என் மலர்

  நீங்கள் தேடியது "Smith"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் விளாசி ஸ்டீவ் ஸ்மித் கெத்து காட்டியுள்ளார்.
  ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இருவருக்கும் ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. தடைக்காலம் முடிவடைந்ததால், இருவரும் ஐபிஎல் தொடரில் விளையாடினார்கள். ஐபிஎல் தொடரில் விளையாடி உடற்தகுதியை நிரூபித்ததால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்தனர்.

  தற்போது உலகக்கோப்பைக்கு தயாராக நியூசிலாந்தை ஆஸ்திரேலியா வரவழைத்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம். நடைபெற்ற 2-வது போட்டியில் 89 ரன்கள் அடித்த ஸ்மித், இன்றைய 3-வது ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் விளாசி தனது திறமையை நிரூபித்துள்ளார்.  ஆனால் வார்னர் முதல் ஆட்டத்தில் 39 ரன்கள் சேர்த்தார். 2-வது ஆட்டத்தில் டக்அவுட் ஆன அவர், இன்றைய போட்டியில் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

  முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் அடித்தது. பின்னர் 287 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 44 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. இதனால்  Duckworth/Lewis/Stern விதிப்படி ஆஸ்திரேலியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் டேவிட் வார்னர் டக்அவுட் ஆகிய நிலையில், ஸ்மித் சிறப்பாக விளையாடி 89 ரன்கள் விளாசினார். #CWC2019
  ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஸ்மித் மற்றும் வார்னர். இருவரும் தென்ஆப்பிரிக்கா தொடரின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்றனர். இந்தத்தடை தற்போது முடிவடைந்ததால், உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

  நேற்றுமுன்தினம் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துக்கு எதிராக உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் மோதியது. இதில் இருவரும் களம் இறங்கினர். 3-வது வீரராக களம் இறங்கிய டேவிட் வார்னர் 39 ரன்கள் சேர்த்தார். அடுத்து களம் இறங்கிய ஸ்மித் 22 ரன்கள் சேர்த்தார்.

  இரு அணிகளுக்கு இடையிலான 2-வது பயிற்சி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  முதல் ஆட்டத்தில் 39 ரன்கள் சேர்த்த டேவிட் வார்னர் டக்அவுட் ஆனார். ஆனால் ஸ்மித் சிறப்பாக விளையாடி 77 பந்தில் 89 ரன்கள் குவித்தார். உஸ்மான் கவாஜா 56 ரன்களும், மேக்ஸ்வெல் 52 ரன்களும் சேர்த்தனர்.

  காயம் குணமாகி அணிக்கு திரும்பிய மிட்செல் ஸ்டார்க் ஐந்து ஓவரில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  50 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு தயாராக ஐபிஎல் மிகவும் உதவிகரமாக இருந்தது என ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். #IPL201 #ஸ்மித்
  ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய இவருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடைவிதித்தது.

  இந்த தடையால் ஸ்மித்தால் சரியாக விளையாட முடியவில்லை. வெளிநாடுகளில் நடைபெற்ற பல்வேறு டி20 லீக்கில் விளையாடினார். ஆனால் காயத்தால் தொடர்ச்சியாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

  வங்காளதேச பிரிமீயர் லீக்கில் விளையாடும்போது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின் நேரடியாக ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் சிறந்த உடற்தகுதியுடன் விளையாடியதால் ஆஸ்திரேலியாவின் உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்தார்.  இந்நிலையில் ‘‘ஐபிஎல் தொடர் 50 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு தயாராக உதவிகரமாக இருந்தது’’ என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘என்னுடைய தனிப்பட்ட முறையில் ஐபிஎல், சிறந்த வீரர்களுக்கு எதிராக மைதானத்தில் அதிக நேரம் செலவழிக்க வாய்ப்பு கொடுத்தது. டி20 கிரிக்கெட் எப்போதுமே 50 ஓவருக்கு தயாராக உதவும் என்று நினைப்பவன் நான். டி20-யின் நீட்டிக்கப்பட்ட ஆட்டம்தான் 50 ஓவர் கிரிக்கெட்’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய சுமித், வார்னரின் தண்டனை காலம் முடிவடைந்ததை யொட்டி அவர்கள் மீண்டும் தங்களது ஐபிஎல் அணிகளோடு இணைந்து கொண்டனர். #IPL2019 #Smith #Warner
  புதுடெல்லி:

  பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு 1 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

  இந்த தடை இந்த மாதம் முடிகிறது. இருவரும் சமீபத்தில் ஆஸ்திரேலிய வீரர்களோடு துபாயில் பயிற்சியில் இணைந்தனர்.

