என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோனி"

    • இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகிற 30-ந் தேதி ராஞ்சியில் நடக்கிறது.
    • இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் ராஞ்சிக்கு வந்தடைந்தனர்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் சமீபத்தில் முடிந்தது. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றி சாதனை படைத்தது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகிற 30-ந் தேதி ராஞ்சியில் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பெற்ற விராட் கோலி, ரிஷப் பண்ட், ருதுராஜ் ஆகியோருக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே வீரருமான எம் எஸ் தோனி தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார்.

    அதற்காக 3 பேரும் நேற்று இரவு தோனி வீட்டுக்கு சென்றனர். விருந்துக்கு பின்னர் தோனியே தனது காரை ஓட்டிச் சென்று விராட் கோலியை ஹோட்டலில் இறக்கிவிட்டார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • கடல் போன்ற மஞ்சள் படை தோனியின் பெயரை உச்சரிக்கும்.
    • எதிரணி வீரர்கள் மீது அவர் ஏற்படுத்தும் தாக்கம் நம்பமுடியாதது.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக் கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் இன்று மாலை வெளியிட்டது.

    அவ்வ்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது. இதன்மூலம் 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.

    இந்நிலையில், ஐபிஎல் போட்டியில் சென்னை மைதானத்தில் தோனி நுழைந்தால் மைதானமே அதிரும் என்று இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

    நேர்காணல் ஒன்றில் பேசிய ஜோ ரூட், "ஐபிஎல் போட்டியின் போது, சென்னையில் எம்.எஸ். தோனி பேட்டிங் செய்ய வரும்போது, மைதானம் குலுங்குவது போலவும், அதிர்வது போலவும் உணர்வீர்கள். அரங்கமே அதிர்வுறும். கடல் போன்ற மஞ்சள் படை அவரது பெயரை உச்சரிக்கும். எதிரணி வீரர்கள் மீது அவர் ஏற்படுத்தும் தாக்கம் நம்பமுடியாதது. என்ன ஒரு அனுபவம் அது" என்று தெரிவித்தார்.

    • தோனி மனைவி சாக்ஷி தனது 36-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
    • தோனி இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. இவர் இந்திய அணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். மேலும் சிஎஸ்கே மூலமும் பல ரசிகர்களை அவர் கவர்ந்துள்ளார்.

    அவர் இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இம்பேக்ட் பிளேயராக களம் இறங்குவார் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் எம்.எஸ். தோனி மனைவி சாக்ஷி தனது 36-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு தோனி கேக் கொடுக்கும் புகைப்படத்தை சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து நம் தலைவன் தலைவிக்கு பிறந்தநாள் விசில்கள் என தலைப்பிட்டுள்ளது. 

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது.
    • 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக் கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் இன்று மாலை வெளியிட்டது.

    அவ்வ்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது. இதன்மூலம் 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.

    இந்நிலையில், அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவதை குறிப்பிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    கூலி படத்தின் கூலி பவர் ஹவுஸ் பாடலை பயன்படுத்தி சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் தல தோனிக்கு இந்த வீடியோவை சி.எஸ்.கே. அணி எடிட் செய்துள்ளது. 

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது.
    • 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக் கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் இன்று மாலை வெளியிட்டது.

    அவ்வ்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது. இதன்மூலம் 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.

    மேலும், ஐபிஎல் 2026-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 

    • சென்னை வந்த கவுருக்கு பிரமாண்ட மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • கவுர், பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

    13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 52 ஆண்டு கால உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி கோப்பையை வென்றது இதுவே முதல்முறையாகும். இந்த வெற்றிக்கு பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், நடிகர்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.

    அந்த வகையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதனால் சென்னை வந்த அவருக்கு மேளதாளங்கள் முழங்க, பிரமாண்ட மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மாணவிகள் இந்திய வீராங்கனைகளின் ஜெர்சியை அணிந்து வந்து ஹர்மன்பிரீத் கவுரிடம் கோப்பையை பெற்றுக்கொண்டனர். அதாவது மகளிர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியினர் கோப்பையை வென்று கொண்டாடியதை போன்று அவர்கள் நடித்து காட்டினர்.

    இதனை தொடர்ந்து அவர் பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது கவுரிடம் மாணவர் ஒருவர் தோனி, விராட் கோலி இவர்களில் யார் உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் என கேள்வி எழுப்பினார். அதற்கு தோனி என கவுர் பதிலளித்தார். இதனால் அரங்கமே அதிர்ந்தது.

    அதனை தொடர்ந்து தோனி, ஸ்மிருதி மந்தனா இவர்களில் யார் என கேள்வி எழுப்ப மந்தனா என பதிலளித்தார். இதனால் அதிர்ந்த அரங்கம் அமைதியானது. அதனை தொடர்ந்து மந்தனாவா மிதாலி ராஜா என கேள்வி எழுப்ப மீண்டும் ஸ்மிருதி என பதிலளித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பாகிஸ்தான் 2 - 1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
    • தென் ஆப்பிரிக்க வீரர் டி காக் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.

