என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
X
ஒருநாள் போட்டி- ஓய்வு முடிவை அறிவித்த குயிண்டன் டி காக்
Byமாலை மலர்5 Sep 2023 12:09 PM GMT
- 2021 டிசம்பரில் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
- தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான குயிண்டன் டி காக். இவர் 2021 டிசம்பரில் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக குயின்டன் டி காக் அறிவித்துள்ளார். தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
30 வயதான குயிண்டன் டி காக் தென்னாப்பிரிக்காவுக்காக டி20 போட்டிகளில் மட்டும் விளையாடுவார். 140 போட்டிகளில் இடம்பெற்றுள்ள அவர் 17 சதம் மற்றும் 29 அரை சதங்களுடன் 44.85 சராசரியுடன் 5966 ரன்களை எடுத்துள்ளார். டி காக் ஒருநாள் போட்டிகளில் 197 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். (183 கேட்சுகள், 14 ஸ்டம்பிங்).
Next Story
×