  இந்த நிலையில் இருவரும் ஐ.பி.எல். போட்டியில் ஆடுகிறார்கள். இதற்காக இருவரும் தங்களது அணிகளோடு இணைந்து கொண்டனர். சுமித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் வார்னர் சன்ரைசஸ் ஐதராபாத் அணியிலும் ஆடுவார்கள். #IPL2019 #Smith #Warner
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஹசிம் அம்லா 32 ரன்கள் எடுத்ததன் மூலம் டெஸ்டில் அதிக ரன் எடுத்த 2-வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை பெற்றார். #hashimAmla #Smith
  இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா 2-வது இன்னிங்சில் 32 ரன் எடுத்தார்.

  4-வது ரன்னை எடுத்த போது அவர் டெஸ்டில் அதிக ரன் எடுத்த 2-வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை பெற்றார். சுமித்தை அவர் முந்தினார். அம்லா 124-வது டெஸ்டில் 9282 ரன் எடுத்துள்ளார். சுமித் 9253 (116 டெஸ்ட்) 3-வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டார். காலிஸ் 13,206 ரன்னுடன் (166 டெஸ்ட்) முதலிடத்தில் உள்ளார். #hashimAmla #Smith
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி20 லீக் தொடரில் சிறப்பாக விளையாடினால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு இடம் கிடைக்கும் என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
  பால் டேம்பரிங் விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடைவிதித்துள்ளது. இந்த தடைக்காலம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அமலில் இருந்து வருகிறது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் அவர்கள் மீதான தடைக்காலம் முடிவிற்கு வரும்.

  இரண்டு பேரும் அணிக்கு திரும்புவதை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மற்றும் வீரர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சர்வதேச போட்டியில் விளையாடாமல் இருக்கும் இருவரும் டி20 லீக் தொடரில் விளையாடி வருகிறார்கள்.

  விரைவில் தொடங்க இருக்கும் வங்காள தேசம் பிரிமீயர் லீக்கில் இருவரும் களம் இறங்க இருக்கின்றனர். அதன்பின் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் விளையாடுகிறார்கள். இதில் சிறப்பாக விளையாடினால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் அவர்களுக்கு நிச்சயமாக இடம்கிடைக்கும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

  இதுகுறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் சிஇஓ கெவின் ராபர்ட்ஸ் கூறுகையில் ‘‘வங்காள தேச பிரிமீயர் லீக் மற்றும் ஐபிஎல் தொடரில் இருவருடைய ஆட்டம் எப்படி இருக்கிறது என்பது உண்மையிலேயே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இரு தொடர்களையும் கண்காணிப்பது முக்கியமானது.  தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துதல், நியாயம் மற்றும் நீதி ஆகியவற்றின் அடிப்படையில் எங்களுடைய தேர்வு இருக்கும். எந்தவித பிரச்சனையும் இல்லாமல் அவர்கள் அணிக்கு திரும்ப வேண்டும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.

  இருவருடைய பார்ம் குறித்து நாங்கள் கேட்டறிந்த வகையில் எந்த கவலையும் இல்லை. அவர்கள் தொடர்ந்து வலைப்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் அவர்களுடன் போதுமான அளவிற்கு தொடர்பு கொண்டு அவர்களை மதிப்பிடுவோம்’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மெல்போர்ன் டெஸ்ட் போட்டி தொடங்கும் நேரத்தில் பால் டேம்பரிங் குறித்த ஸ்மித், பான்கிராப்ட் பேட்டி ஒளிபரப்பு செய்யப்பட்டதால் ரிக்கி பாண்டிங் அதிர்ச்சியடைந்துள்ளார்.
  பாம் டேம்பரிங் விவகாரத்தில் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டும், பான்கிராப்ட்டிற்கு 9 மாதமும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் தடை விதித்தது.

