search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Quinton de Kock"

    • இது ஆர்சிபி அணிக்கு 3-வது தோல்வியாகும்.
    • லக்னோ அணி தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளை அள்ளினார்.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். தொடரின் 15-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டிகாக் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆர்சிபி அணி தரப்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் சிராஜ், ரீஸ் டோப்லி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி - டுபிளிசிஸ் களமிறங்கினர். சிறப்பாக ஆடிய விராட் கோலி 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மறுமுனையில் ஆடிய டுபிளிசிஸ் 1 ரன்னுக்கு ஆசைபட்டு தனது விக்கெட்டை ரன் அவுட் முறையில் இழந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் டக் அவுட்டில் வெளியேறினார். அடுத்து வந்த க்ரீன் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். அதிரடியாக விளையாடி லோம்ரோர் ஆர்சிபி வெற்றிக்காக போராடினார். அவர் 13 பந்தில் 33 ரன்கள் எடுத்து அவுட் ஆக ஆர்சிபி தோல்வி உறுதியானது.

    இறுதியில் ஆர்சிபி அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் சேர்த்தது. இதனால் லக்னோ அணி ௨௮ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணி தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளை அள்ளினார். இது ஆர்சிபி அணிக்கு 3-வது தோல்வியாகும். இது லக்னோ அணிக்கு 2-வது வெற்றி ஆகும்.

    • லக்னோ அணியில் டிகாக் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • ஆர்சிபி அணி தரப்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் சிராஜ், ரீஸ் டாப்லீ, தயாள் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பெங்களூரு:

    17-வது ஐ.பி.எல். சீசனின் இன்றைய 15-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல்- டிகாக் களமிறங்கினர். கேஎல் ராகுல் 20 ரன்னிலும் அடுத்து வந்த படிக்கல் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து டிகாக் - ஸ்டோய்னிஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

    தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டிகாக் அரைசதம் விளாசினார். 15 பந்துகள் சந்தித்த மார்கஸ் ஸ்டோனிஸ் 24 ரன்களில் அவுட் ஆனார். அடுத்த சிறிது நேரத்தில் டிகாக் 81 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கடைசி நேரத்தில் பூரன் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். குறிப்பாக டாப்லீ ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அசத்தினார்.

    இறுதியில் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது. ஆர்சிபி அணி தரப்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் சிராஜ், ரீஸ் டாப்லீ, தயாள் ஆகியோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 

    • ஆண்ட்ரிச் நோர்ட்ஜேவுக்கு இந்த ஒப்பந்தத்தில் இடம் கிடைக்கவில்லை.
    • டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள டீன் எல்கரும் இப்பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தங்கள் அணியின் வீரர் வீராங்கனைகளுக்கான 2024-25 ஆம் ஆண்டிற்கான ஒப்பந்த பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நட்சத்திர வீரர் குயின்டன் டி காக் பெயர் இடம்பெறவில்லை. முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்த அவர் தற்போது டி20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார்.

    மேலும் காயம் காரணமாக கடந்த ஓராண்டாக விளையாடமல் இருந்துவரும் வேகப்பந்து வீச்சாள் ஆண்ட்ரிச் நோர்ட்ஜேவுக்கு இந்த ஒப்பந்தத்தில் இடம் கிடைக்கவில்லை. அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள டீன் எல்கரும் இப்பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த ஓராண்டாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக விளையாடிய சிசாண்டா மகாலா, வெய்ன் பார்னெல், கீகன் பீட்டர்சென் ஆகியோருக்கும் ஒப்பந்தத்தில் இடம் கிடைக்கவில்லை.

    மேலும் ஜெரால்ட் கோட்ஸி, நந்த்ரே பர்கர், டோனி டி ஸோர்ஸி ஆகியோர் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளார்.

    அவர்களுடன் நட்சத்திர வீரர்களான ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டெம்பா பவுமா, டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, தப்ரைஸ் ஸம்ஸி, காகிசோ ரபாடா ஆகியோரும் ஒப்பந்த பட்டியலில் தொடர்கின்றனர். தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை பொறுத்தவரையில் கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஷப்னிம் இஸ்மாயில் மட்டும் ஒப்பந்த பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

    • பவுமா 24 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • டிகாக் இந்த உலகக் கோப்பை தொடரில் 4-வது சதத்தை விளாசியுள்ளார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக டிகாக்- பவுமா ஜோடி களமிறங்கினர்.

    அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய பவுமா 24 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து டிகாக் - வான்டெர் டஸன் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் விளாசினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிகாக் சதம் அடித்து அசத்தினார்.

    இந்த உலகக் கோப்பை தொடரில் இது இவருக்கு 4-வது சதம் ஆகும். ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் டிகாக் உள்ளார். முதல் இடத்தில் ரோகித் (5 சதம்) 2-வது இடத்தில் குமார் சங்ககாரா (4) உள்ளனர்.

    மேலும் தென் ஆப்பிரிக்கா அணிக்காக தொடக்க வீரராக அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 21 சதங்களுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இரண்டு இடங்களில் ஹசிம் அம்லா (27 சதம்) டி வில்லியர்ஸ் (25 சதம்) ஆகியோர் உள்ளனர்.

    மிக முக்கிய வரலாற்று சாதனையையும் அவர் படைத்துள்ளார். ஒரு உலகக் கோப்பை தொடரில் 500 ரன்கள் எடுத்த தென் ஆப்பிரிக்க வீரர் என்ற வரலாற்று சாதனையை டி காக் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கல்லீஸ் 9 இன்னிங்சில் விளையாடி 485 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. அதனை டிகாக் முறியடித்துள்ளார்.

    • 2021 டிசம்பரில் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
    • தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான குயிண்டன் டி காக். இவர் 2021 டிசம்பரில் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

    இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக குயின்டன் டி காக் அறிவித்துள்ளார். தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    30 வயதான குயிண்டன் டி காக் தென்னாப்பிரிக்காவுக்காக டி20 போட்டிகளில் மட்டும் விளையாடுவார். 140 போட்டிகளில் இடம்பெற்றுள்ள அவர் 17 சதம் மற்றும் 29 அரை சதங்களுடன் 44.85 சராசரியுடன் 5966 ரன்களை எடுத்துள்ளார். டி காக் ஒருநாள் போட்டிகளில் 197 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். (183 கேட்சுகள், 14 ஸ்டம்பிங்).

    • 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை டோனி படைத்தார்.
    • 3-வது இடத்தில் இந்தியாவின் தினேஷ் கார்த்திக் உள்ளார்.

    சென்னை:

    ஐதராபாத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி ஒரு கேட்ச், ஒரு ஸ்டம்பிங், ஒரு ரன்-அவுட் செய்தார். இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். அவர் மொத்தம் 208 கேட்ச் பிடித்த தென் ஆப்பிரிக்காவின் டி.காக்கை (207) முந்தினார்.

    3-வது இடத்தில் இந்தியாவின் தினேஷ் கார்த்திக் (205), 4-வது இடத்தில் பாகிஸ்தான் கம்ரன் அக்மல் (172), 5-வது இடத்தில் வெஸ்ட் இன்டீசின் ராம்தின் (150) உள்ளனர்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த இந்திய ஆல்- ரவுண்டரான ஜெய்ந்த் யாதவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கி உள்ளது. #IPLAuction2019 #JayantYadav #MumbaiIndians
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இந்திய ஆல்- ரவுண்டரான ஜெய்ந்த் யாதவ் இடம் பெற்று இருந்தார். இந்த நிலையில் அவரை டெல்லி அணியில் இருந்து மும்பை அணி வாங்கி உள்ளது.

    ஏற்கனவே மும்பை அணி குயின்டன் டி காக்கை (தென் ஆப்பிரிக்கா) பெங்களூர் அணியிடம் இருந்து வாங்கி இருந்தது என்பது குறிபிடத்தக்கது.



    ஜெய்ந்த் யாதவ் இந்திய அணியில் 4 டெஸ்ட் மற்றும் ஒரே ஒரு நாள் போட்டியில் விளையாடி உள்ளார். #IPLAuction2019 #JayantYadav #MumbaiIndians
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தன் அணியில் உள்ள தென் ஆப்பிரிக்காவின் குயிண்டன் டி காக்கை மும்பை அணிக்கு விற்றுள்ளது. #IPL #QuintondeKock
    2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் மாதம் நடக்கிறது. அதற்கு முன்பாக ஒவ்வொரு அணி நிர்வாகமும் தங்கள் அணியில் உள்ள வீரர்களை மற்ற அணிக்கு விற்கலாம். அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தன் அணியில் உள்ள தென் ஆப்பிரிக்காவின் குயிண்டன் டி காக்கை மும்பை அணிக்கு விற்றுள்ளது.

    2018-ம் ஆண்டு ஏலத்தில் டி காக்கை ரூ.2.8 கோடிக்கு பெங்களூர் அணி ஏலம் எடுத்து இருந்தது. அந்த தொகைக்கே அவர் மும்பை அணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். #IPL #QuintondeKock
    ×