என் மலர்
நீங்கள் தேடியது "Anrich Nortje"
- ஆண்ட்ரிச் நோர்ட்ஜேவுக்கு இந்த ஒப்பந்தத்தில் இடம் கிடைக்கவில்லை.
- டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள டீன் எல்கரும் இப்பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தங்கள் அணியின் வீரர் வீராங்கனைகளுக்கான 2024-25 ஆம் ஆண்டிற்கான ஒப்பந்த பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நட்சத்திர வீரர் குயின்டன் டி காக் பெயர் இடம்பெறவில்லை. முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்த அவர் தற்போது டி20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார்.
மேலும் காயம் காரணமாக கடந்த ஓராண்டாக விளையாடமல் இருந்துவரும் வேகப்பந்து வீச்சாள் ஆண்ட்ரிச் நோர்ட்ஜேவுக்கு இந்த ஒப்பந்தத்தில் இடம் கிடைக்கவில்லை. அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள டீன் எல்கரும் இப்பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த ஓராண்டாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக விளையாடிய சிசாண்டா மகாலா, வெய்ன் பார்னெல், கீகன் பீட்டர்சென் ஆகியோருக்கும் ஒப்பந்தத்தில் இடம் கிடைக்கவில்லை.
மேலும் ஜெரால்ட் கோட்ஸி, நந்த்ரே பர்கர், டோனி டி ஸோர்ஸி ஆகியோர் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளார்.
அவர்களுடன் நட்சத்திர வீரர்களான ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டெம்பா பவுமா, டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, தப்ரைஸ் ஸம்ஸி, காகிசோ ரபாடா ஆகியோரும் ஒப்பந்த பட்டியலில் தொடர்கின்றனர். தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை பொறுத்தவரையில் கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஷப்னிம் இஸ்மாயில் மட்டும் ஒப்பந்த பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
- அதிக பட்சமாக குசல் மெண்டீஸ் 19 ரன்கள் எடுத்தார்.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் அன்ரிச் நோர்ட்ஜே 4 விக்கெட்டும் ரபாடா, மகாராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
நியூயார்க்:
9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் நியூயார்க்கில் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிசங்கா - குசல் மெண்டீஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் 3 ஓவரில் வெறும் 13 ரன்களே எடுத்தது.
தொடர்ந்து தடுமாறி வந்த இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த வகையில் நிசங்கா 8 பந்தில் 3 ரன்களிலும், கமிண்டு மெண்டீஸ் 15 பந்தில் 11 ரன்களிலும், ஹசரங்கா 0, சதீரா 0, அசலங்கா 6, குசல் மெண்டீஸ் 19 (30) தசுன் சனங்கா 9, பதிரனா 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதனால் இலங்கை அணி 19.1 ஓவரில் 77 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிக பட்சமாக குசல் மெண்டீஸ் 19 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அன்ரிச் நோர்ட்ஜே 4 விக்கெட்டும் ரபாடா, மகாராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- 19-ந் தேதி கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
- லுங்கி நிகிடி மற்றும் அன்ரிச் நோர்ட்ஜே நீண்ட நாட்கள் கழித்து இடம் பெற்றுள்ளனர்.
9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. 19-ந் தேதி கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த தொடருக்கான அணிகளை ஒவ்வொரு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அறிவிக்கப்பட்டது.
அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர்களான லுங்கி நிகிடி மற்றும் அன்ரிச் நோர்ட்ஜே நீண்ட நாட்கள் கழித்து இடம் பெற்றுள்ளனர்.
தென் ஆப்பிரிக்க அணி விவரம் பின்வருமாறு:-
பவுமா (கேப்டன்), டோனி டி சார்சி, மார்கோ ஜான்சன், கிளாசென், கேஷவ் மகராஜ், மார்க்ரம், மில்லர், வியான் முல்டர், லுங்கி நிகிடி, அன்ரிச் நோர்ட்ஜே, ரபடா, ரையன் ரிக்கெல்டான், ஷம்சி, ஸ்டப்ஸ் மற்றும் ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன்.
- சாம்பியன்ஸ் தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
- இந்தத் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை பவுமா வழிநடத்துகிறார்.
கேப் டவுன்:
8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் அடுத்த மாதம் 21-ம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியுடன் சாம்பியன்ஸ் டிராபி தொடரை தென் ஆப்பிரிக்க அணி தொடங்குகிறது. தற்போதைய தென் ஆப்பிரிக்க அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களும், எதிர்கால நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளனர்.
தென் ஆப்பிரிக்க அணியை பவுமா வழிநடத்துகிறார். இதில் இந்தியாவில் நடந்த ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில பங்கேற்ற 10 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர், இந்த அணியில் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் போன்றோர் இடம் பெற்றிருந்தனர். டோனியர் டி சோர்சி மற்றும் ரியான் ரிக்கெல்டன் போன்ற புதுமுகங்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த வீரர்கள் தென் ஆப்ரிக்காவின் அணியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ஜே திடீரென விலகியுள்ளார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது விலகல் தென் ஆப்பிரிக்க அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 333 ரன்களை குவித்தது.
- தென் ஆப்பிரிக்காவின் நோர்ஜே 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
செஸ்டர் லீ ஸ்ட்ரீட்:
தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் குவித்தது. வான் டெர் டுசன் சிறப்பாக ஆடி சதமடித்து 133 ரன்னில் அவுட்டானார். மார்கிரம் 77 ரன்னிலும், ஜேன்மன் மலான் 57 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, 334 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜேசன் ராய், பேர்ஸ்டோ சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தது. ராய் 43 ரன்னில் வெளியேறினார்.
பேர்ஸ்டோவ் அரை சதமடித்து 63 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஜோ ரூட் பொறுப்புடன் ஆடினார். அவருக்கு மற்ற வீரர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
முதலில் நிதானமாக ஆடிய ஜோ ரூட் அரை சதமடித்தார். அதன்பின் அதிரடியாக ஆடினார். அவர் 86 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், இங்கிலாந்து 46.5 ஓவரில் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ஆன்ரிச் நோர்ஜே 4 விக்கெட்டும், ஷம்சி, மார்கிரம் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது வான் டெர் டுசனுக்கு அளிக்கப்பட்டது.
தென்ஆப்பிரிக்கா அணியில் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜ் இடம் பிடித்திருந்தார். இலங்கைக்கு எதிரான தொடரின்போது இவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இருந்தாலும் உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன் காயம் சரியாகிவிடும் என்று நினைத்த தென்ஆப்பிரிக்கா, அவரது பெயரை 15 பேர் கொண்ட பட்டியலில் சேர்த்தது.
இந்நிலையில் அன்ரிச் நோர்ட்ஜ்-யின் காயம் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு குணமடையவில்லை. இதனால் கிறிஸ் மோரிஸ் உலகக்கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ளார். கிறிஸ் மோரிஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

டெத் ஓவரில் சிறப்பாக பந்து வீசும் திறமைப் படைத்த கிறிஸ் மோரிஸ் சிறப்பாக பேட்டிங்கும் செய்வார். உலகக்கோப்பைக்கான 10 அணிகளும் இந்த மாதம் 23-ந்தேதிக்குள் தங்களது 15 பேர் கொண்ட இறுதிப் பட்டியலை உறுதி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு மாற்று வீரரை இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தேர்வு செய்யாமல் இருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யூ கெல்லியை தேர்வு செய்துள்ளது. இவர் ஆஸ்திரேலிய சர்வதேச அணிக்காக விளையாடியது கிடையாது. பிக் பாஷ் தொடரில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிக்காக விளையாடியவர்.






