என் மலர்
நீங்கள் தேடியது "kallakathal"
- திருமணமாகி 5 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை செய்து வருகிறார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் சந்திரன் மகள் சினேகா (வயது 33). இவருக்கும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பேயம்பட்டியை சேர்ந்த சின்னச்சாமி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் ராமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கோபி முத்து கண்ணன் என்பவருக்கும் சினேகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதன் பின்னர் கடந்த 21.5.2025-ந் தேதியன்று சினேகா தனது மகனுடன் மாயமானார். இதுகுறித்து கணவர் விளாம்பட்டி மற்றும் சிந்துப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து சினேகா மற்றும் அவரது மகனை தேடி வந்தனர். இருப்பினும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து ஆட்கொணர்வு மனுவை கணவர் சின்னச்சாமி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிரப்படுத்தி சினேகா மற்றும் அவரது மகனை தேடிய போது அவர்கள் கள்ளக்காதலன் கோபி முத்துக் கண்ணனுடன் கோவையில் தங்கி இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் சினேகாவை அழைத்து வந்து கடந்த 13-ந் தேதி அவரது கணவரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் வீட்டில் இருந்த சினேகா தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விளாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சர்மிளா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சினேகாவின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி 5 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை செய்து வருகிறார். கள்ளத் தொடர்பால் ஏற்பட்ட பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுரேஷின் காய்கறி கறிகடைக்கு ராஜேஸ்வரி அடிக்கடி வந்து வியாபாரம் செய்தார்.
- பார்வதி மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ராஜேஸ்வரி மீது ஊற்றி தீவைத்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் ராமர்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பார்வதி (36). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண், பெண் குழந்தை உள்ளது. சுரேஷ் திருவள்ளூர் மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்துள்ளார்.
சுரேசுக்கும் புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்த ராஜேஸ்வரி (வயது 40) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் குடும்பத்தினருக்கு தெரியாமல் புட்லூர் அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் ராஜேஸ்வரி திருவள்ளூரில் தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் சுரேஷின் காய்கறி கறிகடைக்கு ராஜேஸ்வரி அடிக்கடி வந்து வியாபாரம் செய்தார். இதனை அறிந்த சுரேசின் மனைவி பார்வதி கண்டித்தார். மேலும் ராஜேஸ்வரியை கடைக்கு வரக்கூடாது என்று எச்சரித்தார்.
எனினும் கடந்த 9-ந்தேதி ராஜேஸ்வரி மீண்டும் சுரேசின் காய்கறி கடைக்கு வந்து வியாபாரத்தில் ஈடுபட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பார்வதி மற்றும் அவரது உறவினர்கள் மார்க்கெட்டிற்கு வந்து கடையில் இருந்த ராஜேஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது பார்வதி மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ராஜேஸ்வரி மீது ஊற்றி தீவைத்தார். இதில் உடல்கருயிய ராஜேஸ்வரியை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பார்வதி, அவரது கணவர் சுரேஷ் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 6 பேரை கைது செய்தனர்.
இந்தநிலையில் இன்று காலை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து திருவள்ளூர் டவுன் போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ளனர்.
இதற்கிடையே மார்க்கெட்டில் ராஜேஸ்வரி தீவைத்து எரிக்கப்பட்ட வீடீயோ காட்சி தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.






