என் மலர்
நீங்கள் தேடியது "டி20 உலகக்கோப்பை"
- திலக் வர்மா மோசமான ஷாட் விளையாடி அவுட் ஆனார்.
- இந்தியா பெரிய ஸ்கோரை துரத்த தொடர்ந்து போராடுகிறது.
10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
சூப்பர்-8 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அரை இறுதிக்கு இந்தியா தகுதி பெற எஞ்சி உள்ள 2 ஆட்டங்களிலும் (ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ்) கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் பலவீனங்களை முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் பட்டியலிட்டார்.
முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கூறியதாவது:-
சஞ்சு சாம்சன் இந்திய அணியின் பிளேயிங் 11-க்குள் வர வேண்டும் என்றால், திலக் வர்மாவுக்கு இடம் கிடைக்காது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் திலக் வர்மா மோசமான ஷாட் விளையாடி அவுட் ஆனார். அப்படி ஒரு ஷாட்டை விளையாடிய பிறகு அவர் களத்தில் இருக்க தகுதியற்றவராக இருந்தார்.
விராட் கோலி போன்ற ஒரு ரன் இலக்கு துரத்தும் ஒரு வீரர் இல்லாதது அணியில் பெரிய ஓட்டையை தெளிவாக காட்டுகிறது. அவர் இல்லாமல் இந்தியா பெரிய ஸ்கோரை துரத்த தொடர்ந்து போராடுகிறது. இதனால் அனைத்து அணிகளும் முதலில் பேட்டிங் செய்து இந்தியாவுக்கு ரன்களை இலக்குகளாக நிர்ணயிக்கும் என்றார்.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா மிகப்பெரிய தோல்வியை சந்தித்து உள்ளது.
- அரைஇறுதிக்கு தகுதி பெற இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது.
10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
சூப்பர்-8 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அரை இறுதிக்கு இந்தியா தகுதி பெற எஞ்சி உள்ள 2 ஆட்டங்களிலும் (ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ்) கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணி 3 விஷயங்களில் முன்னேற்றம் காண வேண்டும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா மிகப்பெரிய தோல்வியை சந்தித்து உள்ளது. இத்தொடரில் லீக் சுற்றுக்கு பிறகு இந்தியா முதல் வலுவான அணியை சந்தித்தது. ஆனால் அதில் இந்திய வீரர்கள் உண்மையில் சிறப்பாக விளையாடவில்லை. இருந்த போதிலும் அரைஇறுதிக்கு தகுதி பெற இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்துக்கு பிறகு இந்திய அணி 3 பகுதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது.
சுழற்பந்து வீச்சுக்கு எதிராக இந்திய வீரர்கள் போராடுகிறார்கள். அதை சரிசெய்ய வேண்டும். நல்ல சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் வகையில் பேட்டிங் வரிசையை மறு சீரமைக்க முயற்சி செய்ய வேண்டும். திலக் வர்மா போன்றவர்கள், கொஞ்சம் சிரமப்பட்டு வருவதால் அவர்களது வரிசையை மாற்ற வேண்டும்.
வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது வேகத்தை குறைத்து பந்து வீசியபோது இந்திய வீரர்கள் சிரமப் பட்டனர். இதில் அதிகம் சிரமப்பட்டவர் கேப்டன் சூர்யகுமார் யாதவ்தான். எனவே இதில் கூடுதல் கவனம் செலுத்தி முன்னேற்ற காண வேண்டும்.
அதிக பேட்ஸ்மேன்களைச் சேர்ப்பதற்குப் பதிலாக இந்தியா தனது பந்துவீச்சுத் தாக்குதலை வலுப்படுத்த வேண்டும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் குல்தீப் யாதவை சேர்த்திருந்தால் முடிவு மாறி இருக்கலாம். அவர் விளையாடியிருந்தால், இந்தியா ஒரு முக்கியமான நேரத்தில் டேவிட் மில்லரை வெளியேற்றியிருக்கலாம். எனவே இந்த 3 பகுதிகளில் சிறப்பாக பணியாற்றினால் இறுதிச் சுற்றுகளுக்குள் நுழைந்து பட்டத்தை வெல்ல முடியும்.
இவ்வாறு மஞ்ச்ரேக்கர் கூறினார்.
- அக்ஷர் படேல் ஓரங்கட்டப்பட்டது மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
- வாஷிங்டன் சுந்தர் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய டி20 உலகக்கோப்பையில் போட்டியில் இந்திய வீரர்கள் தேர்வு தொடர்பாக பயிற்சியாளர் கம்பீர், கேப்டன் சூர்ய குமார் யாதவ் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
அணியின் துணை கேப்ட னும், ஆல்ரவுண்டருமான அக்ஷர் படேலுக்கு வாய்ப்பு வழங்காதது விவாத பொருளாகியுள்ளது.
