என் மலர்
நீங்கள் தேடியது "உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை"
- இருவருடன் நடந்து சென்ற வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இதைக் கவனித்து சிரித்தார்.
- அறுவை சிகிச்சையின் திறனைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் மனிதகுலம் மிகவும் சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ முடியும் என்று புதின் கூறினார்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற அறுவை சிகிச்சைகள் மூலம் இறவாமையை அடைய முடியுமா?
இதுகுறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் பேசிக்கொண்டது வைரலாகி வருகிறது.
சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள தியனன்மென் சதுக்கத்தில் இராணுவ அணிவகுப்புக்கு நடந்து செல்லும்போது இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட உரையாடல் மைக் திடீரென ஆன் ஆனதால் கசிந்தது.
அவர்கள் பேசியதாவது,
ஜி ஜின்பிங்: கடந்த காலத்தில், மக்கள் 70 வயதைத் தாண்டி வாழ்வது அரிது என்று கூறினோம். ஆனால் இன்று, உங்கள் 70 களில் கூட, (நீங்கள்) இன்னும் ஒரு குழந்தையாகவே இருக்கிறீர்கள்.
புதின்: ஆம். மிகச் சில ஆண்டுகளில், உயிரி தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன், மனித உறுப்புகள் தொடர்ந்து மாற்றப்படும். நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்களோ, அவ்வளவு இளமையாக இருப்பீர்கள். அந்த வகையில், இறவாமை சாத்தியமாகும்.
ஜி ஜின்பிங்: இந்த நூற்றாண்டில் மனிதர்கள் 150 ஆண்டுகள் வரை வாழ முடியும் என்று சிலர் கணிக்கின்றனர்.
இருவருடன் நடந்து சென்ற வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இதைக் கவனித்து சிரித்தார். உரையாடலின் மொழிபெயர்ப்பை அவர் கேட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் இது குறித்து கேட்டபோது, புதின் உரையாடலை உறுதிப்படுத்தினார்.
"நாங்கள் அணிவகுப்புக்கு நடந்து சென்றபோது ஜி ஜின்பிங் இதைப் பற்றிப் பேசினார் என்று நான் நினைக்கிறேன். தொழில்நுட்பம், சுகாதார அமைப்புகள் மற்றும் அறுவை சிகிச்சையின் திறனைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் மனிதகுலம் மிகவும் சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ முடியும்" என்று புதின் கூறினார்.
- ரியா மிஸ்திரியின் கை, அனம்தா அகமதுக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.
- ரியாவின் அண்ணன் ஷிவம் மிஸ்திரிக்கு ராக்கி கட்டி, அவரை சகோதரராக ஏற்றுக்கொண்டார்.
ரக்ஷா பந்தன் தினமான இன்று உருக்கமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வசிக்கும் 16 வயது அனம்தா அகமது, தனது கை மாற்று அறுவை சிகிச்சைக்கு உறுப்பு தானம் செய்த ரியா மிஸ்திரி என்பவரின் அண்ணன் ஷிவம் மிஸ்திரிக்கு தனது கைகளால் ராக்கி கட்டி சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினார்.
கடந்த ஆண்டு, 9 வயது சிறுமி ரியா மிஸ்திரி மூளைச்சாவு அடைந்தபோது, அவரது பெற்றோர் உறுப்பு தானம் செய்தனர். அதன்படி, ரியாவின் கை அனம்தா அகமதுக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.
அனம்தாவின் வலது கை, 2022-ல் மின்சாரம் தாக்கியதால் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, அனம்தா தனது குடும்பத்துடன் ரியா குடும்பத்தினர் வசிக்கும் வல்சாத் நகருக்குச் சென்றார்.
அங்கு, ரியா குடும்பத்தினரைச் சந்தித்த அனம்தா, ரியாவின் அண்ணன் ஷிவம் மிஸ்திரிக்கு ராக்கி கட்டி, அவரை சகோதரராக ஏற்றுக்கொண்டார். தனது சகோதரி ரியாவின் கையை கொண்ட அனம்தா தனக்கு ராக்கி கட்டி விட்டபோது 14 வயது சிறுவன் ஷிவம் ஆனந்த கண்ணீர் விட்டான்.
மதங்களை கடந்து ஏற்பட்ட இந்த பிணைப்பு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரியாவின் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், கார்னியா மற்றும் இடது கை ஆகியவையும் தானமாக வழங்கப்பட்டு, எட்டு பேர் உயிர்கள் காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- குருவா கோரன்ட்லா மாதவ் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி. ஆவார்
- 4 ஆண்களுக்கு 1 பெண் எனும் அளவில்தான் பயனாளிகள் விகிதாசாரம் உள்ளது
ஆந்திர பிரதேசத்தில் "யுவஜன ஸ்ராமிக ரைது காங்கிரஸ் கட்சி" சார்பில் (YSR Congress Party) அக்கட்சியின் தலைவர் ஒய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சி நடைபெறுகிறது.
அக்கட்சியின் சார்பில் ஹிந்துபூர் பாராளுமன்ற தொகுதியில் வென்றவர் குருவா கோரன்ட்லா மாதவ் (Kuruva Gorantla Madhav).
1995லிருந்து 2021 வரை உயிருள்ளவர்களிடமிருந்தும், இறந்தவர்களிடமிருந்தும் தானமாக பெறப்பட்ட உறுப்புகளை கொண்டு நடைபெற்ற 36,640 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் தானம் பெறுபவர்களில் 5ல் 4 பேர் ஆண்களாக இருப்பதை சுட்டி காட்டி இது குறித்து அரசு என்ன செய்ய உள்ளது என்று பாராளுமன்றத்தில் மாதவ் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பா.ஜ.க.வின் ஆக்ரா தொகுதி உறுப்பினரும், சுகாதாரத் துறை இணை அமைச்சருமான எஸ். பி. சிங் பாகேல் (63) எழுத்துபூர்வமாக பதிலளித்தார்.
அதில் பாகேல் தெரிவித்ததாவது:
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் 29,695 தானங்கள் ஆண்கள் பெற்றுள்ளனர்; பெண்கள் 6,945 எனும் எண்ணிக்கையில்தான் தானங்கள் பெற்றுள்ளனர். இது 4க்கு 1 எனும் சதவீதத்தில்தான் உள்ளது. ஆனால், 2019லிருந்து 2022 வரை இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. அரசு, தேசிய உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் ஆண், பெண் பேதமின்றி உறுப்பு மாற்று சிகிச்சை பெறலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
தடையின்றி சிகிச்சை நடைபெற அரசு மற்றும் அரசு-சாரா அமைப்புகள், சட்ட வல்லுனர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோருடன் ஒருங்கிணைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு பாகேல் கூறினார்.






