பாண்டவர்கள் போல மனைவியை அடமானம் வைத்து சூதாடிய கணவர் - அடுத்து நடந்த கொடூரம்

சூதாட்டத்திற்கு அடிமையான கணவர் தனது மனைவியை அடமானம் வைத்து சூதாடியுள்ளார்.தனது மனைவியை அவரின் நண்பர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்த அவரது கணவர் அனுமதித்துள்ளார்.
A gambling-addicted husband gambled away his wife's mortgage.
Published on

மகாபாரத புராணத்தில் பாண்டவர்களின் மூத்தவரான தருமன் சூதாட்டத்தில் தனது மனைவி திரவுபதியை அடமானம் வைத்து தோல்வியடைவார். பின்னர் துச்சாதனன் திரவுபதியின் சேலையை உருவ கிருஷ்ணர் சேலை கொடுப்பார்.

இந்த புராண கதை தற்போது உத்தரபிரதேசத்தில் நிஜ கதையாக நடந்துள்ளது. ராம்பூர் நகரில் சூதாட்டத்திற்கு அடிமையான கணவர் தனது மனைவியை அடமானம் வைத்து சூதாடிய கொடூர நிகழ்வு நடைபெற்றுள்ளது.

சூதாட்டத்தில் தோல்வி அடைந்ததால் தனது மனைவியை அவரின் நண்பர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்த அவரது கணவர் அனுமதித்துள்ளார்.

இந்த கொடுமையை தடுத்த போராடிய மனைவியின் விரலை உடைத்து கணவன் சித்ரவதை செய்துள்ளார்.

இது தொடர்பாக மனைவி புகார் கொடுத்ததை அடுத்து வழக்குப் பதிந்துள்ள போலீசார் தப்பியோடிய கணவரையும் அவரது நண்பர்களையும் தேடி வருகின்றனர்.

மதுப்பழக்கம் மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையான கணவர் இதுவரை 7 ஏக்கர் நிலம், நகைகள் என அனைத்தையும் சூதாட்டத்தில் இழந்துள்ளதாக மனைவி வேதனை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com