என் மலர்tooltip icon

    இந்தியா

    மெட்ரோ ரெயில் நிலைய சுவர் இடிந்து விபத்து- ஒருவர் பலி
    X

    மெட்ரோ ரெயில் நிலைய சுவர் இடிந்து விபத்து- ஒருவர் பலி

    • உயிரிழந்தவர் காரவால் நகரைச் சேர்ந்த வினோத் குமார்.
    • படுகாயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    டெல்லியில் உள்ள கோகுல்புரி மெட்ரோ ரெயில் நிலையத்தின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    இன்று காலை 11 மணியளவில் உயரமான ரெயில் நிலைய மேடையின் எல்லைச் சுவர் இடிந்து கீழே சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    விபத்தில் உயிரிழந்தவர் காரவால் நகரைச் சேர்ந்த வினோத் குமார் (53) என்பது தெரியவந்தது.

    இரு சக்கர வாகனத்தில் சென்ற காசியாபாத் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார், இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்தார்.

    மோனு, சந்தீப் மற்றும் முகமது தாசிர் ஆகிய மூவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் தற்போது உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்தை தொடர்ந்து, இரண்டு அதிகாரிகள் - ஒரு மேலாளர் மற்றும் ஒரு ஜூனியர் இன்ஜினியர் - இடைநீக்கம் செய்யப்பட்டதாக டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மேலும், விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 5 லட்ச ரூபாயும் டெல்லி மெட்ரோ அறிவித்துள்ளது.

    இந்த விவகாரத்தில் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

    Next Story
    ×