  மூன்று பேரின் தடைக்காலம் 9 மாதங்கள் நிறைவந்து விட்டன. ரசிகர்கள் பால் டேம்பரிங் சம்பவத்தை ஓரளவிற்கு மறந்து விட்டனர். ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான தொடருக்கு ரசிகர்கள் அதிக அளவில் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

  இந்நிலையில் ஸ்மித் மற்றும் பான்கிராப்ட் ஆகியோரின் பேட்டி பாக்ஸ் கிரிக்கெட் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நேரம் ரிக்கி பாண்டிங்கை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

  இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘ஒரு முழுமையான பத்திரிகையின் அணுகுமுறையில் இருந்து, ஸ்மித் மற்றும் பான்கிராப்ட் ஆகியோரின் பேட்டி ஒளிபரப்பப்பட்டதற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியும். இன்று ஏராளமான மக்கள் கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாளை அவர்கள் இதுகுறித்த செய்தியை படிப்பார்கள். என்ன நடக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும்.

  இது வீரர்கள் அல்லது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு எப்படி மகிழ்ச்சியாக இருக்கும் என்பது குறித்து எனக்கு உறுதியாக தெரியாது. இன்றைய பாக்சிங் டே டெஸ்ட் ஆஸ்திரேலியாவிற்கு மிகவும் சிறப்பான தருணம். ஆகவே, இந்த பேட்டி எப்படி எதிரொலிக்கப்போகிறது என்று பார்ப்போம்.

  பேட்டியின் சில தலைப்புகளை பார்த்தேன். அது எனக்கு அதிர்ச்சியளித்தது. சில விஷயங்கள் எனக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. கேப் டவுனில் என்ன நடந்து என்பதை கடந்த 9 மாதங்களாக நாம் பெரிய அளவில் விவாதித்து விட்டோம். தற்போது இந்த செய்தி வெளிவந்துள்ளது. நாளைய செய்தி பேப்பரில் எப்படி எழுதப்போகிறார்கள் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேப் டவுன் டெஸ்டில் பந்தை சேதப்படுத்தும்படி துணைக்கேப்டனாக இருந்த வார்னர் என்னைத் தூண்டினார் என கேமரூன் பான்கிராப்ட் தெரிவித்துள்ளார். #BallTampering
  தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது. பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்துவதற்கு துணைக் கேப்டன் வார்னர்தான் மூளைக்காரணமாக இருந்தார் என்றும், இந்த விஷயம் ஸ்மித்திற்கு தெரிந்திருந்தது எனவும் விசாரணையில தெரிய வந்தது.

  இதனால் பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு தலா ஓராண்டு தடையும் விதித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்.

  இந்த விவகாரத்திற்குப் பிறகு முதன்முறையாக கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்மித் பேட்டியளித்தார். அப்போது ‘‘நான் பால் டேம்பரிங் விவகாரத்தை தடுத்திருக்கலாம். கேப்டன் பொறுப்பில் தோல்வியடைந்து விட்டேன்’’ என்று கூறினார்.  இந்நிலையில் துணைக்கேப்டனாக இருந்த வார்னர்தான் பந்தை சேதப்படுத்தும்படி என்னைத் துண்டினார் என்று பான் கிராப்ட் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து பான் கிராப்ட் கூறுகையில் ‘‘நாங்கள் பீல்டிங் செய்து கொண்டிருக்கும்போது வார்னர் என்னிடம் வந்து பந்தை சேதப்படுத்தும்படி கூறினார். அது நல்லதா? என்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், நான் இளம் வீரர் என்பதால் அணியில் தன்னுடைய மதிப்பு என்ன என்பதை யோசிக்க வேண்டியிருந்தது.

  சீனியர் வீரர்களிடம் இருந்து மரியாதை பெற வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. மேலும் தவறுக்காக மிகப்பெரிய விலைக்கொடுக்க போகிறோம் என்பதையும் உணர்ந்திருந்தேன்’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பால் டேம்பரிங் விவகாரத்தில் முதன்முறையாக பேட்டியளித்த ஸ்மித், வாய்ப்பிருந்தும் தடுக்கவில்லை, கேப்டன் பொறுப்பில் தோற்றுவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். #Smith
  கேப் டவுனில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் பான்கிராப்ட் பந்தை ஒருவகை உப்புத்தாள் மூலம் சேதப்படுத்தியது தெரியவந்தது. இதற்கு மூளைக்காரணமாக டேவிட் வார்னர் இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், இந்த விவகாரம் கேப்டன் ஸ்மித்திற்கு தெரியும். அவர் தடுக்க தவறிவிட்டார் என்றும் தெரியவந்தது.

  இதனால் பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோருக்கு தலா ஓராண்டு தடையும் விதித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம். தென்ஆப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா சென்றடைந்த ஸ்மித், சிட்னி மைதானத்தில் கண்ணீர் மல்க சோகத்துடன் வெளியேறினார்.

