என் மலர்

  நீங்கள் தேடியது "Sanju Samson"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வெளியில் என்ன பேசிக்கொண்டாலும், அது அணியில் எங்களை பாதிக்கவே பாதிக்காது.
  • பயிற்சியாளருடன் இணைந்து யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஆலோசித்து தான் எடுக்கிறேன்.

  டி20 உலகக்கோப்பை தொடரை முடித்துக்கொண்டு நேரடியாக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1 - 0 என்ற புள்ளி கணக்கில் தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது.

  இந்த தொடரில் இந்தியா வெற்றி கண்ட போதும், ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றங்கள் உள்ளன. இதற்கு காரணம் சஞ்சு சாம்சன் மற்றும் உம்ரான் மாலிக் தான்.

  எந்த ஆர்டரில் வேண்டுமானாலும் களமிறங்கி அதிரடி காட்டக்கூடிய சஞ்சுசாம்சனுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுவதே இல்லை. இதே போல இந்தியாவின் எதிர்காலமாக பார்க்கப்படும் உம்ரான் மாலிக்கிற்கும் வாய்ப்புகளே தரப்படவில்லை. சாம்சனுக்கு மாற்றாக விளையாடிய ரிஷப் பண்ட் சொதப்பிய போதும், வாய்ப்பு தரப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

  இந்நிலையில் அவர்கள் குறித்து ஹர்திக் பாண்ட்யா விளக்கம் அளித்துள்ளார். அதில், வெளியில் என்ன பேசிக்கொண்டாலும், அது அணியில் எங்களை பாதிக்கவே பாதிக்காது. இது என்னுடைய அணி. பயிற்சியாளருடன் இணைந்து யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஆலோசித்து தான் எடுக்கிறேன். ஒவ்வொருவருக்கும் நேரம் வரும் போது, அவர்களுக்கான வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும்.

  இது ஒரு சிறிய தொடராகும். ஒருவேளை இது நிறைய போட்டிகள் கொண்ட தொடராக இருந்திருந்தால் நிச்சயம் அனைவரையும் பயன்படுத்தி பார்த்திருப்போம். 6 பவுலிங் ஆப்ஷன்களுடன் செல்ல வேண்டும் என முடிவெடுத்தேன். அதற்கு தீபக் ஹூடா சரியாக இருந்தார். ஒரு பேட்டர், நன்கு பந்துவீசவும் தெரிந்திருந்தால் எதிரணிகளுக்கு அதிர்ச்சி தர முடியும் என ஹர்திக் பாண்ட்யா விளக்கம் தந்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டி20-யில் இந்தியாவின் அணுகுமுறை குறித்து விமர்சனம்
  • உலகக் கோப்பை தோல்விக்குப்பின் பல்வேறு மாற்றங்கள் வரும் என எதிர்பார்ப்பு

  டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது. இந்திய அணி பவர் பிளேயில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது முக்கிய காரணம் என விமர்சிக்கப்பட்டது. மேலும், டி20-யில் பயமில்லாமல் விளையாடும் அணுகுமுறை இந்திய வீரர்களிடம் இல்லை என்ற விமர்சனமும் வைக்கப்பட்டது.

  இதனால் இந்திய அணியில் அதிரடி மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், இந்திய அணி நியூசிலாந்தில் விளையாடி வருகிறது.

  இந்த தொடரில் ரோகித் சர்மா, கே.எல். ராகுல், விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் இளம் வீரர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

  முதல் ஆட்டம் மழையால் ரத்தானது. 2-வது போட்டியில் இஷான் கிஷன், ரிஷப் பண்ட், புவி, வாசிங்டன் சுந்தர் இடம் பிடித்திருந்தனர். வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

  இன்று 3-வது போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வாசிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு ஹர்சல் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டார். உம்ரான் மாலிக், சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

  ரிஷப் பண்ட், புவனேஷ்வர் குமார் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டது ரசிகர்களை கோப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், பல வருடங்களாக வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் சஞ்சு சாம்சன், அதிவேகமாக பந்து வீசும் உம்ரான் மாலிக் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காதது குறித்து டுவிட்டர்வாசிகள் அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

  ஹிமான்ஷு பரீக் என்பவர் ''சஞ்சு சாம்சன் மீண்டும் புறந்தள்ளப்பட்டுள்ளார். கேப்டன், அணி நிர்வாகம் மீது எனக்கு எந்த மரியாதையும் இல்லை'' எனப் பதவிட்டுள்ளார்.

