என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tilak Verma"

    • சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பையை இந்தியா வென்றது.
    • பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோசின் நக்வியிடமிருந்து ஆசிய கோப்பையைப் பெற இந்தியா மறுத்தது.

    சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. அப்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மோசின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்தியா மறுத்தது.

    இதையடுத்து, அந்தக் கோப்பையை மோசின் நக்வி கொண்டு சென்றார். இந்திய அணியினர் கோப்பை இல்லாமலேயே வெற்றியைக் கொண்டாடினர். இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தக் கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பிசிசிஐயும் வலியுறுத்தியது.

    அதற்குப் பதிலளித்த நக்வி, கோப்பையை தாம்தான் வழங்குவேன் எனவும் வரும் நவம்பர் 10-ம் தேதி துபாயில் இந்திய அணிக்கு ஆசியக் கோப்பையை வழங்கும் நிகழ்ச்சியை வைத்திருப்பதாகவும், இதில் தவறாமல் இந்திய அணி வீரர்களும் கேப்டன் சூர்யகுமார் யாதவும் கலந்துகொள்ள வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில், ஆசியக் கோப்பை தொடர்பாக அன்றைய இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட திலக் வர்மா, தற்போது அதுகுறித்த புதிய விவரங்களை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நாங்கள் உண்மையில் ஒரு மணிநேரம் மைதானத்தில் காத்திருந்தோம். டிவி காட்சிகளைப் பார்த்தால், நான் தரையில் படுத்திருப்பதை நீங்கள் காண்பீர்கள். மீதமுள்ளவர்களும் தரையில் படுத்திருந்தனர். அர்ஷ்தீப் சிங் ரீல்ஸ் செய்வதில் மும்முரமாக இருந்தார். நாங்கள் காத்திருந்தோம், 'கோப்பை எப்போது வேண்டுமானாலும் வரும்' என்று நினைத்துக் கொண்டிருந்தோம்.

    ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. நாங்கள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் கோப்பை வரவில்லை. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, கோப்பையைப் பெறப் போவதில்லை என்பதை அறிந்ததும், அர்ஷ்தீப் சிங்தான் ஒரு ஐடியா கொடுத்தார்.

    கோப்பையை தவிர்த்து கொண்டாட வேண்டும் என்று அவர் கூறினார். அபிஷேக் சர்மா உள்ளிட்ட நாங்கள், மேலும் 5-6 பேருடன் சேர்ந்து, அதற்கு ஒப்புதல் அளித்தோம். பின்னர் அதையே செய்து காட்டினோம்.

    என திலக் வர்மா கூறினார்.

    • பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா ஆசிய கோப்பையை வென்றது.
    • இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட திலக் வர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    ஆசிய கோப்பை தொடர் சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்தது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

    இந்த போட்டியில் இந்திய தடுமாறிய நிலையில் ஒற்றை ஆளாக அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    இந்நிலையில் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்ற திலக் வர்மாவை நடிகர் சிரஞ்சீவி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

    'மன சங்கர வர பிரசாத் காரு' என்ற படப்பிடிப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடிகை நயன்தாரா, இயக்குநர் அநில் ரவிபுடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • திலக் வர்மாவுக்கு ஒரு பேட்டை முதலமைச்சர் பரிசாக வழங்கினார்.
    • வெகுமதியாக ரூ.10 லட்சமும் திலக் வர்மாவுக்கு வழங்கப்பட்டது.

    ஆசிய கோப்பை தொடர் சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்தது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

    இந்த போட்டியில் இந்திய தடுமாறிய நிலையில் ஒற்றை ஆளாக அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    இந்நிலையில் ஆசிய கோப்பையில் கலக்கிய ஐதராபாத்தை சேர்ந்த திலக் வர்மாவுக்கு அம்மாநில முதலமைச்சர் ரெவந்த் ரெட்டி நேரில் அழைத்து பாராட்டினார். அதனை தொடர்ந்து அவருக்கு ஒரு பேட்டை பரிசாகவும் வழங்கினார். வெகுமதியாக ரூ.10 லட்சமும் வழங்கினார்.

    • அபிஷேக் சர்மா 31 பந்தில் 61 ரன்கள் விளாசினார்
    • சுப்மன் கில் 4 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, இலங்கையை எதிர்கொண்டு வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

    சுப்மன் கில் 4 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். மறுமுனையில் அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 22 பந்தில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 31 பந்தில் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 8 பவுண்டரி, 2 சிக்சர் அடங்கும்.

    அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 12 ரன்னில் வெளியேறினார். ஆனால் திலக் வர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சஞ்சு சாம்சன் 23 பந்தில் 1 பவுண்டரி, 3 சிக்சருடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    திலக் வர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்துள்ளது.

    • மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
    • 23 பந்துகளில் 25 ரன்கள் அடித்திருந்த திலக் வர்மா ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறினார்.

    ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் இன்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

    இப்போட்டியில் 19 ஆவது ஓவரில் மும்பை வீரர் திலக் வர்மா ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறினார்.

    19வது ஓவரில் 7 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்டபோது, 23 பந்துகளில் 25ரன்கள் அடித்திருந்த திலக் வர்மா ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறினார்.

    இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணிக்காக ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறிய முதல் வீரரானார் திலக் வர்மா.

    இதற்கு முன்னதாக ராஜஸ்தான் அணியில் அஸ்வினும் பஞ்சாப் அணியில் அதர்வா டைடேவும் குஜராத் அணியில் சாய் சுதர்சனும் ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறியுள்ளனர்.