  இதனால் வார்னர் மற்றும் ஸ்மித் உள்ளூரில் நடைபெறும் முதன்மையான தொடர்களிலும், சர்வதேச போட்டியிலும் விளையாட முடியாமல் உள்ளனர்.

  இந்நிலையில் முதன்முறையாக இன்று ஸ்மித் பத்திரிகையாளர்கள்கு பேட்டியளித்தார். அப்போது பால் டேம்பரிங் சம்பவத்தை நான் தடுத்திருக்கலாம். அதற்கான வாய்ப்பு இருந்தது என்று தெரிவித்துள்ளார்.  பால் டேம்பரிங் குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் ‘‘வீரர்கள் அறையில் நான் சிலரை கடந்து செல்லும்போது, பால் டேம்பரிங் திட்டத்தை தடுக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால், நான் அதை செய்யவில்லை. என்னுடைய கேப்டன் பொறுப்பு தோல்வியடைந்து விட்டது. இது சில விஷயங்கள் நடப்பதற்கு சாத்தியக்கூறாக அமைந்துவிட்டது. இந்த திட்டம் வெளியில் சென்று மைதானத்தில் நடந்துவிட்டது.

  அதைப்பற்றி எதுவும் தெரிந்து கொள்ள விருப்பம் இல்லை என்று சொல்வதைவிட, திட்டத்தை நிறுத்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்றே சொல்ல வேண்டும். கேப்டனாக எனது பொறுப்பில் நான் தோற்றுவிட்டேன். அதற்காக நான் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்’’ என்றேன்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வங்காள தேசம் பிரிமீயர் லீக்கில் விளையாட ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பிசிபி தடைவிதித்துள்ளது. #BPL #BCB
  வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் வங்காளதேசம் பிரிமீயர் லீக் டி20 தொடரை நடத்தி வருகிறது. அடுத்த சீசன் ஜனவரி மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகளில் ஒன்றான கொமிலா விக்டோரியன்ஸ் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கை ஏலத்தில் எடுத்திருந்தது.

  சோயிப் மாலிக் தொடரின் மத்தியில் சர்வதேச அணிக்கு திரும்ப இருக்கிறார். இதனால் கொமிலா விக்டோரியன்ஸ் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித்தை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்தது. இதற்கு மற்ற அணிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

  இந்நிலையில் வங்காள தேசம் பிரிமீயர் லீக்கில் ஸ்மித் விளையாடுவதற்கு வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு தடைவிதித்துள்ளது.  இதுகுறித்து பிசிபி தலைவர் நிஜாமுதீன் சவுத்ரி கூறுகையில் ‘‘வங்காள தேசம் பிரிமீயர் லீக்கின் விதிப்படி, ஒரு அணி மாற்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டுமென்றால், அவருடைய பெயர் வீரர்களின் ஏலத்திற்கான தொடக்க வரைவு பட்டியலில் இடம்பெற வேண்டும். ஆனால், ஸ்மித் பெயர் தொடக்க வரைவில் இல்லை.

  ஸ்மித் விளையாடுவதற்கு சில அணிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆகவே, நாங்கள் வங்காளதேசம் பிரிமீயர் லீக்கில் விளையாட அவருக்கு தடைவிதித்துள்ளோம்’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடருக்கான ஏலத்தில் லாகூர் குவாலண்டர்ஸ் அணி ஏபி டி வில்லியர்ஸை வாங்கியுள்ளது. #PSLDraft2018 #PSL
  பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 2019 சீசன் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கிறது. இதற்கான ஏலம் இன்று நடைபெற்றது. தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆன டி வில்லியர்ஸ் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவதாக தெரிவித்திருந்தார். அதேபோல் ஆஸ்திரேலியாவின் ஸ்மித்தும் தெரிவித்திருந்தார்.

  இன்றைய ஏலத்தில் இருவரும் பிளாட்டினம் பிரிவில் இடம்பிடித்திருந்தனர். டி வில்லியர்ஸை லாகூர் குவாலண்டர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. அவருக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரத்தில் இருந்து இரண்டு லட்சம் அமெரிக்க டாலர் வரை சம்பளம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6-வது அணி ஸ்மித்தை ஏலத்தில் எடுத்துள்ளது. ஷாகித் அப்ரிடியையும் 6-வது அணி ஏலம் எடுத்துள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin