என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஃபார்முக்கு வர சஞ்சு சாம்சனுக்கு ஒரு அசத்தல் ஆட்டம் போதும்: மோர்னே மோர்கல் நம்பிக்கை
- நியூசிலாந்து தொடரில் 3 போட்டிகளில் வெறும் 16 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
- உலகக் கோப்பைக்கான அணியின் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் உள்ளார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முடிவடைந்துள்ள முதல் மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 3-0 எனத் தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், சஞ்சு சாம்சன் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. 3 போட்டிகளில் வெறும் 16 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அவரது ஃபார்ம் அணிக்கு கவலை அளிக்கும் விதமாக உள்ளது. என்றாலும், இந்திய அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது.
நம்பிக்கை, மீண்டும் ஃபார்முக்கு வர சஞ்சு சாம்சனுக்கு ஒரு ஆட்டம் போதும் என பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மோர்னே மோர்கல் கூறியதாவது:-
நம்பிக்கை மற்றும் மீண்டும் ஃபார்முக்கு வருவதற்கு சஞ்சு சாம்சனுக்கு ஒரு போட்டியில் அதிரடி ஆட்டம் அமைந்தால் போதும். எங்களுக்கு, உலகக் கோப்பைக்கான அணியை கட்டமைக்க வேண்டும். போட்டி நடைபெறும் நேரத்தில் வீரர்கள் அவர்களுடைய உயர்ந்த ஆட்டத்தை வைத்திருக்க வேண்டும். அவர் சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். பந்தை சிறப்பாக ஹிட் செய்கிறார்.
அவருடைய ஃபார்மை கொஞ்ச காலத்திற்கும் பெற்றுவிடுவார். ஆனால், முக்கிய கவனம் அணி வெற்றி பெற வேண்டும் என்பதுதான். தற்போது நாங்கள் 3-0 என இருக்கிறோம். வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். உலகக் கோப்பைக்கு முன்னதாக இரண்டு போட்டிகள் உள்ளன. சஞ்சு சாம்சன் அவரது ஃபார்மை பெற்றுவிடுவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
இவ்வாறு சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.






