என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மனைவி, கள்ளக்காதலன் தலையை துண்டித்து கொடூரமாக கொன்ற கள்ளக்குறிச்சி விவசாயி
- கணவர் கொளஞ்சிக்கு தெரியாமல் லட்சுமி கள்ளக்காதலன் தங்கராசுவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
- கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலை கோட்டாளம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி. விவசாயியான இவர் டிரைவராகவும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த தங்கராசு என்ற வாலிபருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.
அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வந்ததால் லட்சுமியும், தங்கராசுவும் நெருங்கி பழகினார்கள். கணவர் கொளஞ்சிக்கு தெரியாமல் லட்சுமி கள்ளக்காதலன் தங்கராசுவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து மனைவி லட்சுமியை கண்டித்த கொளஞ்சி நீ செய்யும் செயலால் என்னால் வெளியில் தலை காட்ட முடியவில்லை. பெரிய அவமானமாக உள்ளது. தங்கராசுவுடன் பேசி பழகுவதை நிறுத்திக்கொள் என்று கூறியுள்ளார்.
ஆனால் கணவரின் பேச்சை கேட்காத லட்சுமி கள்ளக்காதலன் தங்கராசுவுடன் ஊர் உறங்கிய பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத இரவு நேரங்களில் உல்லாசமாக இருப்பதை தொடர்ந்துள்ளார். கணவருடன் வீட்டில் ஒன்றாக தூங்கினாலும் லட்சுமியால் தங்கராசுவுடனான தொடர்பை துண்டிக்க முடியவில்லை. பக்கத்து வீடு என்பதால் கணவர் தூங்கிய பிறகு நள்ளிரவு நேரத்தில் கள்ளக்காதலன் தங்கராசுவுடன் லட்சுமி தனிமையில் சந்தித்து மறைவான இடங்களில் வைத்து செக்ஸ் இன்பத்தை அனுபவித்து வந்துள்ளார். இதன்படி நேற்று இரவு சாப்பாட்டை முடித்து விட்டு தூங்குவதற்காக சென்ற லட்சுமி கள்ளக்காதலன் தங்கராசுவுக்கு போன் செய்து நள்ளிரவில் வீட்டுக்கு வா என்று கூறி உள்ளார். இதை தொடர்ந்து லட்சுமியின் வீட்டுக்கு சென்ற தங்கராசு மொட்டை மாடிக்கு அழைத்து சென்றார். அங்கு இருவரும் மெய் மறந்த நிலையில் ஆசை தீர உல்லாசம் அனுபவித்தனர்.
இன்று அதிகாலை 3 மணி அளவில் எழுந்து பார்த்த கொளஞ்சி லட்சுமி வீட்டில் இல்லாததை பார்த்து சந்தேகம் அடைந்தார். இதையடுத்து மொட்டை மாடிக்கு சென்று பார்த்தார். அங்கு அவர் கண்ட காட்சி தூக்கி வாரிப் போட்டது. மனைவி லட்சுமியும், கள்ளக்காதலன் தங்கராசுவும் அரைகுறை ஆடையுடன் கட்டிப்பிடித்து உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்தனர். இதனை நேரில் பார்த்த கொளஞ்சிக்கு ஆத்திரம் தலைக்கேறியது. இதை தொடர்ந்து வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து மனைவி லட்சுமியையும், கள்ளக்காதலன் தங்கராசுவையும் சரமாரியாக கழுத்தில் வெட்டினார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்து துடிதுடித்தபடியே உயிருக்கு போராடினார்கள். அப்போது கொளஞ்சியின் வெறி அடங்கவில்லை. 2 பேரின் தலையையும் துண்டித்து எடுத்து கொளஞ்சி அதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு மாடியில் இருந்து இறங்கியுள்ளார்.
பின்னர் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு சென்ற கொளஞ்சி அந்த வழியாக வேலூர் நோக்கி சென்ற பஸ்சில் துண்டிக்கப்பட்ட தலைகளுடன் ஏறினார். அதிகாலை நேரம் என்பதால் கொளஞ்சியின் பையில் இருப்பது என்ன? என்பதை டிரைவரும், கண்டக்டரும் கவனிக்கவில்லை. சுமார் 3½ மணி நேரம் துண்டித்த தலைகளுடன் எந்த வித பயமும், பதட்டமும் இன்றி பயணம் செய்து வேலூரில் போய் இறங்கிய கொளஞ்சி நேராக வேலூர் சிறைக்கு சென்றார்.
அங்கு சிறைவாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் சென்று பையில் வைத்திருந்த 2 தலைகளையும் காட்டி நடந்த சம்பவத்தை கூலாக கூறியுள்ளார். பையில் இருந்த தலைகளை பார்த்து பதறிய சிறைக் காவலர்கள் பதட்டம் அடைந்தனர். இது பற்றி உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று கொளஞ்சியை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் இதுபற்றி கள்ளக்குறிச்சி வரஞ்சிரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று லட்சுமி, தங்கராசு இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வேலூருக்கு விரைந்து சென்று கொளஞ்சியை கைது செய்து 2 தலைகளை மீட்டனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.