  சுஷாந்த் மேத்தா ''சஞ்சு சாம்சன் இல்லை. உம்ரான் மாலிக் இல்லை. இன்னும் புவனேஷ்வர் குமார் ஏன் அணியில் உள்ளார்? இதற்கு யாராவது ஒருவர் விளக்கம் அளிக்க முடியுமா?'' என பதிவிட்டுள்ளார்.

  அவினாஷ் அர்யன் ''சஞ்சு சாம்சன், உங்கள் பொறுமைக்கு தலை வணங்குகிறேன். ஒருவர் வீரர் 60 போட்டிகளுக்கும் மேல் விளையாடிய நிலையில் தொடர்ந்து அணியில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. சஞ்சு சாம்சன் பார்த்துக் கொண்டிருக்கிறார்'' என பதிவிட்டுள்ளார்.

  வைபவ் போலா ''சஞ்சு சாம்சன் இல்லை. ஷுப்மான் கில் இல்லை. உம்ரான் மாலிக் இலலை. குல்தீப் யாதவ் இல்லை... இது நகைச்சுவை'' என பதிவிட்டுள்ளார்.

  சந்தோஷ் ஆர். கோடேட்டி ''மீண்டும் சாம்சன், உம்ரான் மாலிக் பெஞ்சில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத மோசமான நிர்வாகம். புவிக்கு இன்னும் எவ்வளவு வாய்ப்பு வழங்குவீர்கள்?'' என பதிவிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கேஎல் ராகுலுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
  • ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சன் இடம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  டிரினிடாட்:

  இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த லோகேஷ் ராகுல் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவரை ஓய்வு எடுக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

  இதனையடுத்து அவர் அணியில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனை இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு கமிட்டி நேற்று அறிவித்தது. இதற்கு முன்னதாக நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

  அந்த அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அணியில் விக்கெட் கீப்பர்கள் ரிஷப் பண்ட், இஷான் கிஷன் ஆகியோரும் இடம் பெற்று இருப்பதால் சஞ்சு சாம்சனுக்கு களம் காணும் அணியில் இடம் கிடைக்குமா? என்பது சந்தேகம் தான்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதை தீபக் ஹூடா தட்டிச் சென்றார்.
  • 2017-ல் இலங்கை அணிக்கு எதிராக கேஎல் ராகுல் - ரோகித் சர்மா ஜோடி 165 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

  இந்திய அணி இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக அயர்லாந்து சென்றது. முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

  முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்தது. அயர்லாந்து அணி 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. யாரும் எதிர்பார்க்க முடியாத அளவில் அவர்களது பேட்டிங் இருந்தது. இந்திய அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசினார். கடைசியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி தோல்வி அடைந்தது. இதனால் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியது.

  ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதை தீபக் ஹூடா தட்டிச் சென்றார். இந்த போட்டியில் சாம்சன் மற்றும் ஹூடா ஜோடி 87 பந்துகள் சந்தித்து 176 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளது. டி20 போட்டிகளில் இந்திய அணியில் அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையை சாம்சன் - ஹூடா படைத்துள்ளது. இதற்கு முன்பு 2017-ல் இலங்கை அணிக்கு எதிராக கேஎல் ராகுல் - ரோகித் சர்மா ஜோடி 165 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

  டி20 தொடரில் ஓட்டு மொத்தமாக அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் இவர்கள் 9-வது இடத்தை பிடித்துள்ளனர். முதலிடத்தில் ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரதுல்லா ஜசாய் மற்றும் உஸ்மான் கானி ஆகியோர் பட்டியலில் உள்ளனர். இந்த ஜோடி அயர்லாந்துக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 236 ரன்கள் சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்திய அணியில் தீபக் ஹூடா சதமடித்தார்.
  • அயர்லாந்து கேப்டன் 60 ரன்கள் குவித்தார்.

  டப்ளின்:

  அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. முதல் டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி டப்ளினில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

  அடுத்து களம் இறங்கிய தீபக் ஹூடா சஞ்சு சாம்சனுடன் இணைந்து அயர்லாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். பவுண்டரிகள், சிக்சர்களாக பறக்கவிட்ட இந்த ஜோடி, 2வது விக்கெட்டுக்கு 176 ரன்கள் குவித்து அசத்தியது.

  சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 4 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 77 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். தொடர்ந்து அதிரடி காட்டிய தீபக் ஹூடா 57 பந்துகளில் 6 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 15 ரன்னில் வெளியேறினார். தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல் ஆகியோர் டக் அவுட்டாகினர்.

  இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை குவித்தது. இதையடுத்து, 228 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் பால் ஸ்டிர்லிங் 40 ரன்கள் அடித்தார். அதிகபட்சமாக கேப்டன் ஆன்டி பால்பிர்னி 60 ரன்கள் குவித்தார்.

  ஹாரி டெக்டர் 39 ரன்களும், ஜார்ஜ் டாக்ரெல் 34 ரன்களும் எடுத்தனர். வெற்றி பெற கடைசி வரை அந்த அணி வீரர்கள் போராடினர். கடைசி ஓவரில் 1 பந்துக்கு 6 ரன் தேவைப்பட்ட நிலையில், அயர்லாந்து 2 ரன் மட்டுமே எடுத்து. 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 221 ரன்கள் அடித்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்தியாவின் தீபக் ஹூடா அதிரடியாக ஆடி 55 பந்துகளில் சதமடித்தார்.
  • தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 176 ரன்களை குவித்தது.

  டப்ளின்:

  அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  இந்நிலையில், இரு அணிகள் மோதும் 2வது டி20 போட்டி டப்ளினில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

  அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 13 ஆக இருக்கும்போது இஷான் கிஷன் 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

  அடுத்து இறங்கிய தீபக் ஹூடா சஞ்சு சாம்சனுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் அயர்லாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். பவுண்டரிகள், சிக்சர்களாக பறக்கவிட்டனர்.

  சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 176 ரன்கள் குவித்து அசத்தியது. சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 4 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 77 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 15 ரன்னில் வெளியேறினார்.

  அயர்லாந்து பந்துவீச்சை நாலாபுறமும் விரட்டிய தீபக் ஹூடா 57 பந்துகளில் 6 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல் ஆகியோர் டக் அவுட்டாகினர்.

  இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை குவித்தது. இதையடுத்து, 228 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்குகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரளாவின் திருவல்லாவில் உள்ள கல்லூரியில் படித்து வரும் ஆதர்ஷுக்கு தற்போது பலரும் நிதியுதவி செய்துள்ளார்கள்.
  கேரளாவைச் சேர்ந்த இளம் கால்பந்து வீரர் ஆதர்ஷ். இவருக்கு 5-வது டிவிஷன் பிரிவில் கால்பந்துப் பயிற்சி பெறுவதற்காக ஸ்பெயினுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. 

  இந்த ஒரு மாதப் பயிற்சியில் அவரால் 5 ஆட்டங்களில் விளையாட முடியும். அவருடைய திறமை அங்கீகரிக்கப்பட்டால் ஸ்பெயின் கிளப்புகளில் தேர்வாகவும் வாய்ப்புண்டு. 

  ஆனால் ஸ்பெயினுக்குச் சென்று பயிற்சி எடுக்கும் அளவுக்கு நிதி வசதி இல்லை. எனவே, அவர் கேரள அமைச்சர் சாஜி செரியனிடம் உதவி கோரினார். இதனைத் தொடர்ந்து, ஆதர்ஷின் நிலைமை மற்றவர்களும் தெரியவந்தது. பலர் உதவி செய்ய முன் வந்துள்ளார்கள். 

  கேரளாவின் திருவல்லாவில் உள்ள கல்லூரியில் படித்து வரும் ஆதர்ஷுக்குத் தற்போது பலரும் நிதியுதவி செய்துள்ளார்கள். மேலும்,  தனியார் கிளப் ஒன்று ரூ. 50,000 அளித்த நிலையில் கேரள அமைச்சர் சாஜி செரியனும் வெளிநாட்டுப் பயிற்சிக்காக ஆதர்ஷுக்கு நிதியுதவி செய்துள்ளார். 

  அதுமட்டுமல்லாமல், பிரபல கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனும் தன் பங்குக்கு ஆதர்ஷுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். ஆதர்ஷ் ஸ்பெயின் செல்வதற்கான விமான டிக்கெட் செலவை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆதர்ஷ் விரைவில் மேட்ரிட் சென்று பயிற்சியில் பங்கேற்க வாழ்த்து தெரிவித்துள்ளார் சஞ்சு சாம்சன்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பரான கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் தனது காதலி சாரு என்பவரை கரம்பிடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். #SanjuSamson
  திருவனந்தபுரம்:

  இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் 23 வயதான சஞ்சு சாம்சன். இந்திய அணிக்காக ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

  கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் தனது கல்லூரிகால காதலி சாரு என்பவரை கரம்பிடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இவர்களது திருமணம் டிசம்பர் 22-ந்தேதி நடக்கிறது.

  காதலியுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள சாம்சன், ‘எங்களது காதலுக்கு பெற்றோரின் சம்மதம் வாங்க, காதலித்து வந்த கல்லூரி தோழி குறித்து வெளியில் தெரிவிக்காமல் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் பொறுமை காத்தேன். எப்போது இந்த புகைப்படத்தை வெளியிடப்போகிறேன் என்ற ஆவலில் இருந்தேன். என்னதான் நாங்கள் காதலர்களாக இருந்தாலும், பொது இடங்களில் ஒன்றாக சுற்றியது இல்லை. இப்போது இரண்டு பேரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்டதால் மகிழ்ச்சியில் திளைக்கிறோம். உங்களின் (ரசிகர்கள்) இதயபூர்வமான ஆசியை வழங்குங்கள்’ என்றும் அதில் பதிவிட்டுள்ளார்.  #SanjuSamson
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியா ‘ஏ’ அணியில் விளையாடும் வாய்ப்பை சஞ்சு சாம்சன் இழந்துள்ளார். #IndiaA
  ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய ‘ஏ’ அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இந்தியாவுடன் இங்கிலாந்து லயன், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடர் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது.

  இந்த தொடருக்கான இந்திய ‘ஏ’ அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன சஞ்சு சாம்சன் இடம்பிடித்திருந்தார். நேற்று இந்திய ‘ஏ’ அணி இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றது. அப்போது சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெறவில்லை.  இதுகுறித்து விசாரித்தபோது, தற்போது இந்திய அணியில் இடம்பெற வேண்டுமென்றால் யோ-யோ டெஸ்டில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும். இந்த டெஸ்டில் மிகவும் குறைவான ஸ்கோர் பெற்றதால் சஞ்சு சாம்சன் இந்தியா ‘ஏ’ அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  ஐபிஎல் மற்றும் விஜய் ஹசாரே தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன், இந்திய ‘ஏ’ அணியில் தேர்வு பெற்றும், யோ-யோ டெஸ்டில் நீக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான ரிஷப் பந்த் மற்றும் சஞ்சு சாம்சனின் ஆட்டநிலை சிறப்பாகிக் கொண்டிருக்கிறது என்று சையத் கிர்மானி தெரிவித்துள்ளார்.
  ஐபிஎல் 2018 சீசனில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ரிஷப் பந்த், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்டலர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தினேஷ் கார்த்திக் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

  இந்நிலையில் இளம் விக்கெட் கீப்பர்களான ரிஷப் பந்த், சஞ்சு சாம்சனின் ஆட்டநிலை சிறப்பாகிக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் விக்கெட் கீப்பராக சையத் கிர்மானி தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து சையத் கிர்மானி கூறுகையில் ‘‘இளம் விக்கெட் கீப்பர்கள் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் இருந்து வந்தவர்கள். சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் போன்றோர்களின் ஆட்டநிலை மிகவும் சிறப்பாகிக் கொண்டு வருகிறது. இருவரும் தங்களுடைய பணிகளை சரியாக செய்துக் கொண்டிருக்கின்றனர்.  ஆனால், இன்னும் ஏராளமான வகையில் முன்னேற்றம் காண வேண்டும். இந்த முன்னேற்றம் அனுபவத்தால் மட்டுமே கிட்டும். மாறுபட்ட சூழ்நிலையில், ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சார்களுக்கு எதிராக இன்னும் அதிகமான அனுபவத்தை பெற வேண்டும்.

  ஒரு தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் போதாது. உள்ளூர் தொடர்களில் தொடர்ச்சியாக சிறப்பான விளையாட வேண்டும். ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் அபாரமாக விளையாடினார். இதேபோல் டெஸ்ட், நான்கு நாள் ஆட்டம் மற்றும் 50 ஓவர் போட்டியில் விளையாடுவார் என்று நினைக்கவில்லை’’ என்றார்.
  ×