    இந்த நிலையில் நேற்று 3ஆவது மற்றும் கடைசி போட்டி பைசலாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் எளிதாக வெற்றி பெற்ற பாகிஸ்தான் 2 - 1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

    தொடரை இழந்தாலும் தென் ஆப்பிரிக்க வீரர் டி காக் தொடர் நாயகன் விருதை வென்றார். இதன்மூலம் ஒருநாள் தொடரில் அதிகமுறை தொடர் நாயகன் விருதை (POTS) வென்ற விக்கெட் கீப்பர் பேட்டர் என்ற தோனியின் (7) சாதனையை டி காக் (7) சமன் செய்தார். 

    • எம் எஸ் தோனி ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.
    • தோனி குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரலாகி வருகிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம் எஸ் தோனி . அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக கபில் தேவுக்கு பிறகு 2-வது உலகக் கோப்பையை வாங்கி கொடுத்த கேப்டன் டோனி ஆவார்.

    தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பிறகு அவர் குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரலாகி வருகிறது. அவர் ரசிகருக்கு ஆட்டோகிராப் போட்டாலும் சரி, பைக் ஓட்டினாலும் சரி, விமான நிலையத்தில் இருந்து நடந்து வந்தாலும் சரி உடனே அந்த வீடியோ வைரலாகி விடும்.

    அந்த வகையில் ரசிகர் ஒருவரின் பைக்கின் எம்.எஸ். தோனி ஆட்டோகிராப் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • தோனி ஓய்வு குறித்து கடந்த 6 -7 ஆண்டுகளாக நிறைய வதந்திகள் வந்த வண்ணம் உள்ளது.
    • போன சீசனில் அதிகமாக களத்தில் இருந்து அவரால் விளையாட முடியாது என பயிற்சியாளர் பிளெமிங் கூறியிருந்தார்.

    ஐபிஎல் தொடர் 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிக பட்சமாக மும்பை, சென்னை அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.

    ஐபிஎல் தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை பேசப்பட்டு வரும் பெயராக எம்எஸ் தோனி இருக்கிறது. இந்திய அணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அவர் சிஎஸ்கே மூலமும் பல ரசிகர்களை அவர் கவர்ந்துள்ளார்.

    இந்நிலையில் அவரது ஓய்வு குறித்து கடந்த 6 -7 ஆண்டுகளாக நிறைய வதந்திகள் வந்த வண்ணம் இருந்தது. இந்த வதந்தியால் அவரது ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது தான் மிச்சம். இருந்தாலும் அவரது பேட்டிங்கில் பெரிய அளவில் தாக்கம் இல்லாததால் பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக போன ஆண்டு அதிக என்றே சொல்லலாம்.

    போன சீசனில் அதிகமாக களத்தில் இருந்து அவரால் விளையாட முடியாது என பயிற்சியாளர் பிளெமிங் கூறியிருந்ததால் அடுத்த ஆண்டு தோனி விளையாடுவாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் இடையே எழுந்து வருகிறது. ஏனென்றால் தற்போது அவருக்கு 44 வயதாகிறது.

    இந்நிலையில் அவர் அடுத்த ஆண்டு விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு புகைப்படத்தை பதிவிட்டு சூசகமாக தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

    2020-ம் ஆண்டு IPL-ன் கடைசி லீக் போட்டியின்போது "இதுதான் நீங்க மஞ்சள் ஜெர்சியில் விளையாடும் கடைசி போட்டியா?" என்ற கேள்விக்கு 'கண்டிப்பாக இல்லை' என பதிலளித்திருந்தார் சிஎஸ்கே கேப்டன் தோனி. அந்த புகைப்படத்தை வெளியிட்ட சிஎஸ்கே marks 5 years of #DefinitelyNot என பதிவிட்டிருந்தது.

    இந்த பதிவை வைத்து அடுத்த ஆண்டும் தோனி விளையாடுவார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

    • தோனி, தனிப்பட்ட முறையில் பயிற்சியை மேற்கொண்டு பைலட்டாக சான்றிதழ் பெற்றது எங்களுக்கு ஒரு மகத்தான மைல்கல்.
    • அவர் மிகுந்த கவனம் செலுத்தி மிக விரைவாக அதைக் கற்றுக்கொண்டார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிகாரப்பூர்வமாக டிரோன் பைலட் உரிமம் பெற்று அசத்தியுள்ளார். தோனி தனது சமூக வலைதள பதிவில் இதை அறிவித்துள்ளார்.

    சென்னையிலுள்ள, கருடா ஏரோஸ்பேஸ் என்ற  சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் (DGCA) அங்கீகரிக்கப்பட்ட  ரிமோட் பைலட் பயிற்சி நிறுவனத்தில் தோனி பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

    அவர் இந்த நிறுவனத்தில் முதலீட்டாளர் மற்றும் பிராண்ட் அம்பாசிடரும் ஆவார்.

    கருடா ஏரோஸ்பேஸ், உற்பத்தி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டிற்குமே DGCA சான்றிதழ்களைப் பெற்ற இந்தியாவின் முதல் டிரோன் ஸ்டார்ட்அப் ஆகும்.

    தோனி பயிற்சி மேற்கொண்டது குறித்து கருடா ஏரோஸ்பேஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அக்னிஸ்வர் ஜெயப்பிரகாஷ் கூறுகையில், "எங்கள் பிராண்ட் அம்பாசிடரும் முதலீட்டாளருமான எம்.எஸ். தோனி, தனிப்பட்ட முறையில் பயிற்சியை மேற்கொண்டு பைலட்டாக சான்றிதழ் பெற்றது எங்களுக்கு ஒரு மகத்தான மைல்கல்.

    அவர் மிகுந்த கவனம் செலுத்தி மிக விரைவாக அதைக் கற்றுக்கொண்டார். டிரோன் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் எங்கள் நோக்கத்தில் அவர் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை, எங்கள் முழு அணிக்கும் ஒரு பெரிய ஊக்கமளிக்கிறது. தோனி பாய் ஒரு உத்வேகம்" என்று தெரிவித்தார். 

    • ஜோகோவிச் 3-1 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரரை வீழ்த்தினார்.
    • அரையிறுதிக்கு முன்னேறிய வயதான வீரர் (38) என ஜோக்கோவிச் சாதனை படைத்தார்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் 7ஆம் நிலை வீரரான ஜோகோவிச், 4ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸை எதிர்கொண்டார். இப்போட்டியில் 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஜோகோவிச் அரைறுதிக்கு முன்னேறினார்.

    ஜோகோவிச் விளையாடிய இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி நேரில் கண்டுகளித்தார்.

    ஒரே சீசனில் 4 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களிலும் அரையிறுதிக்கு முன்னேறிய வயதான வீரர் (38) என ஜோக்கோவிச் சாதனை படைத்ததை கண்டு தோனி மகிழ்ச்சிடைந்தார். 

    • மணமக்களுக்கு சில ஆலோசனைகளை நகைச்சுவையுடன் கூறியது, இணையதளத்தில் வைரலாகி உள்ளது.
    • நீங்கள் உலக கோப்பையை வென்றீர்களா, இல்லையா என்பது இங்கே முக்கியமில்லை.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ். தோனி, ஆட்டக் களத்தில் அமைதியானவர் என்று பெயர் பெற்றவர். அதனால் அவரை 'கேப்டன் கூல்' என்று ரசிகர்கள் அழைக்கிறார்கள். சமீபத்தில் அவர் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது மணமக்களுக்கு சில ஆலோசனைகளை நகைச்சுவையுடன் கூறியது, இணையதளத்தில் வைரலாகி உள்ளது.

    மணமக்களுக்கு அருகில் நின்றபடி மைக்கில் பேசிய தோனி, "திருமணம் என்பது நல்ல விஷயம். நீங்கள் அவசரப்பட்டு அதை செய்து கொண்டீர்கள். சிலர் நெருப்புடன் விளையாட விரும்புகிறார்கள். அவர்களில் மணமகனும் ஒருவர். எல்லோருமே இதே மாயபடகில்தான் இருக்கிறார்கள்" என்று அவர் கூறியதும், விழா அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

    தொடர்ந்து பேசிய தோனி, 'நீங்கள் உலக கோப்பையை வென்றீர்களா, இல்லையா என்பது இங்கே முக்கியமில்லை. திருமணத்துக்குப் பிறகு அனைத்து கணவர்களும் ஒரே நிலையில்தான் இருப்பார்கள் என்பதை மனைவி புரிந்து கொள்ள வேண்டும்." என்று கூறிய அவர், பின்னர் மணமகனிடம் திரும்பி, "உங்கள் மனைவி வித்தியாசமானவர் என்று நினைத்தால் நீங்களும் தவறாக நினைக்கிறீர்கள் என்று அர்த்தம்" என்றார். அதற்கு மணமகன், "ஆமாம் என்னுடையவர் வேறுபட்டவர் அல்ல என்றார். இதைக்கேட்டு அனைவரும் சிரித்தனர்.

    இறுதியில் இருவருக்கும் சேர்த்து ஒரு ஆலோசனை கூறினார் தோனி, "சண்டை வந்தால் அமைதியாக இருங்கள். ஆண்கள் 5 நிமிடத்தில் அமைதியாகிவிடுவார்கள். அவர்களின் சக்தி அவர்களுக்குத் தெரியும்" என்றார். டோனியின் அறிவுரைகள் திருமணவிழாவை கலகலப்பாக்கியது.



    ×