என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சொந்த மைல்கல் சாதனைகளை விட, அணியின் வெற்றியே முக்கியம் - இஷான் கிஷன்
- இஷான் கிஷன் 43 பந்தில் 103 ரன்கள் குவித்தார்.
- அதிரடியாக ஆடி சதமடித்து இஷான் கிஷனுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 43 பந்தில் 103 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 63 ரன்னும் குவித்து ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்ட்யா 17 பந்தில் 42 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து, 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 46 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது. இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், அக்சர் பட்டேல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், அதிரடியாக ஆடி சதமடித்து இஷான் கிஷனுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. இதன்பின்பு பேசிய இஷான் கிஷன், "சொந்த மைல்கல் சாதனைகளை விட, அணியின் வெற்றியே முக்கியம்; நீங்கள் ஒரு சாதனையை நெருங்கியிருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல. விளையாடும்போது சிக்சருக்கு அடிக்கக்கூடிய பந்தாக இருந்தால் அடித்துவிட வேண்டும், அப்போது சொந்த சாதனைக்காக சிங்கிள் எடுத்துவிட்டு, பின்னர் வருத்தப்படக்கூடாது" என்று தெரிவித்தார்.