    • இந்த அரைசதத்தை ரோகித் சர்மாவின் மகளான சமைராவுக்கு நான் அர்ப்பணிக்கிறேன்.
    • அதற்காகத்தான் வித்தியாசமான முறையில் எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன்.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று கயானாவில் நடந்தது. இதில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. எனினும், ஒருபுறம் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா சர்வதேச டி20 போட்டியில் தனது முதல் அரைசதத்தை பதவு செய்தார். அவர் 41 பந்துகளில் ஒரு சிக்சர் 5 பவுண்டரிகள் உள்பட 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்தப் போட்டியில் இந்தியா 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அரைசதம் மற்றும் சதம் அடித்தால் வீரர்கள் அவர்களுக்கு என்று ஒரு பாணியை வைத்துள்ளனர். ஜடேஜா என்றால் பேட்டை சுழற்றி காட்டுவார். கேஎல் ராகுல் காதை மூடிக்கொள்வார். இப்படி இருக்க திலக் வர்மாவும் தனக்கென ஒரு பாணியை கொண்டுள்ளார்.


    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது போட்டியில் அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் திலக் வர்மா இரு கட்டை விரல்களையும் மாற்றி மாற்றி காண்பித்து குழந்தையை போல் கொண்டாடினார்.

    இது குறித்து திலக் வர்மா கூறியிருப்பதாவது:-

    இந்த அரைசதத்தை ரோகித் சர்மாவின் மகளான சமைராவுக்கு நான் அர்ப்பணிக்கிறேன். அதற்காகத்தான் வித்தியாசமான முறையில் எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன்.

    நாங்கள் இருவரும் ஒன்றாக விளையாடி இருக்கிறோம். ஆதலால், நான் எனது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் எப்போது அரைசதம் அடிக்கிறேனோ அதனை சமைராவுக்கு அர்ப்பணிப்பதாக சொல்லியிருந்தேன். அதன்படியே செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல் டி20 போட்டி மத்தியபிரேச மாநிலம் குவாலியரில் நாளை நடக்கிறது.
    • முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் ஓபனிங் பேட்டர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் ஷர்மாவும் களமிறங்குவார்கள்.

    வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் 280 ரன் வித்தியாசத்திலும், கான்பூரில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

    இந்தியா-வங்காளதேசம் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் மத்தியபிரேச மாநிலம் குவாலியரில் நாளை ( 6-ந் தேதி) நடக்கிறது.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் அபிஷேக் சர்மா, ரியான் பராக், ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா, ரிங்குசிங், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா, ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, மயங்க் யாதவ் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக ஷிவம் துபே விலகியுள்ளார். அவருக்கு பதிலாக திலக் வர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    நாளை நடைபெறும் முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் ஓபனிங் பேட்டர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் ஷர்மாவும் களமிறங்குவார்கள் என கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

    • முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 219 ரன்களை குவித்தது.
    • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 208 ரன்களை மட்டுமே எடுத்தது.

    செஞ்சூரியன்:

    தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3வது டி20 போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 219 ரன்களை குவித்தது. திலக் வர்மா அதிரடியாக ஆடி சதமடித்து 107 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அரை சதமடித்து ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து 220 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 208 ரன்களை எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்த ஆண்டில் இந்திய அணி 8-வது முறையாக டி20 கிரிக்கெட்டில் 200 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளது.

    சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு அணியும் ஒரு ஆண்டில் எட்டு முறை 200 ரன்கள் அடித்ததில்லை. இந்திய அணி முதல் முறையாக இந்த சாதனையை படைத்துள்ளது.

    • திலக் வர்மா என்னிடம் வந்து நான் 3-வரிசையில் பேட்டிங் செய்யவா? என்று கேட்டார்.
    • அவருடைய குடும்பத்தினருக்காகவும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    செஞ்சுரியன்:

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. செஞ்சுரியனில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன் குவித்தது.

    திலக் வர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 56 பந்தில் 107 ரன்னும் (8 பவுண்டரி, 7 சிக்சர்), அபிஷேக் சர்மா 25 பந்தில் 50 ரன்னும் ( 3 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். கேசவ் மகாராஜ், ஷிமிலேன் தலா 2 விக்கெட்டும், மார்கோ ஜான்சென் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மார்கோ ஜான்சன் 17 பந்தில் 54 ரன்னும் (4 பவுண்டரி, 5 சிக்சர்) கிளாசன் 22 பந்தில் 41 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வருண் சக்கவர்த்தி 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா , அக்ஷர் படேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

    இந்த போட்டியின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. பயம் இல்லாமல் ஆடுங்கள் என்பதை தான் நாங்கள் அணியின் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்துகிறோம். நாங்கள் எந்த மாதிரியான கிரிக்கெட்டை விளையாட நினைத்தோமோ அதை செயல்படுத்தினோம். பயிற்சியின் போது அதிரடியாக ஆடுவதற்கு முயற்சி செய்கிறோம்.

    வீரர்கள் சில போட்டிகளில் எளிதில் ஆட்டம் இழந்தாலும் அதிரடியாக ஆட வேண்டிய உத்வேகத்தில் இருக்கிறார்கள். ஆக்ரோஷமும், உத்வேகமும் இருந்தால் மட்டுமே 20 ஓவரில் கிரிக்கெட்டில் வெற்றி பெற முடியும்.

    முதல் 20 ஓவர் போட்டி முடிந்த பிறகு திலக் வர்மா என்னிடம் வந்து நான் 3-வரிசையில் பேட்டிங் செய்யவா? என்று கேட்டார். இதனால் இந்த ஆட்டத்தில் 3-வரிசையில் அனுப்பி வைத்தேன். அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். இது மகிழ்ச்சி அளிக்கிறது. வாய்ப்பு வேண்டும் என்று கேட்டு அதை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். அவருடைய குடும்பத்தினருக்காகவும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.

    இந்த வெற்றி மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஜோகன்ஸ்பர்கில் நாளை நடக்கிறது.

    ×