என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இஷான் கிஷன், அர்ஷ்தீப் சிங் அசத்தல்: 5வது டி20 போட்டியிலும் இந்தியா அபார வெற்றி
    X

    இஷான் கிஷன், அர்ஷ்தீப் சிங் அசத்தல்: 5வது டி20 போட்டியிலும் இந்தியா அபார வெற்றி

    • முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய நியூசிலாந்து 225 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

    திருவனந்தபுரம்:

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 6 ரன்னில் வெளியேறினார். அபிஷேக் சர்மா 30 ரன்னில் அவுட்டானார்.

    3வது விக்கெட்டுக்கு இஷான் கிஷனுடன் சூர்யகுமார் இணைந்தார். இந்த ஜோடி பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.

    சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 63 ரன் குவித்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 43 பந்தில் 103 ரன் குவித்து அவுட்டானார்.

    இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தது. பாண்ட்யா 17 பந்தில் 42 ரன்கள் சேர்த்தார்.

    இதையடுத்து, 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் அதிரடியில் மிரட்டினார். அவர் 38 பந்தில் 80 ரன் குவித்து ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா 30 ரன்னும், டேரில் மிட்செல் 26 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவரில் 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, டி20 தொடரை 4-1 என கைப்பற்றி அசத்தியது.

    இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், அக்சர் பட்டேல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    Next Story
    ×