என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
வான் டெர் டுசன், நோர்ஜே அபாரம் - 62 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 333 ரன்களை குவித்தது.
- தென் ஆப்பிரிக்காவின் நோர்ஜே 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
செஸ்டர் லீ ஸ்ட்ரீட்:
தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் குவித்தது. வான் டெர் டுசன் சிறப்பாக ஆடி சதமடித்து 133 ரன்னில் அவுட்டானார். மார்கிரம் 77 ரன்னிலும், ஜேன்மன் மலான் 57 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, 334 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜேசன் ராய், பேர்ஸ்டோ சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தது. ராய் 43 ரன்னில் வெளியேறினார்.
பேர்ஸ்டோவ் அரை சதமடித்து 63 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஜோ ரூட் பொறுப்புடன் ஆடினார். அவருக்கு மற்ற வீரர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
முதலில் நிதானமாக ஆடிய ஜோ ரூட் அரை சதமடித்தார். அதன்பின் அதிரடியாக ஆடினார். அவர் 86 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், இங்கிலாந்து 46.5 ஓவரில் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ஆன்ரிச் நோர்ஜே 4 விக்கெட்டும், ஷம்சி, மார்கிரம் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது வான் டெர் டுசனுக்கு அளிக்கப்பட்டது.