என் மலர்
நீங்கள் தேடியது "PakVsSA"
- பாகிஸ்தான் 2 - 1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
- தென் ஆப்பிரிக்க வீரர் டி காக் தொடர் நாயகன் விருதை வென்றார்.
பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில் நேற்று 3ஆவது மற்றும் கடைசி போட்டி பைசலாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் எளிதாக வெற்றி பெற்ற பாகிஸ்தான் 2 - 1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
தொடரை இழந்தாலும் தென் ஆப்பிரிக்க வீரர் டி காக் தொடர் நாயகன் விருதை வென்றார். இதன்மூலம் ஒருநாள் தொடரில் அதிகமுறை தொடர் நாயகன் விருதை (POTS) வென்ற விக்கெட் கீப்பர் பேட்டர் என்ற தோனியின் (7) சாதனையை டி காக் (7) சமன் செய்தார்.
- முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 143 ரன்னில் சுருண்டது.
- 3 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மளமளவென விக்கெட்டுகளை இழந்தது.
பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில் இன்று 3ஆவது மற்றும் கடைசி போட்டி பைசலாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பிரிட்டோரியஸ், டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். பிரிட்டோரியஸ் 45 பந்தில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். டி காக் 70 பந்தில் 53 ரன்கள் சேர்த்தார். அதன்பின் தென்ஆப்பிரிக்கா விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுபோல் சரிய ஆரம்பித்தன. இதனால் 37.5 ஓவர்களே தாக்குப்பிடித்து 143 ரன்னில் சுருண்டது.
தென்ஆப்பரிக்கா முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்திருந்தது. டி காக் ஆட்டமிழக்கும்போது 3 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 7 விக்கெட்டுகளை இழந்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும் ஷாஹீன் ஷா அப்ரிடி, சல்மான் ஆகா, முகமது நவாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் 144 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர் சைம் ஆயூப் 70 ரன்கள் விளாசினார். ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் அடிக்க 25.1 ஒவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- 2008 ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக பாகிஸ்தான் ஒருநாள் போட்டியில் விளையாடியது.
- அதன்பிறகு நாளை தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட இருக்கிறது.
பாகிஸ்தானில் உள்ள பைசலாபாத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் உள்ளது. 2008 ஆம் ஆண்டு இலங்கை அணி வீரர்கள் பேருந்தில் செல்லும்போது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு முன்னதாக இக்பால் மைதானத்தில் பாகிஸ்தான்- வங்கதேசம் இடையிலான ஒருநாள் போட்டி நடைபெற்றது.
பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தான் செல்ல தயக்கம் காட்டின. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்களது போட்டிகளை பாகிஸ்தான் விளையாடியது. சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு படிப்படியாக பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன.
கராச்சி, லாகூர், ராவல்பிண்டி, முல்தானில் போட்டிகள் நடைபெற்றன. ஆனால் பைசலாபாத்தில் போட்டிகள் நடத்தப்படவில்லை. மோசமான கட்டமைப்பு வசதிகள் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. சில வருடங்களாக கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. இந்த நிலையில் பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை பைசலாபாத் இக்பால் மைதானத்தில் நடக்கிறது.
தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என சமன் பெற்றது. டி20 தொடரை பாகிஸ்தான் 2-1 எனக் கைப்பற்றியது. இந்த நிலையில்தான் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.
- சல்மான் ஆகா 93 ரன்னில் ஆல்அவுட் ஆனார்.
- ரிஸ்வான் 75 ரன்கள் சேர்த்தார்.
மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா அணி, பாகிஸ்தான் சென்றுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் லாகூரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அப்துல்லா ஷபிக், இமாம்-உல்-ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஷபிக் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷான் மசூத் களம் இறங்கினார். இவர் இமாம்-உல்-ஹக் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இமாம்-உல்-ஹக் 93 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஷான் மசூத் 76 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த பாபர் அசாம் (23), சாத் ஷகீல் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 6ஆவது விக்கெட்டுக்கு ரிஸ்வான் உடன் சல்மான் ஆகா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. இருவரும் அரைசதம் அடிக்க பாகிஸ்தான் 300 ரன்களை கடந்தது.
இருவரும் முதல்நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் பாகிஸ்தான் நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் குவித்திருந்தது. ரிஸ்வான் 62 ரன்களுடனும், சல்மன் ஆகா 52 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2ஆவது ஆட்டம் தொடங்கியது. ரிஸ்வான் 75 ரன்களில் ஆட்டமிழந்தார். சல்மான் ஆகா சதத்தை நோக்கி சென்றார். என்றாலும் 93 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கடைநிலை வீரர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 378 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.
தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் முத்துசாமி சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகள் சாய்த்தார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 80 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
- தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- கேப்டன் ஷான் மசூத் 76 ரன்கள் சேர்த்தார்.
மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா அணி, பாகிஸ்தான் சென்றுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் லாகூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அப்துல்லா ஷபிக், இமாம்-உல்-ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஷபிக் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷான் மசூத் களம் இறங்கினார். இவர் இமாம்-உல்-ஹக் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இமாம்-உல்-ஹக் 93 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஷான் மசூத் 76 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த பாபர் அசாம் (23), சாத் ஷகீல் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 6ஆவது விக்கெட்டுக்கு ரிஸ்வான் உடன் சல்மான் ஆகா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. இருவரும் அரைசதம் அடிக்க பாகிஸ்தான் 300 ரன்களை கடந்தது.
இருவரும் முதல்நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் பாகிஸ்தான் முதல்நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் குவித்துள்ளது. ரிஸ்வான் 62 ரன்களுடனும், சல்மன் ஆகா 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் சீனுரான் முத்துசாமி 2 விக்கெட் வீழத்தினார். ரபடா, சுப்புராயன், ஹார்மன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
- பாகிஸ்தானுக்கு எதிராக 3 வடிவிலான கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாட உள்ளது.
- டி காக் கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
தென் ஆப்பிரிக்கா அணி 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. முதலில் டெஸ்ட் தொடரும் அதனை தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
இந்த 3 வடிவிலான தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக விலகி உள்ளார். இதனால் டெஸ்ட் அணியின் கேப்டனாக மார்க்ரம் இடம் பெற்றுள்ளார். டி20 அணிக்கு டேவிட் மில்லர் மற்றும் ஒருநாள் அணிக்கு மேத்யூ ப்ரீட்ஸ்கே கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அதிரடி தொடக்க ஆட்டகாரரான குயிண்டன் டி காக் டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளார். டிகாக் கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் தனது ஓய்வு முடிவை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடருக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணி நமீபியா அணியுடன் ஒரு டி20 போட்டியில் விளையாட உள்ளது. அந்த போட்டி வருகிற 11-ந் தேதி நடக்கிறது. இந்த போட்டிக்கான தென் ஆப்பிரிக்கா அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார்.
- தென் ஆப்பிரிக்கா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஷம்சி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 26-வது லீக் போட்டி இன்று நடைபெற்றது. பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்தது.
பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அப்துல்லா ஷஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் முறையே 9 மற்றும் 12 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 50 ரன்கள் எடுத்தபோது இவரும் அவுட் ஆனார்.
இவரைத் தொடர்ந்து வந்த முகமது ரிஸ்வான், இஃப்திகார் அகமது, சௌத் ஷகீல் முறையே 31, 21 மற்றும் 52 ரன்களை குவித்தனர். ஷதாப் கான் 43 ரன்களையும், முகமது நவாஸ் 24 ரன்களை எடுத்தார். ஷாகீன் அஃப்ரிடி 2 ரன்களிலும், முகமது வாசிம் 7 ரன்களையும் எடுத்தனர். போட்டி முடிவில் பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்கள் முடிவில் 270 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஷம்சி 4 விக்கெட்டுகளையும், மார்கோ யென்சென் 3 விக்கெட்டுகளையும், ஜெரால்ட் கோட்ஸி 2 விக்கெட்டுகளையும், லுங்கி நிகிடி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
- தொடர்ச்சியாக ஐந்து தொடர்களை வென்றுள்ளது.
- தென்ஆப்பிரிக்கா மண்ணில் 2000-த்திற்குப் பிறகு மூன்று தொடர்களை வென்றுள்ளது.
பாகிஸ்தான் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 81 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 என வென்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற இருக்கிறது.
இந்த தொடரை கைப்பற்றியதன் மூலம் பாகிஸ்தான் 21-ம் நூற்றாண்டில் தென்ஆப்பிரிக்காவில் 3 தொடர்களை வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
இந்த சீசனில் பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணி கைப்பற்றிய 3-வது தொடர் இதுவாகும். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக ஒருநாள் தொடரை வென்றுள்ளது. அத்துடன் தொடர்ச்சியாக 5 தொடர்களை வென்று அசத்தியுள்ளது.
இது ஒரு அணி விளையாட்டு. தொடக்கத்தில் இருந்து இறுதி வரை அனைத்து வீரர்களும், ஈடுபாடுடன் பங்களிக்கின்றனர் என பாகிஸ்தான் அணி கேப்டன் ரிஸ்வான் தெரிவித்துள்ளா். பாபர் அசாம் 73 ரன்களும், ரிஸ்வான் 80 ரன்களும் விளாசி அணி 329 ரன்கள் குவிக்க உதவி புரிந்தனர்.
330 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா அணியால் 248 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.






