இருக்கும் கணவன் அரிகிருஷ்ணனை கொலை செய்ய முடிவு செய்தார்.
இதற்காக கள்ளகாதலர்கள் இருவரும் சேர்ந்து திருவாரூர் பகுதியை சேர்ந்த கூலி படையினரைஅணுகி ரூ.15லட்சம் பேரம் பேசி ரூ.2லட்சம் முன்பணம் கொடுத்தனர். இதனை அறியாத அரிகிருஷ்ணன் வழக்கம்போல் மனைவியுடன் பேசியபடி பிரியாணி கடைக்கு சென்று வந்தார்.
இந்தநிலையில் மேவலூர் குப்பம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற அரிகிருஷ்ணனை கூலிப்படை கும்பல் கார் ஏற்றி கொல்ல முயன்றனர். இதில் அரிகிருஷ்ணன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அப்போது கூலி படையினர் அரிகிருஷ்ணனை தொடர்பு கொண்டு பேசிய போது, "உன் மனைவி கள்ளகாதலனுடன் சேர்ந்து உன்னை கொலை செய்ய ரூ.15லட்சம் பேரம் பேசி ரூ.2லட்சம் கொடுத்து உள்ளார். நீ எங்களுக்கு ரூ.5லட்சம் கொடுத்தால் உன்னை உயிரோடு விட்டு விடுகிறோம்" என்று மிரட்டி உள்ளனர்.
இதனால் அதிர்ந்து போன அரிகிருஷ்ணன் இது பற்றி ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் வழக்கு பதிவு செய்து அரிகிருஷ்ணனின் மனைவி பவானி, அவரது கள்ளக்காதலன் மதன்குமார் ஆகியோரை பிடித்து அதிரடி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூலிப் படையை ஏவி அரிகிருஷ்ணனை கொலை செய்ய முயன்றதை ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து பவானி, கள்ளக்காதலன் மதன்குமார் மற்றும் அவர்கள் கொடுத்த தகவலின் படி கூலிப் படையை சேர்ந்த திருவாரூர் மாவட்டதை சேர்ந்த விக்னேஷ், விஜய், மணிகண்டன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அவர்களி டம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
அரிகிருஷ்ணனை கூலிப்படையினர் காரை ஏற்றி தீர்த்து கட்ட முயன்ற முதல் முயற்சி பலிக்காததால் அவர்கள் தங்களது திட்டத்தை மாற்றி உள்ளனர். கொலை செய்து விட்டு கைதாகி சிறைக்கு செல்லாமல் அரிகிருஷ்ணனையே மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
அப்படி மிரட்டியபோது தான் மனைவியே கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்றது அரிகிருஷ்ணனுக்கு தெரிந்தது. இதைத் தொடர்ந்து அவர் போலீசில் புகார் செய்ததால் மனைவி, கள்ளக்காதலன் மற்றும் கூலிப்படையினர் கூண்டோடு சிக்கிக் கொண்டனர்.
கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருமணமாகி 5 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை செய்து வருகிறார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் சந்திரன் மகள் சினேகா (வயது 33). இவருக்கும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பேயம்பட்டியை சேர்ந்த சின்னச்சாமி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் ராமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கோபி முத்து கண்ணன் என்பவருக்கும் சினேகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதன் பின்னர் கடந்த 21.5.2025-ந் தேதியன்று சினேகா தனது மகனுடன் மாயமானார். இதுகுறித்து கணவர் விளாம்பட்டி மற்றும் சிந்துப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து சினேகா மற்றும் அவரது மகனை தேடி வந்தனர். இருப்பினும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து ஆட்கொணர்வு மனுவை கணவர் சின்னச்சாமி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிரப்படுத்தி சினேகா மற்றும் அவரது மகனை தேடிய போது அவர்கள் கள்ளக்காதலன் கோபி முத்துக் கண்ணனுடன் கோவையில் தங்கி இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் சினேகாவை அழைத்து வந்து கடந்த 13-ந் தேதி அவரது கணவரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் வீட்டில் இருந்த சினேகா தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விளாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சர்மிளா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சினேகாவின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி 5 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை செய்து வருகிறார். கள்ளத் தொடர்பால் ஏற்பட்ட பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொலை செய்யப்பட்ட நபர் உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது பைசல் என தெரிய வந்தது.
- போலீசார் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்தோடு:
ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த ஆட்டையாம்பாளையம் அருகே கீழ் பவானி கிளை வாய்க்கால் மதகு பகுதியில் வெள்ளை நிற சாக்கு மூட்டை ஒன்று மிதந்து கொண்டு இருந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியது.
