சீரியல் நடிகர் விகாஸ் சேத்தி மாரடைப்பால் மரணம்

விகாஸ் சேத்திக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு விகாஸ் சேத்தி மரணமடைந்தார்.
Actor Vikas Sethi
Published on

செப்டம்பர் 7 ஆம் தேதி நடிகர் விகாஸ் சேத்தி மாரடைப்பால் உயிரிழந்தார். 48 வயதான அவர் பாலிவுட்டில் துணை காதாபாத்திரத்திலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து புகழ்பெற்றவர்.

நாசிக் மாவட்டத்திற்கு குடும்ப நிகழ்விற்காக விகாஸ் சேத்தியும் அவரது மனைவி ஜான்வி சேத்தியும் சென்றுள்ளனர். அப்போது அவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. ஆனால் விகாஸ் சேத்தி மருத்துவமனைக்கு செல்லவில்லை. பின்னர் தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு விகாஸ் சேத்தி மரணமடைந்தார்.

விகாஸ் சேத்தியின் கடைசி தருணங்கள் குறித்து அவரது மனைவி ஜான்வி சேத்தி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், விகாஸ் சேத்தியின் இறுதி சடங்குகள் இன்று மும்பையில் நடைபெறும் என்று அவரது மனைவி தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com