என் மலர்
நீங்கள் தேடியது "delhi metro"
- டெல்லியின் ஜசோலா விஹார் மெட்ரோ ரெயில்நிலைய தண்டவாளத்தில் டிரோன் ஒன்று விழுந்தது.
- இதனால் ஏற்பட்ட பரபரப்பால் அந்த ரெயில் நிலையம் சிறிது நேரம் மூடப்பட்டது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் உள்ள ஜசோலா விஹார் மெட்ரோ ரெயில்நிலைய தண்டவாளத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் டிரோன் ஒன்று விழுந்து கிடந்தது. இதனால் அந்தப் பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனே வந்த போலீசார் டிரோனை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதில் மருந்து பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், தனியார் நிறுவனம் ஒன்று மருந்து பொருட்களை அனுப்பி வைத்ததை கண்டுபிடித்த போலீசார், அது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
இந்தப் பரபரப்பால் ஜசோலா விஹார் ரெயில் நிலையம் சிறிது நேரம் மூடப்பட்டிருந்தது. அதன்பின், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #DelhiMetro
புதுடெல்லி:
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய விமானப்படை ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குண்டு வீசி அழித்தது. அதன் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து காஷ்மீர் வான் பகுதியில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. போர் விமானங்கள் தவிர எந்த விமானங்களும் பறக்ககூடாது என கூறப்பட்டது. அத்துடன், காஷ்மீரின் ஸ்ரீநகர், லே, பதான்கோட் ஆகிய விமான நிலையங்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இன்று காலை பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதையடுத்து போர் பதற்றம் தொடர்ந்து நிலவி வருகிறது. இதேபோல், பாகிஸ்தானிலும் லாகூர், முல்தான், இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்நாட்டு, சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மாலை முதல் டெல்லியில் உள்ள அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து, ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மேலும், ரெயில் நிலையங்களில் சந்தேகத்துக்கு உரிய விதத்தில் பொருட்கள் கிடந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. #DelhiMetro
அரியானாவில் இன்று மேற்கு அதிவிரைவு சாலையை திறந்துவைத்த பிரதமர் நரேந்திர மோடி விரிவுப்படுத்தப்பட்ட டெல்லி மெட்ரோ ரெயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். #DelhiMetro #PMModi
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி இன்று அரியானா மாநிலம், குருகிராம் நகரில் மத்திய அரசின் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கத்தார் மற்றும் மத்திய, மாநில மந்திரிகள் பங்கேற்றனர். #EscortsMujesar #Ballabgarhsection #DelhiMetro #PMModi
பிரதமர் நரேந்திர மோடி இன்று அரியானா மாநிலம், குருகிராம் நகரில் மத்திய அரசின் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.
அவ்வகையில், மேற்கு புறநகர் அதிவிரைவு சாலையை வாகன போக்குவரத்துக்காக திறந்து வைத்தார். மேலும், எஸ்கார்ட்ஸ் முஜேசார் பகுதியில் இருந்து பலாப்கர் பகுதி வரையிலான டெல்லி மெட்ரோ ரெயில் சேவையின் விரிவாக்க போக்குவரத்தையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கத்தார் மற்றும் மத்திய, மாநில மந்திரிகள் பங்கேற்றனர். #EscortsMujesar #Ballabgarhsection #DelhiMetro #PMModi
அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் மற்றும் பிரதமர் மோடி மெட்ரோ ரெயிலில் நொய்டாவுக்கு பயணம் மேற்கொண்டனர். #SouthKorea #PMModi
புதுடெல்லி:
தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் 5 நாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். இன்று மத்திய மந்திரி சுரேஷ் பிரபு மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை அவர் சந்தித்து பேசினார். அப்போது, இரு நாடுகள் இடையே சில வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதனை அடுத்து, உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சாம்சங் செல்போன் உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி மற்றும் மூன் ஜே-இன் ஆகிய இருவரும் டெல்லி மெட்ரோ ரெயிலில் ஒன்றாக நொய்டா சென்றடைந்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி டெல்லி மெட்ரோவின் 3-வது கட்ட பச்சை வழித்தட ரெயில் சேவையை காணொளி காட்சி வழியே இன்று தொடங்கி வைத்தார். #PMModi #DelhiMetro #GreenLine
புதுடெல்லி:
டெல்லியில் இருந்து குருகிராம், ஃபரீதாபாத் ஆகிய இரண்டு நகரங்களுக்கும் ஏற்கனவே மெட்ரோ ரெயில் சேவை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லியின் முந்கா பகுதியில் இருந்து அரியானாவின் பகதூர்கர் பகுதி வரை புதிய மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தர்லோக் - முண்ட்கா வரையிலான பச்சை வழித்தடம் இப்போது முண்ட்கா முதல் பகதூர்கர் வரையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 11 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த பச்சை வழித்தட மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். தனது அலுவலகத்தில் இருந்தபடி காணொளிகாட்சி வழியே பிரதமர் மோடி அத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய மந்திரி ஹர்தீப் பூரி மற்றும் அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்று மாலை 4 மணியில் இருந்து பொதுமக்களுக்காக இந்த புதிய மெட்ரோ ரெயில் சேவை செயல்பட தொடங்கியது.
இந்த திட்டத்தினை தொடங்கி வைத்த பின் பேசிய பிரதமர் மோடி, பகதூர்கர் பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளது. அங்கு பல்வேறு கல்வி நிலையங்கள் உள்ளன. அங்கிருந்து மாணவர்கள் டெல்லிக்கு கூட சென்று பயில்கின்றனர். அரியானாவிற்கு நுழைவு வாயிலாக உள்ள இந்த பகுதியில் தொடங்கவுள்ள மெட்ரோ சேவை மிக பயனுள்ள வகையில் இருக்கும் என கூறினார். #PMModi #DelhiMetro #GreenLine