இது குறித்து அப்பகுதி மக்கள் சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாக்கு மூட்டையை திறந்து பார்த்தனர். அதில் 25 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபரின் உடல் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இறந்த நபரின் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் இருந்தது தெரிய வந்தது. போலீசார் விசாரணையில் அந்த நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டை கட்டி வாய்க்காலில் வீசப்பட்டது தெரிய வந்தது. இறந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:-
கொலை செய்யப்பட்ட நபர் உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது பைசல் (22) என தெரிய வந்தது. இவருடன் அதே மாநிலத்தைச் சேர்ந்த முகமது நூர் (26) மற்றும் 18 சிறுவன் என மூன்று பேர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் நெச்சிப்பாளையம் புதூர் பகுதியில் வந்து அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி துணியை அரைத்து நூலாக செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் முகமது பைசலுக்கு முகமது நூர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் தெரிந்து முகமது நூர், முகமது பைசலை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி முகமத் பைசல், முகமது நூர் மற்றும் 18 வயது சிறுவன் மூன்று பேரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக முகமது பைசலுக்கும், முகமது நூறுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரத்தில் முகமது நூர் மற்றும் சிறுவன் இருவரும் சேர்ந்து முகமது பைசலை தலையின் பின் பக்கம் கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் இருவரும் முகமது பைசல் உடலை வெள்ளை நிற சாக்கு பையில் கட்டி வாய்க்காலில் வீசியது தெரிய வந்தது. இந்த கொலையில் மேலும் யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து போலீசார் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊருக்கு வெளிப்புறம் உள்ள தோட்டத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
- நேற்று இரவு அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையை அடுத்த கீழக்கலங்கல் இந்திரா காலனியை சேர்ந்தவர் நடராஜன் மகன் கனகராஜ் (வயது 25). கூலித் தொழிலாளி.
இவருக்கும், உறவினர் மகளான குருக்கள்பட்டி அருகே உள்ள கருத்தானூரை சேர்ந்த மங்கள்ராஜ் மகள் கவிக்குயில் (22) என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் ஊருக்கு வெளிப்புறம் உள்ள தோட்டத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
கனகராஜின் மனைவி கவிக்குயில் திருமணத்திற்கு முன்னர் பக்கத்து ஊரான மலையான்குளத்தை சேர்ந்த சண்முகவேல் மகன் வெங்கடேஷ்(24) என்பவரை காதலித்து வந்துள்ளார். அவர் திருமணத்திற்கு பிறகு வெங்கடேசுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று யாரும் இல்லாத நேரத்தில் வெங்கடேஷ், கவிக்குயில் உல்லாசமாக இருந்துள்ளனர்.இதனை பார்த்த கனகராஜின் தந்தை நடராஜன்தனது மகனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.தொடர்ந்து கவிக்குயிலின் அம்மா முத்துமாரி(50), அண்ணன் அன்பரசு(25) ஆகியோரையும் வரவழைத்து வெங்கடேஷை மரத்தில் கட்டில் வைத்து கட்டையால் தாக்கி அரிவாளால் வெங்கடேஷ் இடதுகை மணிக்கட்டை வெட்டினர்.
இதனை கண்ட கவிக்குயில் அருகில் இருந்த கிணற்றில் தற்கொலை செய்வதற்காக குதித்தார். குறைவான தண்ணீர் இருந்ததால் அவர் உயிர் தப்பினார். உடனே முத்துமாரி, அன்பரசு, கனகராஜ், நடராஜன் ஆகிய 4 பேரும் அங்கிருந்து தப்பியோடினர்.
சம்பவம் குறித்து ஊத்துமலை இன்ஸ்பெக்டர் சுரேஷ் விசாரணை நடத்தி கனகராஜ், அன்பரசு, நடராஜன் மற்றும் முத்துமாரி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.இந்நிலையில் நேற்று இரவு அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- பிரேமாவின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
- பிரேமாவை கைது செய்து நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மகளிர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் ஊராட்சி செல்லிபாளையம் காலனியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 37), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி பிரேமா. கடந்த 23-ந் தேதி அதிகாலை 2 மணி அளவில் செல்லிப்பாளையம் பகுதியில் பெரியசாமி விபத்தில் இறந்ததாக கூறப்பட்டது. இது குறித்து மோகனூர் போலீசார் விபத்து வழக்குப்பதிவு செய்தனர். பிரேமாவின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து போலீசார் பிரேமாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், பிரேமா கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் பிரேமா, போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நான் மோகனூரில் உள்ள பேக்கரிக்கு வேலைக்கு சென்று வந்தேன். அப்போது அங்கு வேலை பார்த்த நந்திகேசவன் (25) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை கணவர் பெரியசாமி கண்டித்தார். இதனால் சம்பவத்தன்று மோகனூர் அருகே செல்லிப்பாளையம் பகுதியில் வைத்து அவரை நந்திகேசவன் தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்தார். அதன்பிறகு உறவினர்களிடம் வாகனம் மோதி கணவர் இறந்து விட்டதாக நாடகம் ஆடினேன். ஆனால் போலீசார் கண்டுபிடித்து விட்டனர் என பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
தொடர்ந்து பிரேமாவை கைது செய்து நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மகளிர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் நந்திகேசவன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த பேக்கரியில் வேலை செய்த அவரது நண்பர் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகா குன்னத்தூர் பகுதியை சேர்ந்த தனுஷ் (21) ஆகிய இருவரையும் மோகனூர் போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் மோகனூர் அடுத்த வாங்கல் பிரிவு ரோடு அருகே நின்றுகொண்டு இருந்த நந்திகேசவனையும், தனுஷையும் மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.






