என் மலர்

  நீங்கள் தேடியது "Duryodhana"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மே 23-ந் தேதி யார் துரியோதனன், யார் அர்ஜுனன் என்பது நமக்கு தெரிந்துவிடும் என பா.ஜனதா தலைவர் அமித்ஷா பிரியங்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். #Duryodhana #Arjuna #Priyanka #AmitShah
  திஷ்னுபூர்:

  காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா பிரதமர் நரேந்திர மோடியை துரியோதனனுடன் ஒப்பிட்டு பேசியதற்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். மேற்கு வங்காள மாநிலம் திஷ்னுபூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட அமித்ஷா இதுபற்றி கூறியதாவது:-  பிரியங்கா வத்ரா பிரதமர் மோடியை துரியோதனன் என்று கூறியுள்ளார். பிரியங்கா, இது ஜனநாயகம். நீங்கள் சொல்லிவிட்டதாலேயே யாரும் துரியோதனன் ஆகிவிட முடியாது. மே 23-ந் தேதி யார் துரியோதனன், யார் அர்ஜுனன் என்பது நமக்கு தெரிந்துவிடும். ராஜீவ் காந்தி ஆட்சியில் நடைபெற்ற போபர்ஸ் வழக்கு பற்றி பிரதமர் மோடி பேசினார். அவர் கூறியதில் என்ன தவறு இருக்கிறது?

  இவ்வாறு அமித்ஷா கூறினார்.  #Duryodhana #Arjuna #Priyanka #AmitShah 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரியானாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, ஆணவத்தால் அழிந்தவன் துரியோதனன் என மோடிக்கு எச்சரிக்கை விடுத்து குறிப்பிட்டார். #LokSabhaElections2019 #PriyankaGandhi #Modi #Duryodhana
  சண்டிகர்:

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை, நம்பர் ஒன் ஊழல்வாதி என்று பிரதமர் மோடி சமீபத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். இது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இந்நிலையில், அரியானா மாநிலம் அம்பாலாவில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொது செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:  மத்தியில் உள்ள பாஜகவினர் பேசுவதற்கு விஷயம் எதுவும் இல்லையென்றால் எனது குடும்பத்தை அவமதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

  ஆணவத்தை இந்தியா ஒருபோதும் மன்னித்தது இல்லை. இதற்கு வரலாற்றில் பல்வேறு சான்றுகள் இருக்கின்றன. சிறந்த இதிகாசமான மகாபாரதத்திலும் இதற்கு ஆதாரங்கள் உள்ளன. கவுரவர்களின் அரசனான துரியோதனனிடம் ஆணவம் இருந்ததாலேயே அவர் அழிந்தார் என பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #PriyankaGandhi #Modi #Duryodhana
  ×