குடியரசு தினத்தன்று அதிகாலை 3 மணிக்கு சேவையை தொடங்கும் டெல்லி மெட்ரோ ரெயில்

அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை 30 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும். கடைசி நிமிட சிரமத்தை தவிர்க்க மெட்ரோ சேவைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தன்று அதிகாலை 3 மணிக்கு சேவையை தொடங்கும் டெல்லி மெட்ரோ ரெயில்
Published on

நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 76-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.

குடியரசு தினத்திற்காக நாளை அதிகாலை 3 மணிக்கு சேவைகள் தொடங்கப்படும் என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

குடியரசு தினத்தின் பெருமையையும் உணர்வையும் தேசம் கொண்டாடும் நிலையில், குடியரசு தின விழாவைக் காண கர்தவ்யா பாதைக்கு சுமூகமாக பயணிக்கவும் மக்களுக்கு உதவும் வகையில் டெல்லி மெட்ரோ நாளை அதிகாலை 3 மணிக்கு தனது சேவைகளைத் தொடங்கும்.

பயணிகளுக்கு சுமூகமான பயணத்தை உறுதி செய்வதற்காக அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை 30 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும். அதன் பிறகு நாள் முழுவதும் வழக்கமான கால அட்டவணை பின்பற்றப்படும்.

பயணிகள் அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிடவும், கடைசி நிமிட சிரமத்தைத் தவிர்க்கவும் மெட்ரோ சேவைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com