என் மலர்
நீங்கள் தேடியது "ராக்கி கயிறு"
- கடந்த 3 நாட்களில், 20,000 பெண்கள் ராக்கி கட்டியுள்ளனர்.
- மேயர் உமேஷ் கவுதம் அதிக ராக்கி கட்டியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
பரேலி:
உத்தரபிரதேச மாநிலம், பரேலி மாநகராட்சி மேயர் டாக்டர் உமேஷ் கவுதம். இவருக்கு ரக்ஷா பந்தனை முன்னிட்டு பெண்கள் ராக்கி கட்டினர். கடந்த 3 நாட்களாக, நகரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து பெண்கள் அவருக்கு ராக்கி கட்ட வந்தனர்.
கடந்த 3 நாட்களில், 20,000 பெண்கள் ராக்கி கட்டியுள்ளனர். இதன் மூலம் மேயர் உமேஷ் கவுதம் அதிக ராக்கி கட்டியவர் என்ற சாதனையை படைத்துள்ளார். ராக்கி கட்டிய பெண்களுக்கு பரிசு தருவதாக அவர் உறுதியளித்தார்.
தனது சகோதரிகளின் நலன் தனது கடமை என்று அவர் கூறினார். ராக்கி கட்டும்போது, சகோதரர்கள் இல்லாத சில பெண்கள் உணர்ச்சிவசப்பட்டனர்.
உமேஷை தங்கள் சொந்த சகோதரனாகக் கருதுவதாக அவர்கள் கூறினர். இதனால் உமேஷும் உணர்ச்சிவசப்பட்டார். அவரது கண்கள் ஆனந்த கண்ணீரில் நனைந்தன.
- கடந்த ஆண்டு கமர் மொஹ்சின் ஷேக்கால் டெல்லிக்கு செல்ல முடியவில்லை.
- எனது கணவருடன் டெல்லி சென்று பிரதமரின் மணிக்கட்டில் எனது கையால் செய்யப்பட்ட ராக்கியை கட்டுவேன்.
புதுடெல்லி:
சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் விழா வருகிற 9-ந் தேதி (சனிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தில் சகோதரர்களுக்கு, சகோதரிகள் ராக்கி கயிறு கட்டி அன்பை வெளிப்படுத்துவது வழக்கம்.
பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்த கமர் மொஹ்சின் ஷேக் என்ற பெண், 1981-ம் ஆண்டு தனது திருமணத்திற்கு பின் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார். குஜராத்தின் அகமதாபாத்தில் குடியேறிய அவர் ஒவ்வொரு ஆண்டும் ரக்ஷாபந்தன் தினத்தில் பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டி வருகிறார்.
பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ்., உறுப்பினராக இருந்த காலத்தில் இருந்து 30 ஆண்டுகளாக, கமர் மொஹ்சின் ஷேக் ராக்கி கயிறு கட்டி வருகிறார்.
அவர் இந்த ஆண்டும் மோடிக்கு ராக்கி கயிறு கட்டுவதற்காக ஓம் மற்றும் விநாயகர் வடிவங்களுடன் 2 ராக்கிகளை வீட்டிலேயே தயார் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் ஒருபோதும் சந்தையில் இருந்து ராக்கிகளை வாங்குவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் வீட்டிலேயே ராக்கிகளை தயாரித்து பிரதமர் மோடிக்கு கட்டுவேன் என்றார்.
கடந்த ஆண்டு கமர் மொஹ்சின் ஷேக்கால் டெல்லிக்கு செல்ல முடியவில்லை. ஆனால் இந்த ஆண்டு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வரும் என காத்திருக்கிறேன். அழைப்பு வந்ததும் எனது கணவருடன் டெல்லி சென்று பிரதமரின் மணிக்கட்டில் எனது கையால் செய்யப்பட்ட ராக்கியை கட்டுவேன். பிரதமர் 4-வது முறையாக பதவியேற்பதையும் காண விரும்புகிறேன் என்றார்.
- மஹபூபாபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் டிப்ளமோ படித்து வந்தார்.
- திருமணம் செய்து கொள்ளும்படி அப்பெண்ணிற்கு ஒரு நபர் தொடர்ச்சியாக தொந்தரவு கொடுத்து வந்தார்.
தெலுங்கானாவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் ஒருவர் தனது உயிர் பிரியும் சில நிமிடங்களுக்கு முன்பு தனது அண்ணனுக்கு ராக்கி கயிறு கட்டிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் டிப்ளமோ படித்து வந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அப்பெண்ணிற்கு ஒரு நபர் தொடர்ச்சியாக தொந்தரவு கொடுத்து வந்தார்.
இதனால மனஉளைச்சலுக்கு உள்ளான அப்பெண் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவரை காப்பாற்றிய குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அப்பெண் ஆகஸ்ட் 17 ஆம் தேதி உயிரிழந்தார். தனது உயிர் பிரியும் சில நிமிடங்களுக்கு முன்பு தனது 2 தம்பிகளுக்கு அப்பெண் ராக்கி கயிறு கட்டினார். இந்த சம்பவம் மருத்துவமனையில் இருந்தவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார், அப்பெண்ணிற்கு தொல்லை கொடுத்தவர்களை தேடி வருகின்றனர்.
- இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்து சென்றவர்களுக்கு ராக்கி கயிறு கட்டப்பட்டது.
- நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணிந்து சென்றவ–ர்களுக்கும், போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றியவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை காவல்–துறை யினர் பொதுமக்களின் நண்பன் என்ற கூற்றை பறைசாற்றும் விதமாக தேசிய நண்பர்கள் தினம் தஞ்சை அண்ணா சிலை பகுதியில் தஞ்சை ஜோதி அறக்கட்டளையினர் மற்றும் தஞ்சை போக்கு வரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் ஆகியோர் இணைந்து சாலையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்து சென்றவர்களுக்கும், நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணிந்து சென்றவ–ர்களையும் போக்குவரத்து விதிகளை முறைப்படி பின்பற்றியவர்களிடம் தேசிய நண்பர்கள் தினத்தை போற்றும் வகையில் இனிப்பு வழங்கி கையில் ராக்கி கயிறு கட்டியும் பொதுமக்களிடம் நூதன முறையில் நட்பு பாராட்டினர் .
தஞ்சை போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்தி ரனின் அறிவுறுத்தலின் பேரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் , போக்குவரத்து துணை ஆய்வாளர் பாஸ்கரன் , சிறப்பு துணை ஆய்வாளர் ரமேஷ், ஏட்டு புவனேஸ்வரி, போக்குவரத்து போலீசார் நாகராணி , தனலக்ஷ்மி , தேன்மொழி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி தலைமையில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.