அக்ஷர் படேல் ஓரங்கட்டப்பட்டது மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர் 2 ஓவர் வீசி 17 ரன்களை கொடுத்து விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை. பேட்டிங்கிலும் சாதிக்க தவறினார். 11 பந்துகளை சந்தித்து 11 ரன் மட்டுமே எடுத்தார்.
கடந்த காலங்களில் அக்ஷர் படேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். கடந்த உலக கோப்பையில் தென் ஆப்பி ரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 5-வது வீரராக பேட்டிங் செய்தார். அவர் நீக்கப்பட்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
கம்பீரும், சூர்யகுமார் யாதவும் வீரர்கள் தேர்வில் சரியான முறையை கையாளவில்லை என்று கண்டனங்கள் எழுந்து உள்ளன. இதே போல மோசமாக விளையாடி வரும் அபிஷேக் சர்மா, திலக் வர்மா ஆகியோருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவதும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
- அயர்லாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்தானது.
- பந்து வீச்சில் ஹோல்டர், போர்டே, குடகேஷ் மோட்டி பார்மில் இருக்கிறார்கள்.
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் ஜிம்பாப்வே- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு உலகக் கோப்பையில் கணிப்புக்கு மாறாக ஜிம்பாப்வே அணி திடீரென விசுவரூபம் எடுத்தது. லீக் சுற்றில் ஓமன், ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகளை தோற்கடித்தது. அயர்லாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்தானது.
இதில் இலங்கைக்கு எதிராக 179 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து அட்டகாசப்படுத்திய ஜிம்பாப்வே தோல்வியே சந்திக்காமல் சூப்பர்8 சுற்றுக்கு வந்துள்ளது.
வெஸ்ட் இண்டீசும் அப்படி தான். ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, நேபாளம், இத்தாலி ஆகிய அணிகளை போட்டுத்தாக்கியது. பேட்டிங்கில் கேப்டன் ஷாய் ஹோப் (2 அரைசதம் உள்பட 155 ரன்), ரூதர்போர்டு, ஹெட்மயர் நல்ல நிலையில் உள்ளனர்.
பந்து வீச்சில் ஹோல்டர், போர்டே, குடகேஷ் மோட்டி பார்மில் இருக்கிறார்கள். என்றாலும் ஜிம்பாப்வே இப்போது அபாயகரமான அணியாக தெரிவதால், முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆடும் என்று நம்பலாம்.
- அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது.
- அதிகபட்சமாக கேப்டன் லோர்கன் டுச்செர் 94 ரன்கள் அடித்தார்.
டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் அயர்லாந்து - ஓமன் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதற்படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் லோர்கன் டுச்செர் 94 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து 236 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணி 18 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்து 96 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதன்மூலம் இந்த உலகக்கோப்பையில் அயர்லாந்து அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
- சிறப்பாக விளையாடிய ஷெர்பேன் ரூதர்போர்ட் அரைசதம் அடித்து அசத்தினார்.
- இங்கிலாந்து அணி தரப்பில் அடில் ரசீத் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இன்றைய போட்டியில் வேஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரான்டன் கிங் 1 ரன்னிலும் ஹோப் டக் அவுட்டாகியும் வெளியேறினர். அடுத்ததாக களமிறங்கிய ஷிம்ரன் ஹெட்மயர் 23 ரன்னிலும் ரோஸ்டன் சேஸ் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
சிறப்பாக விளையாடிய ஷெர்பேன் ரூதர்போர்ட் அரைசதம் அடித்து அசத்தினார். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஜேசன் ஹோல்டர் 33 ரன்கள் அடித்து அவுட்டானார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரூதர்போர்ட் 76 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்தார்.
இங்கிலாந்து அணி தரப்பில் அடில் ரசீத் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
- தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் டி20 உலக கோப்பை தொடரில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகினார்.
- அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தி வருகிறார்
10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் டி20 உலக கோப்பை தொடரில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகினார். காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் விலகிய நிலையில், அவருக்கு பதில் ஸ்டீவ் ஸ்மித் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தி வரும் நிலையில், மீதமுள்ள போட்டிகளில் ஸ்மித் அணியை தலைமை தாங்குவார் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
- டாஸ் வென்ற அயர்லாந்து பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இலங்கை 20 ஓவரில் 163 ரன்கள் எடுத்தது.
கொழும்பு:
டி20 உலகக் கோப்பை தொடரின் 6-வது லீக் போட்டியில் இலங்கை, அயர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. குசால் மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். கமிந்து மெண்டிஸ் 19 பந்தில் 44 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து ஆடிய அயர்லாந்து 19.5 ஓவரில் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இலங்கை சார்பில் ஹசரங்கா, தீக்ஷனா தலா 3 விக்கெட்டும், பதிரனா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- கிரிக்கெட் வீரர் நடராஜன் பந்து வீச அமைச்சர் லட்சுமி நாராயணன், நடிகை தேவயானி உள்ளிட்டோர் விளையாடினர்.
