என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி"

    • குருவா கோரன்ட்லா மாதவ் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி. ஆவார்
    • 4 ஆண்களுக்கு 1 பெண் எனும் அளவில்தான் பயனாளிகள் விகிதாசாரம் உள்ளது

    ஆந்திர பிரதேசத்தில் "யுவஜன ஸ்ராமிக ரைது காங்கிரஸ் கட்சி" சார்பில் (YSR Congress Party) அக்கட்சியின் தலைவர் ஒய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சி நடைபெறுகிறது.

    அக்கட்சியின் சார்பில் ஹிந்துபூர் பாராளுமன்ற தொகுதியில் வென்றவர் குருவா கோரன்ட்லா மாதவ் (Kuruva Gorantla Madhav).

    1995லிருந்து 2021 வரை உயிருள்ளவர்களிடமிருந்தும், இறந்தவர்களிடமிருந்தும் தானமாக பெறப்பட்ட உறுப்புகளை கொண்டு நடைபெற்ற 36,640 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் தானம் பெறுபவர்களில் 5ல் 4 பேர் ஆண்களாக இருப்பதை சுட்டி காட்டி இது குறித்து அரசு என்ன செய்ய உள்ளது என்று பாராளுமன்றத்தில் மாதவ் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பா.ஜ.க.வின் ஆக்ரா தொகுதி உறுப்பினரும், சுகாதாரத் துறை இணை அமைச்சருமான எஸ். பி. சிங் பாகேல் (63) எழுத்துபூர்வமாக பதிலளித்தார்.

    அதில் பாகேல் தெரிவித்ததாவது:

    உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் 29,695 தானங்கள் ஆண்கள் பெற்றுள்ளனர்; பெண்கள் 6,945 எனும் எண்ணிக்கையில்தான் தானங்கள் பெற்றுள்ளனர். இது 4க்கு 1 எனும் சதவீதத்தில்தான் உள்ளது. ஆனால், 2019லிருந்து 2022 வரை இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. அரசு, தேசிய உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.

    இதில் ஆண், பெண் பேதமின்றி உறுப்பு மாற்று சிகிச்சை பெறலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    தடையின்றி சிகிச்சை நடைபெற அரசு மற்றும் அரசு-சாரா அமைப்புகள், சட்ட வல்லுனர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோருடன் ஒருங்கிணைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு பாகேல் கூறினார்.

    ×