கள்ளக்காதலி எரித்துக்கொலை - கைதான வாலிபரிடம் போலீசார் அதிரடி விசாரணை

10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளன. தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பிரேமா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
விஜய்.
விஜய்.
Published on

காங்கயம் :

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே பாப்பினி-வரதப்பம்பாளையம் காலனி பகுதியைச் சோ்ந்தவா் செந்தில். இவரது மனைவி பிரேமா (வயது 30). இவா்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக பிரேமா கணவரைப் பிரிந்து வரதப்பம்பாளையம் காலனியில் தனி வீடு எடுத்து குழந்தைகளுடன் தங்கி, அப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில், பிரேமாவுக்கும், காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா் பகுதியைச் சோ்ந்த விஜய் (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜய், பிரேமாவை சந்திக்க வரதப்பம்பாளையம் காலனிக்கு வந்துள்ளாா். அங்கு வீட்டில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னா் சிறிது நேரத்தில் விஜய் அங்கிருந்து சென்றுள்ளாா். அவா் சென்ற சில நிமிடங்களில் வீட்டில் பிரேமாவின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் ஓடிவந்து பாா்த்தபோது, பிரேமா உடலில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

உடல் முழுவதும் தீவிர தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பிரேமா மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரேமா உயிரிழந்தாா்.

இறப்பதற்கு முன் போலீசாரிடம் பிரேமா அளித்த மரண வாக்குமூலத்தில், விஜய் தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்ததாகத் தெரிவித்துள்ளாா்.இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விஜயிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில், விஜய், பிரேமா ஆகியோா் பழகி வந்த நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பிரேமா பரப்பியதால், ஆத்திரமடைந்த விஜய் பிரேமாவை எரித்துக் கொல்ல முயற்சி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விஜய்யை கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும் அவரிடமிருந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேறு யாரையாவது காதலித்து ஏமாற்றியுள்ளாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com