- கிரிக்கெட் வீரர்கள் நடராஜ் ஆகியோரிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் பெற்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூரில் புதிதாக அமைக்கப்பட்ட செயற்கை புல்வெளி விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு தலைமை விருந்தினர்களாக இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், பிரபல திரைப்பட நடிகை தேவயானி, புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், திரைப்பட நடிகர் மணி ஆகியோர் கலந்து கொண்டு மைதானத்தை திறந்து வைத்தனர்.
கிரிக்கெட் வீரர் நடராஜன் பந்து வீச அமைச்சர் லட்சுமி நாராயணன், நடிகை தேவயானி, நடிகர் மணி உள்ளிட்டோர் விளையாடினர். அப்போது நடிகை தேவயானிக்கு வீசப்பட்ட ஒரே பந்தில் அவர் கிளீன் போல்டானார்.
தொடர்ந்து நடிகர் தேவயானி மற்றும் கிரிக்கெட் வீரர்கள் நடராஜ் ஆகியோரிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் பெற்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
பின்னர் நிருபர்களுக்கு நடராஜன் அளித்த பேட்டியில் கூறியதாவது :-
தற்போதைய இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 பிரிவுகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா 260 ரன்கள் அடித்தது சிறப்பான தொடக்கம்.
இன்று முதல் டி20 உலககோப்பை தொடங்குகிறது. இதில் கண்டிப்பாக வெற்றி பெற்று உலககோப்பையை இந்தியா மீண்டும் வெல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியாவில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடமாட்டோம் என வங்கதேசம் தெரிவித்தது.
- தங்கள் அணி ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேசம் வலியுறுத்தியது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அங்கம் வகித்த வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானை, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உத்தரவின் பேரில் அந்த அணி நிர்வாகம் விடுவித்தது. வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த வங்கதேசம், இந்திய மண்ணில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடமாட்டோம். அங்கு எங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. எனவே தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்தும் மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது.
ஆனால் கடைசி நேரத்தில் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்வது இயலாத காரியம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கைவிரித்தது.
இதையடுத்து 2026 டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்நிலையில், வங்கதேச அணி விலகியதால் ஸ்காட்லாந்து அணி டி20 உலகக்கோப்பையில் சேர்க்கப்பட்டுள்ளது.
- இந்தத் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்றன.
- இறுதிப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி நேபாளத்தை வீழ்த்தியது.
புதுடெல்லி:
இந்தியா, இலங்கையில், பார்வையற்றோர் பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை முதல் சீசன் நடைபெற்றது.
இந்தத் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்றன. இத்தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி நேபாளத்தை வீழ்த்தியது.
இந்நிலையில், பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்துப் பாராட்டினார். அவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துத் தெரிவித்த அவர், கிரிக்கெட் பேட் பரிசாக வழங்கினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், பார்வையற்ற பெண்களுக்கான முதல் டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள். இது உண்மையிலேயே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விளையாட்டு சாதனை, கடின உழைப்பிற்கு ஓர் எடுத்துக்காட்டு. அணியின் எதிர்கால முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். இந்த சாதனை வருங்கால சந்ததியினருக்கு ஊக்கம் அளிக்கும் என தெரிவித்துள்ளார்.
- மெல்போர்ன் நகரில் இன்று மழை பெய்வதற்கு 90 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
- தொடர்ந்து மழை பெய்து வந்து உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு நடுவர்கள் மைதானத்தை ஆய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
மெல்போர்ன்:
20 ஓவர் உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. 'சூப்பர்-12' சுற்றில் குரூப்-1 பிரிவில் இடம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து அணிகள் மோதும் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை மெல்போர்ன் நகரில் தொடங்க இருந்தது.
அயர்லாந்து அணி 2 ஆட்டத்தில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றது. அந்த அணி இலங்கையிடம் தோற்றது. இங்கிலாந்தை வீழ்த்தியது. ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது.
நியூசிலாந்துடன் மோத இருந்த ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தான் இன்று தனது 3-வது ஆட்டத்தில் அயர்லாந்தை சந்தித்தது.
மெல்போர்ன் நகரில் இன்று மழை பெய்வதற்கு 90 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு ஏற்றார் போல் டாஸ் போடுவதற்கு முன்பு மழை பெய்ய தொடங்கியது. இதனால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
ஆடுகளம் மற்றும் மைதானத்தின் மற்ற பகுதிகள் மூடப்பட்டு இருந்தது. தொடர்ந்து மழை பெய்து வந்து உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு நடுவர்கள் மைதானத்தை ஆய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மாலை 3 மணியளவில் மழை குறைந்த நிலையில் அரை மணி நேரத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதனால் போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து (குரூப்-1) மெல்போர்னில் மோத உள்ளன. இந்த ஆட்டமும் மழையால் பாதிக்க வாய்ப்பு உள்ளது.






