பாஜக முன்னாள் எம்.பி. ஸ்மிருதி இரானி மீண்டும் டிவி சீரியலில் நடிக்கிறாரா?

2019ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார்.2024 ஆம் ஆண்டு மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி தோல்வி அடைந்தார்.
Smriti irani TV serial actor
Published on

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவை சேர்ந்த ஸ்மிருதி இரானி, கடந்த 2019ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு ராகுல்காந்தியை தோற்கடித்தார். அதன்பின் மத்திய அமைச்சராக அவர் பொறுப்பேற்றார்.

இதனையடுத்து 2024 ஆம் ஆண்டு மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி காங்கிரஸ் வேட்பாளர் கிஷோர் லால் சர்மாவிடம் தோல்வி அடைந்தார்.

டிவி சீரியல் மூலம் பிரபலமாகி அரசியலில் நுழைந்த ஸ்மிருதி இராணி, சமீபத்தில் 'அனுபாமா' என்ற டிவி சீரியல் நடிகையுடன் இருக்கும் புகைப்படம் வெளியாக, அவர் மீண்டும் இந்தி டி.வி. சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் பரவியது

இந்நிலையில், சீரியலில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல்களுக்கு பாஜக முன்னாள் எம்.பி. ஸ்மிருதி இராணி மறுப்பு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com