என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நான் வியந்து பார்க்கும் ஒருவர்- கோலிக்கு புகழாரம் சூட்டிய நியூசிலாந்து வீரர்
    X

    நான் வியந்து பார்க்கும் ஒருவர்- கோலிக்கு புகழாரம் சூட்டிய நியூசிலாந்து வீரர்

    • இந்தியா - நியூசிலாந்து அணிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது.
    • இதில் ஒருநாள் தொடரை நியூசிலாந்தும் டி20 தொடரை இந்தியாவும் கைப்பற்றியது.

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை நியூசிலாந்தும் டி20 தொடரை இந்தியாவும் கைப்பற்றியது.

    முன்னதாக ஒருநாள் தொடரின் போது நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல்லுக்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது கையொப்பமிட்ட இந்திய ஜெர்சியை அவருக்கு வழங்கினார்.

    இந்நிலையில் நான் வியந்து பார்க்கும் ஒருவராக விராட் கோலி இருப்பார் என நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலியின் கையொப்பமிட்ட ஜெர்சி நிச்சயமாக எனது அலுவலகத்தில் சட்டமிட்டு வைக்கப்படும். கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக அவர் ஒவ்வொரு நாளும் விளையாடும் விதத்திற்காக விராட் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. கடந்த பல ஆண்டுகளாக நான் வியந்து பார்க்கும் ஒருவராக அவர் நிச்சயமாக இருக்கிறார் என அவர் கூறினார்.

    Next Story
    ×